Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male : Naan alavaodu rasippavan
Mm mm mm
Edhaiyum alavindri koduppavan
Anbin azhagodu thazhuvi
Uravodu pazhagi
Uyiraaga ninaippavan

Male : Naan alavaodu rasippavan
Mm mm mm
Edhaiyum alavindri koduppavan
Anbin azhagodu thazhuvi
Uravodu pazhagi
Uyiraaga ninaippavan

Female : Madhuvodu vandhu idhazh thaedi
Idhamodu thandhu inaiyaagi
Madhuvodu vandhu idhazh thaedi
Idhamodu thandhu inaiyaagi
Pirindhaalum ullam piriyaamal vaazha
Yaar solli thandhadho

Female : Naan unakkaaga pirandhaval
Undhan nizhal polae thodarndhaval
Unnai oru podhu thazhuvi maru podhu urugi
Thaniyaaga thudippaval

Male : Kannam senthaamarai
Sindhum mutham senthaen mazhai
Kangal inba kadal
Kural thaam konjum pullaanguzhal
Mangai ponnoviyam
Pesum mazhalai solloviyam

Female : Kanivaana nenjil uruvaana kavidhai
Ennendru sollavo

Male : Naan alavaodu rasippavan
Mm mm mm
Edhaiyum alavindri koduppavan
Anbin azhagodu thazhuvi
Uravodu pazhagi
Uyiraaga ninaippavan

Female : Thottu theeraadhadho
Kaigal pattum aaraadhadho
Vittu chellaadhadho
Ilamai vaegam pollaadhadho
Kattu padaadhadho
Ullam kaaval illaadhadho

Male : Nizhalodu vandhu kulir sera innum
Naal paarppadhennavo

Female : Naan unakkaaga pirandhaval
Undhan nizhal polae thodarndhaval
Unnai oru podhu thazhuvi maru podhu urugi
Thaniyaaga thudippaval

Male : Mullai sendaagavae
Unnai mella pandhaadavo
Alli thandhaagavae
Odiyum idaiyai thottaadavo
Thottil neeyaagavae
Aadum pillai naanaagavo

Female : Enadhendra yaavum unadhaana pinbu
Naan enna solvadho

Male : Naan alavaodu rasippavan
Mm mm mm
Edhaiyum alavindri koduppavan
Anbin azhagodu thazhuvi
Uravodu pazhagi
Uyiraaga ninaippavan

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நான் அளவோடு ரசிப்பவன்
ம்ம் ம்ம் ம்ம்
எதையும் அளவின்றிக் கொடுப்பவன்
அன்பின் அழகோடு தழுவி
உறவோடு பழகி
உயிராக நினைப்பவன்

ஆண் : நான் அளவோடு ரசிப்பவன்
ம்ம் ம்ம் ம்ம்
எதையும் அளவின்றிக் கொடுப்பவன்
அன்பின் அழகோடு தழுவி
உறவோடு பழகி
உயிராக நினைப்பவன்

பெண் : மதுவோடு வந்து இதழ் தேடி
இதமோடு தந்து இணையாகி
மதுவோடு வந்து இதழ் தேடி
இதமோடு தந்து இணையாகி
பிரிந்தாலும் உள்ளம் பிரியாமல் வாழ
யார் சொல்லித் தந்ததோ

பெண் : நான் உனக்காகப் பிறந்தவள்
உந்தன் நிழல் போலே தொடர்ந்தவள்
உன்னை ஒருபோது தழுவி மறுபோது உருகி
தனியாகத் துடிப்பவள்

ஆண் : கன்னம் செந்தாமரை
சிந்தும் முத்தம் செந்தேன் மழை
கண்கள் இன்பக்கடல்
குரல்தான் கொஞ்சும் புல்லாங்குழல்
மங்கை பொன்னோவியம்
பேசும் மழலைச் சொல்லோவியம்

பெண் : கனிவான நெஞ்சில் உருவான கவிதை
என்னென்று சொல்லவோ

ஆண் : நான் அளவோடு ரசிப்பவன்
ம்ம் ம்ம் ம்ம்
எதையும் அளவின்றிக் கொடுப்பவன்
அன்பின் அழகோடு தழுவி
உறவோடு பழகி
உயிராக நினைப்பவன்

பெண் : தொட்டுத் தீராததோ
கைகள் பட்டும் ஆறாததோ
விட்டு செல்லாததோ
இளமை வேகம் பொல்லததோ
கட்டுப் படாததோ
உள்ளம் காவல் இல்லாததோ

ஆண் : நிழலோடு வந்து குளிர் சேர இன்னும்
நாள் பார்ப்பதென்னவோ

பெண் : நான் உனக்காகப் பிறந்தவள்
உந்தன் நிழல் போலே தொடர்ந்தவள்
உன்னை ஒருபோது தழுவி மறுபோது உருகி
தனியாகத் துடிப்பவள்

ஆண் : முல்லைச் செண்டாகவே
உன்னை மெல்லப் பந்தாடவோ
அல்லித் தண்டாகவே
ஒடியும் இடையைத் தொட்டாடவோ
தொட்டில் நீயாகவே
ஆடும் பிள்ளை நானாகவோ

பெண் : எனதென்ற யாவும் உனதான பின்பு
நான் என்ன சொல்வதோ

ஆண் : நான் அளவோடு ரசிப்பவன்
ம்ம் ம்ம் ம்ம்
எதையும் அளவின்றிக் கொடுப்பவன்
அன்பின் அழகோடு தழுவி
உறவோடு பழகி
உயிராக நினைப்பவன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here