Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Naan vaazha kuruththazhagae
Vaatti vachcha ponnazhagae
En maalai kazhuththazhagae maththiyaana poovazhagae
Thaali nee mudikka thavamaa thavamirunthaen
Ola kodukkaamalae oththa vazhi poneegalae

Female : Kodi thuni uduththu koottaththilae ninneenganaa
Kodi janam mayangum koodalooru kannu padum
Javuli kada adachchu jaadhi sanam vaayadachchu
Thaniyaa poreegalae en aasaiyulla ennavarae
Aiyyaa mannavarae

Female : Sirichcha mugaththazhagum sevantha odhattazhagum
Mayakkum kannazhagum vaaraatha sollazhagum
Ulla en mannavarae uththamarae nallavarae
Ukkaarntha edaththulaeyae usura maranthavarae
Aiyyaa mannavarae

Female : Kunguma pottu vachchaa kurukurunnu paappeegalae
Manjathaan naan kulichchaa naathiriyaa nippeegalae
Malliyappoo naan mudichchaa mayangi muzhippeegalae
Ennaannu pottu vaippaen
Eppadiththaan poo mudippaen neenga pona pinnaalae

Female : Yaezhu ooru pannaiyilum unga polae aalaethu
Intha mugam paakkaamae naaniruntha naalaethu
Thoongaa velakku vachchu thunaikku irunthavarae
Thaengaa odachchathu polae sillaa parantheegalae

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நான் வாழக் குருத்தழகே
வாட்டி வச்ச பொன்னழகே
என் மாலை கழுத்தழகே மத்தியான பூவழகே
தாலி நீ முடிக்க தவமா தவமிருந்தேன்
ஓல கொடுக்காமலே ஒத்த வழி போனீகளே..

பெண் : கோடி துணி உடுத்தி கூட்டத்திலே நின்னீங்கனா
கோடி ஜனம் மயங்கும் கூடலூரு கண்ணு படும்
ஜவுளி கட அடச்சு ஜாதி சனம் வாயடச்சு
தனியா போறீகளே என் ஆசையுள்ள என்னவரே
ஐயா மன்னவரே…..

பெண் : சிரிச்ச முகத்தழகும் செவந்த ஓதட்டழகும்
மயக்கும் கண்ணழகும் வாராத சொல்லழகும்
உள்ள என் மன்னவரே உத்தமரே நல்லவரே
உக்கார்ந்த எடத்துலேயே உசுர மறந்தவரே
ஐயா மன்னவரே…..

பெண் : குங்கும பொட்டு வச்சா குறுகுறுன்னு பாப்பீகளே
மஞ்சதான் நான் குளிச்சா மாதிரியா நிப்பீகளே
மல்லியப்பூ நான் முடிச்சா மயங்கி முழிப்பீகளே
என்னான்னு பொட்டு வைப்பேன்
எப்படித்தான் பூ முடிப்பேன் நீங்க போன பின்னாலே….

பெண் : ஏழு ஊரு பண்ணையிலும் உங்க போலே ஆளேது
இந்த முகம் பாக்காமே நானிருந்த நாளேது
தூங்கா வெளக்கு வச்சு துணைக்கு இருந்தவரே
தேங்கா ஒடச்சது போலே சில்லாப் பறந்தீகளே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here