Singer : S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Female : Naadu naadu idhu nam naadu
Endrum naadu naadu adhan nalam naadu
Paadu paadu adhan pugazh paadu endru
Paadi aada vantha indru engengum paravasam

Female : Naadu naadu idhu nam naadu….

Female : Yaavarkkum needhi ondruthaanaena solvom
Yaaridaththum pedhamindri vaazhnthida seivom
Yaar koduththum yaar edukka thevaiyumillai
Illai ennum naalirukka povathumillai

Female : Paadupatta yaezhai makkal vaazhnthirukkattum
Paathaiyengum meadu pallam seerthiruththattum
Kaadu vetti kai valika yaar uzhaiththathu
Thaedi vaiththa kodi selvam yaar koduththathu

Female : Paadu paadu adhan pugazh paadu endru
Paadi aada vantha indru engengum paravasam….

Female : Ennaalum inba thirunaal idhaya oonjalilae
Sugangal palavum valarnthu nirainthu
Asainthu aadi vara naan anbendru paadi vara
Paadu paadu adhan pugazh paadu endru
Paadi aada vantha indru engengum paravasam….

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : நாடு நாடு இது நம் நாடு
என்றும் நாடு நாடு அதன் நலம் நாடு
பாடு பாடு அதன் புகழ் பாடு என்று
பாடி ஆட வந்த இன்று எங்கெங்கும் பரவசம்

பெண் : நாடு நாடு இது நம் நாடு…..

பெண் : யாவர்க்கும் நீதி ஒன்றுதானென சொல்வோம்
யாரிடத்தும் பேதமின்றி வாழ்ந்திடச் செய்வோம்
யார் கொடுத்தும் யார் எடுக்க தேவையுமில்லை
இல்லை என்னும் நாளிருக்க போவதுமில்லை

பெண் : பாடுபட்ட ஏழை மக்கள் வாழ்ந்திருக்கட்டும்
பாதையெங்கும் மேடு பள்ளம் சீர்த்திருத்தட்டும்
காடு வெட்டி கை வலிக்க யார் உழைத்தது
தேடி வைத்த கோடி செல்வம் யார் கொடுத்தது

பெண் : பாடு பாடு அதன் புகழ் பாடு என்று
பாடி ஆட வந்த இன்று எங்கெங்கும் பரவசம்…..

பெண் : எந்நாளும் இன்பத் திருநாள் இதய ஊஞ்சலிலே
சுகங்கள் பலவும் வளர்ந்து நிறைந்து
அசைந்து ஆடி வர நான் அன்பென்று பாடி வர
பாடு பாடு அதன் புகழ் பாடு என்று
பாடி ஆட வந்த இன்று எங்கெங்கும் பரவசம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here