Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Pannirandu maniyalavil
Kulir pani vizhum nalliravil
Kannirandil malarnthida
Inba kanavugal vara vendum

Chorus : Happy happy new year

Female : Naan unnai vaazhththi paadugiraen
Nee vara vendum
Un ninaivil mayangi
Aadugiraen neevara vendum

Female : Naan unnai vaazhththi paadugiraen
Nee vara vendum
Un ninaivil mayangi
Aadugiraen nee vara vendum

Female : Kadantha varudam nadanthathellaam
Pazhaiya yaettilae
Kaninthu varum pudhu varudam
Pudhu paattilae

Female : Naan unnai vaazhththi paadugiraen
Nee vara vendum
Un ninaivil mayangi
Aadugiraen nee vara vendum

Chorus : ……………

Female : Maadha kovil maniyosai
Nammai pottrum arulosai deva neeyum vaa
Urugum mezhugil oliyundu
Oliyin nizhalil uravundu uyirae nerungivaa

Female : Varungaalam ponnaaga vaazhnaalil ondraaga
Edhirpaarkkum neraththil enai thedi vaaraayo
Nenje ennidam ninaivo unnidam
Nenje ennidam ninaivo unnidam

Female : Naan unnai vaazhththi paadugiraen
Nee vara vendum
Un ninaivil mayangi
Aadugiraen nee vara vendum

Female : Idhayam enathu kaanikkai inaivom
Endra nampikkai azhaithaen odivaa
Odum kaalam odattum
Ilamai nindru vaazhattum azhagai thaedi vaa

Female : Unakkaaga pennundu urangaatha kannundu
Thanakkaga vaazhaamal thavikkindra nenjundu
Aasai oonjalil aadum velaiyil
Aasai oonjalil aadum velaiyil

Female : Naan unnai vaazhththi paadugiraen
Nee vara vendum
Un ninaivil mayangi
Aadugiraen nee vara vendum

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : பன்னிரண்டு மணியளவில்
குளிர்ப் பனி விழும் நள்ளிரவில்
கண்ணிரண்டில் மலர்ந்திட
இன்பக் கனவுகள் வர வேண்டும்

குழு : ஹேப்பி ஹேப்பி நியூ இயர்

பெண் : நான் உன்னை வாழ்த்திப்
பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி
ஆடுகிறேன் நீ வர வேண்டும்

பெண் : நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி
ஆடுகிறேன் நீ வர வேண்டும்

பெண் : கடந்த வருடம் நடந்ததெல்லாம்
பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம்
புதிய பாட்டிலே

பெண் : நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி
ஆடுகிறேன் நீ வர வேண்டும்

குழு : …………………………

பெண் : மாதா கோவில் மணியோசை
நம்மைப் போற்றும் அருளோசை தேவா நீயும் வா
உருகும் மெழுகில் ஒளியுண்டு
ஒளியின் நிழலில் உறவுண்டு உயிரே நெருங்கிவா

பெண் : வருங்காலம் பொன்னாக வாழ்நாளில் ஒன்றாக
எதிர்பார்க்கும் நேரத்தில் எனைத் தேடி வாராயோ?
நெஞ்சே என்னிடம் நினைவோ உன்னிடம்
நெஞ்சே என்னிடம் நினைவோ உன்னிடம்

பெண் : நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி
ஆடுகிறேன் நீ வர வேண்டும்

பெண் : இதயம் எனது காணிக்கை இணைவோம்
என்ற நம்பிக்கை அழைத்தேன் ஓடிவா
ஓடும் காலம் ஓடட்டும்
இளமை நின்று வாழட்டும் அழகைத் தேடி வா

பெண் : உனக்காகப் பெண்ணுண்டு உறங்காத கண்ணுண்டு
தனக்காக வாழாமல் தவிக்கின்ற நெஞ்சுண்டு
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்

பெண் : நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி
ஆடுகிறேன் நீ வர வேண்டும்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here