Singers : K. Kay, Anupama and K. S. Chitra

Music by : Aghosh

Lyrics by : Vairamuthu

Chorus : Jimpaap paa jigujigupaampaa hae hae hae
Jimpaap paa jigujigupaampaa hae hae hae

Female : Naan keezhnaattu cleopatra
Kitta vanthu pazhagu….hoooo…ooo
Moondraavathu ulagaporil
Moottum enathu azhagu…hoooo…ooo

Female : Naan keezhnaattu cleopatra
Kitta vanthu pazhagu….hoooo…ooo
Moondraavathu ulagaporil
Moottum enathu azhagu…hoooo…ooo

Female : Hae….vaanukkum mannukkum
Naan piranthaenae vaa ennai vanthu vanangu

Male : Penn azhagenpathu dheepangal pola
Oru aalai sudum thee pantham alla

Male : Nee keezhnaattu cleopatra
Enbathu unthan ninaivaa…aa….
Moondravathu ulaga porai
Moottum unathu azhagaa…aa….

Male : Mm…poovaipol paampukkum orr azhagundu
Pennae nee poovaa paambaa sol

Female : En poovinil malarsolai undu
En poovukkullum poo naagam undu

Female : Pattu virikkum en kangal
Paalil ooriya vinmeengal
Pattu virikkum en kangal
Paalil ooriya vinmeengal
Paarkka mudinthavar paarungal
Yaen achcham enna

Female : En antharanga aadai vaangi poga
Antha arabu desam varume

Chorus : Jum jum jum jum

Female : En koondhalodu
Vidaikkondu pona mudi
Kodi kodi perumae

Chorus : Jum jum jum jum

Female : Aan ullangal verum kinnangal
Adhil pennai oottrungal
Ennai suttri vanthu oru soodam kaatti
Adhu suththa raththam endru thanneer oottru vaa vaa…aa…

Male : Penn azhagenbathu dheepangal pola
Oru aalai sudum thee pantham alla

Male : Kannai erippathu azhagalla
Kaamam valarpaval pennalla
Kannai erippathu azhagalla
Kaamam valarpaval pennalla
Kaayam seivathu kannalla pennae panne

Male : Adi enna kannazhagu enna pennazhagu
Theeyil vaiththa mezhugu
Adi eeram illai
Oru inbam illai
Adhil saaram pona piraku

Male : Un azhagaalae udal asaivaalae
Avan uyirai killaathae
Naan gentlemanin magan veezhvathillai
Un siththam velaigalil saaivathillai po po…oo….

Female : En azhagenbathu dheepangal pola
Oru aalai sudum thee pantham alla

Chorus : Jimpaap paa jigujigupaampaa hae hae hae
Jimpaap paa jigujigupaampaa hae hae hae
Jimpaap paa jigujigupaampaa hae hae hae
Jimpaap paa jigujigupaampaa hae hae hae

பாடகர்கள் : கே. கே, அனுபாமா மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : அகோஷ்

பாடலாசிரியர் : வைரமுத்து

குழு : ஜிம்பாப் பா ஜிகுஜிகுபாம்பா ஹே ஹே ஹே
ஜிம்பாப் பா ஜிகுஜிகுபாம்பா ஹே ஹே ஹே ஹே

பெண் : நான் கீழ்நாட்டு கிளியோபாட்ரா
கிட்ட வந்து பழகு….ஹீஊ……ஊ….
மூன்றாவது உலகப்போரில்
மூட்டும் எனது அழகு…..ஹீஊ….ஊ…

பெண் : நான் கீழ்நாட்டு கிளியோபாட்ரா
கிட்ட வந்து பழகு…..ஹீஊ….ஊ…
மூன்றாவது உலகப்போரை
மூட்டும் எனது அழகு…..ஹீஊ….ஊ…

பெண் : ஹே….வானுக்கும் மண்ணுக்கும்
நான் பிறந்தேனே வா என்னை வந்து வணங்கு

ஆண் : பெண் அழகென்பது தீபங்கள் போல
ஒரு ஆளைச் சுடும் தீ பந்தம் அல்ல

ஆண் : நீ கீழ்நாட்டு கிளியோபாட்ரா
என்பது உந்தன் நினைவா…ஆ….
மூன்றாவது உலக போரை
மூட்டும் உனது அழகா….ஆ…..

ஆண் : ம்….பூவைபோல் பாம்புக்கும் ஓர் அழகுண்டு
பெண்ணே நீ பூவா பாம்பா சொல்…..

பெண் : என் பூவினில் மலர்ச்சோலை உண்டு
என் பூவுக்குள்ளும் பூ நாகம் உண்டு

பெண் : பட்டு விரிக்கும் என் கண்கள்
பாலில் ஊறிய விண்மீன்கள்…..
பட்டு விரிக்கும் என் கண்கள்
பாலில் ஊறிய விண்மீன்கள்
பார்க்க முடிந்தவர் பாருங்கள்
ஏன் அச்சம் என்ன

பெண் : என் அந்தரங்க ஆடை வாங்கி போக
அந்த அரபு தேசம் வருமே…

குழு : ஜூம் ஜூம் ஜூம் ஜூம்

பெண் : என் கூந்தலோடு
விடைக்கொண்டு போன முடி
கோடி கோடி பெறுமே

குழு : ஜூம் ஜூம் ஜூம் ஜூம்

பெண் : ஆண் உள்ளங்கள் வெறும் கிண்ணங்கள்
அதில் பெண்ணை ஊற்றுங்கள்
என்னை சுற்றி வந்து ஒரு சூடம் காட்டி
அது சுத்த ரத்தம் என்று தண்ணீர் ஊற்று வா வா…ஆ…

ஆண் : பெண் அழகென்பது தீபங்கள் போல
ஒரு ஆளைச் சுடும் தீபந்தம் அல்ல

ஆண் : கண்ணை எரிப்பது அழகல்ல
காமம் வளர்ப்பவள் பெண்ணல்ல
கண்ணை எரிப்பது அழகல்ல
காமம் வளர்ப்பவள் பெண்ணல்ல
காயம் செய்வது கண்ணல்ல பெண்ணே பெண்ணே

ஆண் : அடி என்ன கண்ணழகு என்ன பெண்ணழகு
தீயில் வைத்த மெழுகு
அடி ஈரம் இல்லை
ஒரு இன்பம் இல்லை
அதில் சாரம் போன பிறகு

ஆண் : உன் அழகாலே உடல் அசைவாலே
அவன் உயிரை கிள்ளாதே
நான் ஜென்டில்மேனின் மகன் வீழ்வதில்லை
உன் சித்தம் வேலைகளில் சாய்வதில்லை போ போ….ஓ…

பெண் : என் அழகென்பது தீபங்கள் போல
ஒரு ஆளைச் சுடும் தீபந்தம் அல்ல

குழு : ஜிம்பாப் பா ஜிகுஜிகுபாம்பா ஹே ஹே ஹே
ஜிம்பாப் பா ஜிகுஜிகுபாம்பா ஹே ஹே ஹே ஹே
ஜிம்பாப் பா ஜிகுஜிகுபாம்பா ஹே ஹே ஹே
ஜிம்பாப் பா ஜிகுஜிகுபாம்பா ஹே ஹே ஹே ஹே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here