Singer : K. S. Chithra

Music by : M. S. Vishwanathan

Female : Naan aada vandhen
En kaal irandil katti veitha salangai illai
Naan paada vanthen
En paattukku enna raagaminnu vilangavillai

Female : Manasukkullae nerunji mullu
Edutheriya ingu neram illai
Manasukkullae nerunji mullu
Edutheriya ingu neram illai

Female : Naan aada vandhen
En kaal irandil katti veitha salangai illai

Female : Andha aagasa pandhalilae malligapoo
Adhai kondaanthu maalai kattum en nenappu
Andha aagasa pandhalilae malligapoo
Adhai kondaanthu maalai kattum en nenappu

Female : Ippa ennaachu thappu endraachu
Ippa kaagitha poovila vaasanai kandu konden
Ingae javvadhu vaasam selladhu
Paavam sandhana maalaiyaisethula veesi vitten

Female : Naan aada vandhen
En kaal irandil katti veitha salangai illai

Female : Nenjil kolladha aasaigalai kondu vandhen
Adhu selladha kaasunnu naan kondu konden
Nenjil kolladha aasaigalai kondu vandhen
Adhu selladha kaasunnu naan kondu konden

Female : Indha yemattram nenjil thee moottum
Maangal maamisam thingindra kaalamum vandhadhamma
Vaazhkai porattam thunbha thaerottam
Indru atchaya paathiram pichaikku vandhadhamma

Female : Naan aada vandhen
En kaal irandil katti veitha salangai illai
Naan paada vanthen
En paattukku enna raagaminnu vilangavillai

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்

பெண் : நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில்
கட்டி வைத்த சலங்கை இல்லை
நான் பாட வந்தேன் என் பாட்டுக்கு
என்ன ராகமின்னு விளங்கவில்லை

பெண் : மனசுக்குள்ளே நெருஞ்சி முள்ளு
எடுத்தெறிய இங்கு நேரமில்லை
மனசுக்குள்ளே நெருஞ்சி முள்ளு
எடுத்தெறிய இங்கு நேரமில்லை

பெண் : நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில்
கட்டி வைத்த சலங்கை இல்லை

பெண் : அந்த ஆகாச பந்தலிலே மல்லிகைப்பூ
அதை கொண்டாந்து மாலைக் கட்டும் என் நினைப்பு
அந்த ஆகாச பந்தலிலே மல்லிகைப்பூ
அதை கொண்டாந்து மாலைக் கட்டும் என் நினைப்பு

பெண் : இப்ப என்னாச்சு தப்பு என்றாச்சு
இப்ப காகிதப் பூவில வாசனை கண்டு கொண்டேன்
இங்கே ஜவ்வாது வாசம் செல்லாது
பாவம் சந்தன மாலையை சேத்துல வீசிவிட்டேன்

பெண் : நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில்
கட்டி வைத்த சலங்கை இல்லை

பெண் : நெஞ்சில் கொள்ளாத ஆசைகளை கொண்டு வந்தேன்
அது செல்லாத காசுன்னு நான் கண்டு கொண்டேன்
நெஞ்சில் கொள்ளாத ஆசைகளை கொண்டு வந்தேன்
அது செல்லாத காசுன்னு நான் கண்டு கொண்டேன்

பெண் : இந்த ஏமாற்றம் நெஞ்சில் தீ மூட்டும்
மான்கள் மாமிசம் தின்கிற காலமும் வந்ததம்மா
வாழ்க்கை போராட்டம் துன்ப தேரோட்டம்
இன்று அட்சய பாத்திரம் பிச்சைக்கு வந்ததம்மா

பெண் : நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில்
கட்டி வைத்த சலங்கை இல்லை
நான் பாட வந்தேன் என் பாட்டுக்கு
என்ன ராகமின்னு விளங்கவில்லை

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here