Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Naan oru vagaiyinil koduthu vaithaen
Nalla kanavanin nizhal kandu
Adaikalam avan endru
Naan pala kanavugal padaiththu vaithaen

Female : Kann malarntha poongodi kai odintha paingili
Than kuraiyai koorinaal thalaivanidam vendinaal
Penn paarkka vanthavan kann vazhiyae pesinaan
Pon manamae selvamaai poo mudikka enninaan

Female : Naan oru vagaiyinil koduththu vaithaen
Nalla kanavanin nizhal kandu
Adaikalam avan endru
Naan pala kanavugal padaiththu vaithaen

Female : Naalu vagai vedhamim nadhaswara geedhamim
Oosai idum naalilae maalai ittaen tholilae
aasaiyennum dheepamum anbu magal roopamum
Aanazhagan kovilil amarnthathammaa kaavalil

Female : Naan oru vagaiyinil koduththu vaithaen
Koduththu vaithaen

Female : Vaan nilavin saatchiyaai thaen nilavin kaatchigal
Eerudalum paarththathu orr iravil nernthathu
Thaen kudiththu oointhathu poovidhazhgal kaainthathu
Naan padiththa manthiram kodi inbam vaainthathu

Female : Naan oru vagaiyinil koduththu vaithaen
Nalla kanavanin nizhal kandu
Adaikalam avan endru
Naan pala kanavugal padaiththu vaithaen

பாடகர் : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : நான் ஒரு வகையினில் கொடுத்து வைத்தேன்
நல்ல கணவனின் நிழல் கண்டு
அடைக்கலம் அவன் என்று
நான் பல கனவுகள் படைத்து வைத்தேன்

பெண் : கண் மலர்ந்த பூங்கொடி கை ஒடிந்த பைங்கிளி
தன் குறையை கூறினாள் தலைவனிடம் வேண்டினாள்
பெண் பார்க்க வந்தவன் கண் வழியே பேசினான்
பொன் மனமே செல்வமாய் பூ முடிக்க எண்ணினான்

பெண் : நான் ஒரு வகையினில் கொடுத்து வைத்தேன்
நல்ல கணவனின் நிழல் கண்டு
அடைக்கலம் அவன் என்று
நான் பல கனவுகள் படைத்து வைத்தேன்

பெண் : நாலு வகை வேதமும் நாதஸ்வர கீதமும்
ஓசை இடும் நாளிலே மாலை இட்டேன் தோளிலே
ஆசையென்னும் தீபமும் அன்பு மகள் ரூபமும்
ஆணழகன் கோவிலில் அமர்ந்ததம்மா காவலில்

பெண் : நான் ஒரு வகையினில் கொடுத்து வைத்தேன்
கொடுத்து வைத்தேன்

பெண் : வான் நிலவின் சாட்சியாய் தேன் நிலவின் காட்சிகள்
ஈருடலும் பார்த்தது ஓர் இரவில் நேர்ந்தது
தேன் குடித்து ஓய்ந்தது பூவிதழ்கள் காய்ந்தது
நான் படித்த மந்திரம் கோடி இன்பம் வாய்ந்தது

பெண் : நான் ஒரு வகையினில் கொடுத்து வைத்தேன்
நல்ல கணவனின் நிழல் கண்டு
அடைக்கலம் அவன் என்று
நான் பல கனவுகள் படைத்து வைத்தேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here