Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : V. Kumar
Lyrics by : Aalangudi Somu
Female : Naan ennum aganthai konda
Aan kulaththin munnae pengal thaazhnthavaralla
Chorus : Endrum thaazhnthavaralla
Female : Kaalaththai vellugindra
Pen kulaththin munnae aangal uyarnthavaralla
Chorus : Endrum uyaranthavarallaa
Female : Naan ennum aganthai konda
Aan kulaththin munnae pengal thaazhnthavaralla
Chorus : Endrum thaazhnthavaralla
Female : Kaalaththai vellugindra
Pen kulaththin munnae aangal uyarnthavaralla
Chorus : Endrum uyaranthavarallaa
Female : Pengalellaam Adimaiyalla
Bedhai endraal unmaiyalla
Angal ellaam methaigalalla
Yaen idhu theriyavillai
Female : Naan ennum aganthai konda
Aan kulaththin munnae pengal thaazhnthavaralla
Thaazhnthavaralla endrum thaazhnthavaralla
Female : Aduppoothum pengalukku
Padippetharkku endru
Nammai adhigaaram seithathellaam antha naal
Arivaana pengal azhagaaga indu
Arasatchi seivathu intha naal
Female : Thaaliyendra oru veli kondu namai
Aala ninaippathu veriththanam
Pillai perigindra karuviyaagavae
Pengalai madhippathu madaththanam
Female : Thaaliyendra oru veli kondu namai
Aala ninaippathu veriththanam
Chorus : Veriththanam
Female : Pillai perigindra karuviyaagavae
Pengalai madhippathu madaththanam
Chorus : Madaththanam
Female : Maattruvom intha ulagai
Maarattum aangal mamathai
Chorus : Maarattum aangal mamathai
Male : Pendugalaa roja sendugalaa
Vandukalaa vaazhai thandugalaa
Pendugalaa roja sendugalaa
Vandukalaa vaazhai thandugalaa
Male : Kudumbam endra koyililae
Kudiyirukkum deivangalil
Aangal endrum
Pengal endrum bedhamaa
Aduththavarai madhippathuthaan
Adakkam endra ulaginilae
Adimai endrum urimai endrum vaadhamaa
Male : Pendugalaa roja sendugalaa
Vandukalaa vaazhai thandugalaa
Male : Kanniyendra paruva nadhi
Karai purandodum
Adhu kalyaana medaiyilthaan sangamaagum
Kanniyendra paruva nadhi
Karai purandodum
Adhu kalyaana medaiyilthaan sangamaagum
Male : Annai sinthum karunai mazhai
Kuzhanthaikalaagum…..mm…
Annai sinthum karunai mazhai
Kuzhanthaikalaagum…..
Ingu penmai ellaam
Thaaimaiyilthaan muzhumai kaanum
Ingu penmai ellaam
Thaaimaiyilthaan muzhumai kaanum…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி சுஷீலா
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு
பெண் : நான் என்னும் அகந்தைக் கொண்ட
ஆண் குலத்தின் முன்னே பெண்கள் தாழ்ந்தவரல்ல
குழு : என்றும் தாழ்ந்தவரல்ல
பெண் : காலத்தை வெல்லுகின்ற
பெண் குலத்தின் முன்னே ஆண்கள் உயர்ந்தவரல்ல
குழு : என்றும் உயர்ந்தவரல்ல
பெண் : நான் என்னும் அகந்தைக் கொண்ட
ஆண் குலத்தின் முன்னே பெண்கள் தாழ்ந்தவரல்ல
குழு : என்றும் தாழ்ந்தவரல்ல
பெண் : காலத்தை வெல்லுகின்ற
பெண் குலத்தின் முன்னே ஆண்கள் உயர்ந்தவரல்ல
குழு : என்றும் உயர்ந்தவரல்ல
பெண் : பெண்களெல்லாம் அடிமையல்ல
பேதை என்றால் உண்மையல்ல
ஆண்கள் எல்லாம் மேதைகளல்ல
ஏன் இது தெரியவில்லை…….
பெண் : நான் என்னும் அகந்தைக் கொண்ட
ஆண் குலத்தின் முன்னே பெண்கள்
தாழ்ந்தவரல்ல என்றும் தாழ்ந்தவரல்ல
பெண் : அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பெதற்கு என்று – நம்மை
அதிகாரம் செய்ததெல்லாம் அந்த நாள்
அறிவான பெண்கள் அழகாக இன்று
அரசாட்சி செய்வது இந்த நாள்
பெண் : தாலியென்ற ஒரு வேலி கொண்டு நமை
ஆள நினைப்பது வெறித்தனம்
பிள்ளை பெரிகின்ற கருவியாகவே
பெண்களை மதிப்பது மடத்தனம்
பெண் : தாலியென்ற ஒரு வேலி கொண்டு நமை
ஆள நினைப்பது வெறித்தனம்
குழு : வெறித்தனம்
பெண் : பிள்ளை பெரிகின்ற கருவியாகவே
பெண்களை மதிப்பது மடத்தனம்
குழு : மடத்தனம்
பெண் : மாற்றுவோம் இந்த உலகை
மாறட்டும் ஆண்கள் மமதை……
குழு : மாறட்டும் ஆண்கள் மமதை……
ஆண் : பெண்டுகளா ரோஜாச் செண்டுகளா
வண்டுகளா வாழைத் தண்டுகளா…..
பெண்டுகளா ரோஜாச் செண்டுகளா
வண்டுகளா வாழைத் தண்டுகளா…..
ஆண் : குடும்பம் என்ற கோயிலிலே
குடியிருக்கும் தெய்வங்களில்
ஆண்கள் என்றும்
பெண்கள் என்றும் பேதமா
அடுத்தவரை மதிப்பதுதான்
அடக்கம் என்ற உலகினிலே
அடிமை என்றும் உரிமை என்றும் வாதமா
ஆண் : பெண்டுகளா ரோஜாச் செண்டுகளா
வண்டுகளா வாழைத் தண்டுகளா…..
ஆண் : கன்னியென்ற பருவ நதி
கரை புரண்டோடும்
அது கல்யாண மேடையில்தான் சங்கமமாகும்
கன்னியென்ற பருவ நதி
கரை புரண்டோடும்
அது கல்யாண மேடையில்தான் சங்கமமாகும்
ஆண் : அன்னை சிந்தும் கருணை மழை
குழந்தைகளாகும்….ம்ம்ம்ம்……
அன்னை சிந்தும் கருணை மழை
குழந்தைகளாகும்…
இங்கு பெண்மை எல்லாம்
தாய்மையில் தான் முழுமை காணும்….
இங்கு பெண்மை எல்லாம்
தாய்மையில் தான் முழுமை காணும்….