Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Medaiyittu panthalittu
Moondru mudichittu oor paarkka
En mannavan potta thaali meenaatchi nee kaakka

Female : Naan konda maangalyam
Naal thorum nilaiththirukka
Meen konda kannaalae arul thaayae

Female : Naan konda maangalyam
Naal thorum nilaiththirukka
Meen konda kannaalae arul thaayae
Paandiyan eendredutha painkiliyae enakku
Vendiya varam kodukkum vel vizhiyae

Female : Naal thorum nilaiththirukka
Meen konda kannaalae arul thaayae

Female : Naayagan thanai meetkka namanudan poraadi
Naayagan thanai meetkka namanudan poraadi
Kaaviya pugazh kondaal saaviththiri
Kadhiravan udhikkaamal kattalai pottaalae
Kadhiravan udhikkaamal kattalai pottaalae
Kanavanin uyir kaaththa nalaayini

Female : Thannuyir kaattilum thalaivan thanathu
Innuyir melena ennum
Kulamangaiyar nenjam ovvoru naalum
Mangala poojai pannum

Female : Naan konda maangalyam
Naal thorum nilaiththirukka
Meen konda kannaalae arul thaayae

Female : Nenjinil ennaalum
Kondavan koluvirukka
Nenjinil ennaalum
Kondavan koluvirukka
Manjalil thoiththeduththa thaaliyitthu
Oru manam endraagi thirumananm mudiththorin
Iru manam thanai kaakkum veliyithu

Female : Nettriyil vaiththa kungumam anbin
Vettriyai kaattum chinnam
Koondhalil soodiya malligai sollum
Kulamagal menmai ullam

Female : Naan konda maangalyam
Naal thorum nilaiththirukka
Meen konda kannaalae arul thaayae
Arul thaayae….ae….ae….ae….

பாடகர் : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மேடையிட்டு பந்தலிட்டு
மூன்று முடிச்சிட்டு ஊர் பார்க்க
என் மன்னவன் போட்ட தாலி மீனாட்சி நீ காக்க…..

பெண் : நான் கொண்ட மாங்கல்யம்
நாள் தோறும் நிலைத்திருக்க
மீன் கொண்ட கண்ணாலே அருள் தாயே

பெண் : நான் கொண்ட மாங்கல்யம்
நாள் தோறும் நிலைத்திருக்க
மீன் கொண்ட கண்ணாலே அருள் தாயே
பாண்டியன் ஈன்றெடுத்த பைங்கிளியே எனக்கு
வேண்டிய வரம் கொடுக்கும் வேல் விழியே

பெண் : நாள் தோறும் நிலைத்திருக்க
மீன் கொண்ட கண்ணாலே அருள் தாயே

பெண் : நாயகன் தனை மீட்க நமனுடன் போராடி
நாயகன் தனை மீட்க நமனுடன் போராடி
காவிய புகழ் கொண்டாள் சாவித்திரி
கதிரவன் உதிக்காமல் கட்டளை போட்டாளே
கதிரவன் உதிக்காமல் கட்டளை போட்டாளே
கணவனின் உயிர் காத்த நளாயினி

பெண் : தன்னுயிர் காட்டிலும் தலைவன் தனது
இன்னுயிர் மேலென எண்ணும்
குலமங்கையர் நெஞ்சம் ஒவ்வொரு நாளும்
மங்கல பூஜை பண்ணும்……

பெண் : நான் கொண்ட மாங்கல்யம்
நாள் தோறும் நிலைத்திருக்க
மீன் கொண்ட கண்ணாலே அருள் தாயே

பெண் : நெஞ்சினில் எந்நாளும்
கொண்டவன் கொலுவிருக்க
நெஞ்சினில் எந்நாளும்
கொண்டவன் கொலுவிருக்க
மஞ்சளில் தோய்த்தெடுத்த தாலியிது
ஒரு மனம் என்றாகி திருமணம் முடித்தோரின்
இரு மனம் தனைக் காக்கும் வேலியிது

பெண் : நெற்றியில் வைத்த குங்குமம் அன்பின்
வெற்றியைக் காட்டும் சின்னம்
கூந்தலில் சூடிய மல்லிகை சொல்லும்
குலமகள் மென்மை உள்ளம்…..

பெண் : நான் கொண்ட மாங்கல்யம்
நாள் தோறும் நிலைத்திருக்க
மீன் கொண்ட கண்ணாலே அருள் தாயே
அருள் தாயே…ஏ….ஏ…ஏ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here