Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Naan paarththaalum paarthendi
Madras pattanaththai
Paththu kannu podhaathammaa
Patti kaattammaa
Male : Naan paarththaalum paarthendi
Madras pattanaththai
Paththu kannu podhaathammaa
Patti kaattammaa
Male : Theruvengum pranthikadai thiranthirukkaanga
Thinanthorum kannkaatchi nadaththikkiraanga
Theruvengum pranthikadai thiranthirukkaanga
Thinanthorum kannkaatchi nadaththikkiraanga
Male : Paathi kaatti record dance aadikkiraangammaa
Amma amma ammammaa
Paathi kaatti record dance aadikkiraangammaa
Angae panamirunthaa
Kottaiyai kooda vaangikkiraangamma
Ammammaa ammammaa aamaammaa
Male : Naan paarththaalum paarthendi
Madras pattanaththai
Paththu kannu podhaathammaa
Patti kaattammaa
Male : Naan oru naal saavaainu
Oru hotel-kku ponaen
Hotel-kku perae saavaainu vachchirukkaanae
Eppadi irukkumonnu ninaichen
Ullae poe paarththaa
Male : Aambalaiyum pombalaiyum
Kaalmaari thalaimaari aaduraanga adhu dance
You and i dance
Mayakkamaa irukkuthae
Anaikkavo edukkavo
Male : Naan paarththaalum paarthendi
Madras pattanaththai
Paththu kannu podhaathammaa
Patti kaattammaa
Male : Kuppaththilae kaasai alli pottirukkaanga
Kooda oru mudhalaiyaiyum vittirukkaanga
Thundu potta manshanga
Ellaam suththigiraangammaa
Intha naattai aala povathaaga ennikiraangammaa
Male : Naan paarththaalum paarthendi
Madras pattanaththai
Paththu kannu podhaathammaa
Patti kaattammaa
Male : Naan oru periya virunthukku ponaen
Angae oru ponnu vanthaa
Pakkaththilae ponathukappuramthaan
Ponnunnu therinjuthu
Ava nadanthaa enna nadai vaathu nadai
Male : Avalukku udhadae illa polirukku
Kayilaeyae udhattai vachchirunthaa
Puruvamum illai polirukku
Adhaiyum kaiyilaeyae vachirunthaa
Male : Aaradi koondhal araiyadithaan original
Avvalavu alangaaraththaiyum paarthaen
Adhai paarththathum avaloda aadanum paadanum
Ennennavo pannanum pola sabalam thonichchu
Male : One and two and three
Laarampam pam pamparam pam
Pam pamparam pam pampampaam
Laarampam pam pamparam pam
Pam pamparam pam pampampaam
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : நான் பார்த்தாலும் பார்த்தேன்டி
மதராசுப் பட்டணத்தை
பத்துக் கண்ணு போதாதம்மா
பட்டிக் காட்டம்மா………
ஆண் : நான் பார்த்தாலும் பார்த்தேன்டி
மதராசுப் பட்டணத்தை
பத்துக் கண்ணு போதாதம்மா
பட்டிக் காட்டம்மா………
ஆண் : தெருவெங்கும் பிராந்திக்கடை திறந்திருக்காங்க
தினந்தோறும் கண்காட்சி நடத்திக்கிறாங்க
தெருவெங்கும் பிராந்திக்கடை திறந்திருக்காங்க
தினந்தோறும் கண்காட்சி நடத்திக்கிறாங்க
ஆண் : பாதி காட்டி ரெக்கார்டு டான்ஸ் ஆடிக்கிறாங்கம்மா
அம்மா அம்மா அம்மம்மா
பாதி காட்டி ரெக்கார்டு டான்ஸ் ஆடிக்கிறாங்கம்மா
அங்கே பணமிருந்தா………
கோட்டையைக் கூட வாங்கிக்கிறாங்கம்மா
அம்மம்மா அம்மம்மா ஆமாம்மா
ஆண் : நான் பார்த்தாலும் பார்த்தேன்டி
மதராசுப் பட்டணத்தை
பத்துக் கண்ணு போதாதம்மா
பட்டிக் காட்டம்மா………
ஆண் : நான் ஒரு நாள் சாவாய்னு
ஒரு ஹோட்டலுக்குப் போனேன்
ஹோட்டலுக்கு பேரே சாவாய்னு வச்சிருக்கானே
எப்படி இருக்குமோன்னு நினைச்சேன்
உள்ளே போய் பார்த்தா……..
ஆண் : ஆம்பளையும் பொம்பளையும்
கால்மாறித் தலைமாறி ஆடுறாங்க அது டான்ஸ்
யூ அண்ட் ஐ டான்ஸ்
மயக்கமா இருக்குதே
அணைக்கவோ எடுக்கவோ…….
ஆண் : நான் பார்த்தாலும் பார்த்தேன்டி
மதராசுப் பட்டணத்தை
பத்துக் கண்ணு போதாதம்மா
பட்டிக் காட்டம்மா………
ஆண் : குப்பத்திலே காசை அள்ளிப் போட்டிருக்காங்க
கூட ஒரு முதலையையும் விட்டிருக்காங்க
துண்டு போட்ட மனுஷங்க
எல்லாம் சுத்திகிறாங்கம்மா
இந்த நாட்டைக் ஆள போவதாக எண்ணிக்கிறாங்கம்மா
ஆண் : நான் பார்த்தாலும் பார்த்தேன்டி
மதராசுப் பட்டணத்தை
பத்துக் கண்ணு போதாதம்மா
பட்டிக் காட்டம்மா………
ஆண் : நான் ஒரு பெரிய விருந்துக்குப் போனேன்
அங்கே ஒரு பொண்ணு வந்தா
பக்கத்திலே போனதுக்கப்புறம்தான்
பொண்ணுன்னு தெரிஞ்சுது
அவ நடந்தா என்ன நடை வாத்து நடை
ஆண் : அவளுக்கு உதடே இல்ல போலிருக்கு
கையிலேயே உதட்டை வச்சிருந்தா
புருவமும் இல்லை போலிருக்கு
அதையும் கையிலேயே வச்சிருந்தா
ஆண் : ஆறடிக் கூந்தல் அரையடிதான் ஒரிஜினல்
அவ்வளவு அலங்காரத்தையும் பார்த்தேன்
அதைப் பார்த்ததும் அவளோட ஆடணும் பாடணும்
என்னென்னவோ பண்ணனும் போல சபலம் தோணிச்சு
ஆண் : ஒன் அண்ட் டூ அண்ட் த்ரீ
லாரம்பம் பம் பம்பரம் பம்
பம் பம்பரம் பம் பம்பம்பாம்
லாரம்பம் பம் பம்பரம் பம்
பம் பம்பரம் பம் பம்பம்பாம்………