Singer : T. M. Soundararajan

Music by : T.Pugazhenthi

Male : Naan ungalai ketkkindren

Male : Naan ungalai ketkkindren
Naan ungalai ketkkindren
Ezhai urimaiyai kaakka
Varumaiyai neekka
Urimaiyai kaakka varumaiyai neekka
Ullavar sollum bathilenna
Naan ungalai ketkkindren

Male : {Poiyai nambi pizhaippavan veetil
Neiyum paalum manappadha
Kaiyai nambi uzhaippavan veetil
Kanji kalayam uruluvadha} (2)

Male : Azhuvadhai maatri sirippadhai kaatta
Azhuvadhai maatri sirippadhai kaatta
Arindhavar sollum bathilenna

Male : Naan ungalai ketkkindren

Male : {Silandhi valaiyai pinni vaithu
Siru siru poochiyai pidikkuthaiyaa
Palarai sila per paniya vaikka
Panam thaan valaiyaai udhavudhaiyaa} (2)

Male : Pattini theerkkum
Thittangal theetta
Pattini theerkkum thittangal theetta
Padithavar sollum bathilenna

Male : Naan ungalai ketkkindren

Male : Ethanai kaalam indha kelvi
Ezhaikku yeno indha needhi
Buthanum yesuvum uthaman gaandhiyum
Boomiyilae pirandhadhu veen thaana

Male : Puratchiyil thondrum
Pudhumaiyai kaana
Puratchiyil thondrum pudhumaiyai kaana
Purindhavar sollum bathilenna

Male : Naan ungalai ketkkindren
Ezhai urimaiyai kaakka
Varumaiyai neekka
Ullavar sollum bathilenna
Naan ungalai ketkkindren

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : டி. புகழேந்தி

ஆண் : நான் உங்களை கேட்கின்றேன்

ஆண் : நான் உங்களை கேட்கின்றேன்
நான் உங்களை கேட்கின்றேன்
ஏழை உரிமையைக் காக்க
வறுமையை நீக்க
உரிமையைக் காக்க வறுமையை நீக்க
உள்ளவர் சொல்லும் பதிலென்ன
நான் உங்களை கேட்கின்றேன்……

ஆண் : {பொய்யை நம்பிப் பிழைப்பவன் வீட்டில்
நெய்யும் பாலும் மணப்பதா
கையை நம்பி உழைப்பவன் வீட்டில்
கஞ்சி கலயம் உருளுவதா} (2)

ஆண் : அழுவதை மாற்றி சிரிப்பதைக் காட்ட
அழுவதை மாற்றி சிரிப்பதைக் காட்ட
அறிந்தவர் சொல்லும் பதிலென்ன

ஆண் : நான் உங்களை கேட்கின்றேன்

ஆண் : {சிலந்தி வலையைப் பின்னி வைத்து
சிறுசிறு பூச்சியை பிடிக்குதய்யா
பலரை சில பேர் பணிய வைக்க
பணம்தான் வலையாய் உதவுதய்யா} (2)

ஆண் : பட்டினி தீர்க்கும்
திட்டங்கள் தீட்ட
பட்டினி தீர்க்கும் திட்டங்கள் தீட்ட
படித்தவர் சொல்லும் பதிலென்ன

ஆண் : நான் உங்களை கேட்கின்றேன்

ஆண் : எத்தனை காலம் இந்தக் கேள்வி
ஏழைக்கு ஏனோ இந்த நீதி
புத்தனும் ஏசுவும் உத்தமன் காந்தியும்
பூமியிலே பிறந்தது வீண்தானா

ஆண் : புரட்சியில் தோன்றும்
புதுமையைக் காண
புரட்சியில் தோன்றும் புதுமையைக் காண
புரிந்தவர் சொல்லும் பதிலென்ன…

ஆண் : நான் உங்களை கேட்கின்றேன்
ஏழை உரிமையைக் காக்க
வறுமையை நீக்க
உள்ளவர் சொல்லும் பதிலென்ன
நான் உங்களை கேட்கின்றேன்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here