Singers : T. M. Soundarajan and Chorus

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Male : Naadu enbathu naangal kadanthu paadupattadhappa
Paadupattavar vaazhavum
Oru veedum illaiyappa
Chorus : Naadu enbathu naangal kadanthu paadupattadhappa
Paadupattavar vaazhavum
Oru veedum illaiyappa

Male : Sathiya thathuvam ethanai
Sonnadhu bharatha boomiyappa
Sathiya thathuvam ethanai
Sonnadhu bharatha boomiyappa
Samadharmam enbadhu varuvadharkku
Vazhiyum illaiyappa

Male : Naadu enbathu naangal kadanthu paadupattadhappa
Paadupattavar vaazhavum
Oru veedum illaiyappa

Male : Paadhai irukku padukka naam
Paippu thanniyai kudikka
Chorus : Paadhai irukku padukka naam
Paippu thanniyai kudikka
Male : Kaigal irukku uzhaikka
Edhir kaalam irukku pizhaikka

Male : Pasikku koduthu padikka
Koduthu valarthuvittomae
Avan panathai nambi
Gunathai izhandhu uravai vittanae
Ada uravai vittanae

Chorus : {Ada raamaiyaa somaiyaa
Krishnaiyaa kannaiyaa
Kadhaiyai kelungaiyaa
Nalla samayam kidaikkum
Thiruppi adicha
Pizhaithu kollungaiyaa} (2)

Male : Naadu enbathu naangal kadanthu paadupattadhappa
Paadupattavar vaazhavum
Oru veedum illaiyappa

Male : Ezhai manasu neruppu adhu
Eriyum niramum sivappu
Chorus : Ezhai manasu neruppu adhu
Eriyum niramum sivappu
Male : Valarndhu vittadhu veruppu
Adharkku naangal illai poruppu

Male : Makkal panathai vettaiyaadum
Thalaivanum undu
Ingae manivi panathil
Attam podum purushanum undu

Chorus : Ada raamaiyaa somaiyaa
Krishnaiyaa kannaiyaa
Kadhaiyai kelungaiyaa
Nalla samayam kidaikkum
Thiruppi adicha
Pizhaithu kollungaiyaa

Male : Maadi muludhum kaasu
Avan manadhil mattravar dhoosu
Chorus : Maadi muludhum kaasu
Avan manadhil mattravar dhoosu
Male : Kadantha naalai marandhu
Thalai kanathu vittadhai pesu

Male : Aandi kooda aalai
Pidithu arasanavadhu undu
Avan arasanaagi nandri kettaal
Adimai aavathu undu

Chorus : Ada raamaiyaa somaiyaa
Krishnaiyaa kannaiyaa
Kadhaiyai kelungaiyaa
Nalla samayam kidaikkum
Thiruppi adicha
Pizhaithu kollungaiyaa

Male : Naadu enbathu naangal kadanthu paadupattadhappa
Paadupattavar vaazhavum
Oru veedum illaiyappa

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நாடு என்பது நாங்கள் கண்டது பாடுபட்டதப்பா
பாடுபட்டவர் வாழவும் ஒரு வீடும் இல்லையப்பா
குழு : நாடு என்பது நாங்கள் கண்டது பாடுபட்டதப்பா
பாடுபட்டவர் வாழவும் ஒரு வீடும் இல்லையப்பா

ஆண் : சத்திய தத்துவம் எத்தனை
சொன்னது பாரத பூமியப்பா
சத்திய தத்துவம் எத்தனை
சொன்னது பாரத பூமியப்பா
சமதர்மம் என்பது வருவதற்கு
வழியும் இல்லையப்பா

ஆண் : நாடு என்பது நாங்கள் கண்டது பாடுபட்டதப்பா
பாடுபட்டவர் வாழவும் ஒரு வீடும் இல்லையப்பா

ஆண் : பாதை இருக்கு படுக்க நாம்
பைப்புத் தண்ணியைக் குடிக்க
குழு : பாதை இருக்கு படுக்க நாம்
பைப்புத் தண்ணியைக் குடிக்க
ஆண் : கைகள் இருக்கு உழைக்க
எதிர் காலம் இருக்கு பிழைக்க

ஆண் : பசிக்குக் கொடுத்து படிக்கக்
கொடுத்து வளர்த்துவிட்டோமே
அவன் பணத்தை நம்பி
குணத்தை இழந்து உறவை விட்டானே
அட உறவை விட்டானே

குழு : {அட ராமய்யா சோமையா
கிருஷ்ணய்யா கண்ணைய்யா
கதையைக் கேளுங்கய்யா
நல்ல சமயம் கிடைக்கும்
திருப்பி அடிச்சுப்
பிழைத்துக் கொள்ளுங்கய்யா} (2)

ஆண் : நாடு என்பது நாங்கள் கண்டது பாடுபட்டதப்பா
பாடுபட்டவர் வாழவும் ஒரு வீடும் இல்லையப்பா

ஆண் : ஏழை மனசு நெருப்பு அது
எரியும் நிறமும் சிவப்பு
குழு : ஏழை மனசு நெருப்பு அது
எரியும் நிறமும் சிவப்பு
ஆண் : வளர்ந்து விட்டது வெறுப்பு
அதற்கு நாங்கள் இல்லை பொறுப்பு

ஆண் : மக்கள் பணத்தை வேட்டையாடும்
தலைவனும் உண்டு
இங்கே மனைவி பணத்தில்
ஆட்டம் போடும் புருஷனும் உண்டு

குழு : அட ராமய்யா சோமையா
கிருஷ்ணய்யா கண்ணைய்யா
கதையைக் கேளுங்கய்யா
நல்ல சமயம் கிடைக்கும்
திருப்பி அடிச்சுப்
பிழைத்துக் கொள்ளுங்கய்யா

ஆண் : நாடு என்பது நாங்கள் கண்டது பாடுபட்டதப்பா
பாடுபட்டவர் வாழவும் ஒரு வீடும் இல்லையப்பா

ஆண் : மாடி முழுதும் காசு அவன்
மனதில் மற்றவர் தூசு
குழு : மாடி முழுதும் காசு அவன்
மனதில் மற்றவர் தூசு
ஆண் : கடந்த நாளை மறந்து தலை
கனத்து விட்டதைப் பேசு

ஆண் : ஆண்டி கூட ஆளைப்
பிடித்து அரசனாவதுண்டு
அவன் அரசனாகி நன்றி கெட்டால்
அடிமையாவதுண்டு

குழு : அட ராமய்யா சோமையா
கிருஷ்ணய்யா கண்ணைய்யா
கதையைக் கேளுங்கய்யா
நல்ல சமயம் கிடைக்கும்
திருப்பி அடிச்சுப்
பிழைத்துக் கொள்ளுங்கய்யா

ஆண் : நாடு என்பது நாங்கள் கண்டது பாடுபட்டதப்பா
பாடுபட்டவர் வாழவும் ஒரு வீடும் இல்லையப்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here