Singer : T. M. Soundarajan

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : Kannadasan

Male : Naalvarin kaluthilae
Naanitta maalaiyaal
Naalvaren thunaiviyanaar
Naduvilae nirpavar
Yaarendra podhilum
Ezhai en annaiandro

Male : Pillaiyai sodhikka
Manaivi pol maarinaal
Penmaikku muraimaiyaamoo
Ammaiyae deivamae
Annaiyae sattru nee
Appuram nagaralaamo
Selvamae vaazhkendru
Annai un kaigalaal
Ennai nee vaazhthalaamo..
Ha..aaaa…aa..haaa.aaa..aaa..

Male : Kannukku oruvaraai
Kaatchi thandhaalum neer
Pen makkal naalvarandro
Ammaiyaam paarvathi
Pillaikku parisaaga
Alithavar neeveerandro..00

Male : Penmaiyin karppodum
Pathini panpodum
Pirandhadhae unmaiyaanaal

Male : Penmaiyin karppodum
Pathini panpodum
Pirandhadhae unmaiyaanaal
Unmaiyaam vadivathai
Kanavanin edhirilae
Ulagukku kaattuveeroo…oooo
Haa..aaa…haa..aaa..haa..aa….

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நால்வரின் கழுத்திலே
நானிட்ட மாலையால்
நால்வரென் துணைவியானார்
நடுவிலே நிற்பவர் யாரென்ற போதிலும்
ஏழையென் அன்னையன்றோ…

ஆண் : பிள்ளையைச் சோதிக்க
மனைவிபோல் மாறினால்
பெண்மைக்கு முறைமையாமோ
அம்மையே தெய்வமே அன்னையே சற்று நீ
அப்புறம் நகரலாமோ
செல்வமே வாழ்கென்று
அன்னையுன் கைகளால்
என்னை நீ வாழ்த்தலாமோ…
ஹா..ஆஅ..ஹா…ஆஅ….ஹா..ஆஅ..

ஆண் : கண்ணுக்கு ஒருவராய்க்
காட்சி தந்தாலும் நீர்
பெண் மக்கள் நால்வரன்றோ
அம்மையாம் பார்வதி
பிள்ளைக்குப் பரிசாக
அளித்தவர் நீவிரன்றோ..ஹோ

ஆண் : பெண்மையின் கற்போடும்
பத்தினிப் பண்போடும்
பிறந்ததே உண்மையானால்

ஆண் : பெண்மையின் கற்போடும்
பத்தினிப் பண்போடும்
பிறந்ததே உண்மையானால்
உண்மையாம் வடிவத்தை
கணவனின் எதிரிலே
உலகுக்குக் காட்டுவீரோ….ஹோ
ஹா..ஆஅ..ஹா…ஆஅ….ஹா..ஆஅ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here