Singer : Seerkazhi Govindarajan

Music by : R. Govarthanam

Lyrics by : Kannadasan

Male : Naalai pozhuthu undhan
Nalla pozhuthaagumendru
Nambikkai kolvaayada iraivan
Nambikkai tharuvaanada aha aha

Male : Naalai pozhuthu undhan
Nalla pozhuthaagumendru
Nambikkai kolvaayada iraivan
Nambikkai tharuvaanada

Male : Pasi endru vandhavarkku
Pusi endru thanthavarai
Paramanum panivaanada kanindhu
Pakkatthil varuvaanada

Male : Pasi endru vandhavarkku
Pusi endru thanthavarai
Paramanum panivaanada kanindhu
Pakkatthil varuvaanada

Male : Aanendrum pennendrum
Aandavan seidhu vaittha
Jaadhiyum irrenddaeyada thalaivan
Needhiyum ondraeyada

Male : Naalai pozhuthu undhan
Nalla pozhuthaagumendru
Nambikkai kolvaayada iraivan
Nambikkai tharuvaanada aha aha

Male : Poatti poaraamaigalum
Poi soodhu soozhchigalum
Eettiyin munai poalada adhanai
Yeidhavan madivaanada aha aha..

Male : Poatti poaraamaigalum
Poi soodhu soozhchigalum
Eettiyin munai poalada adhanai
Yeidhavan madivaanada

Male : Satthiya Soadhanaiyai
Sagitthu kondae irrundhaal
Vettriyai kaanbaaiyada adhuvae
Veadhatthin mudivaamada

Male : Naalai pozhuthu undhan
Nalla pozhuthaagumendru
Nambikkai kolvaayada iraivan
Nambikkai tharuvaanada aha aha

Male : Iraivan nambikkai tharuvaanada
Iraivan nambikkai tharuvaanada

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நாளைப் பொழுது உந்தன்
நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா..ஆஆ…

ஆண் : நாளைப் பொழுது உந்தன்
நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா..ஆஆ…

ஆண் : பசி என்று வந்தவர்க்குப்
புசி என்று தந்தவரைப்
பரமனும் பணிவானடா கனிந்து
பக்கத்தில் வருவானடா

ஆண் : பசி என்று வந்தவர்க்குப்
புசி என்று தந்தவரைப்
பரமனும் பணிவானடா கனிந்து
பக்கத்தில் வருவானடா

ஆண் : ஆணென்றும் பெண்ணென்றும்
ஆண்டவன் செய்து வைத்த
ஜாதியும் இரண்டேயடா தலைவன்
நீதியும் ஒன்றேயடா……!

ஆண் : நாளைப் பொழுது உந்தன்
நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா..ஆஆ…

ஆண் : போட்டி பொறாமைகளும்
பொய் சூது சூழ்ச்சிகளும்
ஈட்டியின் முனை போலடா அதனை
எய்தவன் மடிவானடா

ஆண் : போட்டி பொறாமைகளும்
பொய் சூது சூழ்ச்சிகளும்
ஈட்டியின் முனை போலடா அதனை
எய்தவன் மடிவானடா

ஆண் : சத்திய சோதனையை
சகித்துக் கொண்டே இருந்தால்
வெற்றியைக் காண்பாயடா அதுவே
வேதத்தின் முடிவாமடா……..!

ஆண் : நாளைப் பொழுது உந்தன்
நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா..ஆஆ…

ஆண் : இறைவன் நம்பிக்கை தருவானடா
இறைவன் நம்பிக்கை தருவானடா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here