Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Naanum unthan uravai naadi vantha paravai

Male : Aaa….aa….aa….aa….
Oo….oo….ooh….oo…..
Aa….a….aaa…..
Aa….aaa….aa….aa….a….aa….aa….aa….

Male : Naanum unthan uravai naadi vantha paravai
Naanum unthan uravai naadi vantha paravai
Thedi vantha velai vedan seitha leelai
Thedi vantha velai vedan seitha leelai
Siragugal udainthathadi……kuruthiyil nanainthathadi
Uyirae….ae….uyirae….ae….

Male : …………….

Male : Idhaya kadhavugalai thirakka odi vanthaen
Siraiyil sikki kondaen yaenammaa
Valaiyil vizhuntha unnai metkka odi vanthaen
Vazhiyil maatti kondaen naanammaa

Male : Kadhal nenjangalai kasakki pizhivathilae
Inimai kaanuvathu vidhiyammaa
Anbu ullangalai raththa vellaththilae
Thuvaiththu sidhaippathu sathiyammaa

Male : Udalgalai azhiththida oorukkul palarundu paarammaa
Ullaththai piriththida paarukkul evarundu sollammaa

Male : Naanum unthan uravai naadi vantha paravai

Male : Veenai erigirathu viralgal vegirathu
Naadham meettugiraen vaaraayo
Puyalum valukkirathu kadalum kodhikkirathu
Padagai seluththugiraen vaaraayo

Male : Ennei izhantha pinnum eriya thudikka ennum
Dheepam pola manam alaigirathu
Ennai izhantha pinnum unnai kaakka ennum
Idhaya arangam ingu azhaikkirathu

Male : Vaazhvathu oru murai unakkena vaazhvathe muzhumai enben
Saavathu orumurai unakkena saavathe perumai enbean

Male : Naanum unthan uravai naadi vantha paravai
Thedi vantha velai vedan seitha leelai
Siragugal udainthathadi……kuruthiyil nanainthathadi
Uyirae….ae….uyirae….ae….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை

ஆண் : ஆஅ….ஆ…..ஆ….ஆ…..
ஓ……ஓ……ஓஹ்……ஓ…..
அ…..அ…….ஆஅ…….
ஆ…..ஆஅ….ஆ…..அ…….ஆ….ஆ…..ஆ….ஆ…..

ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
சிறகுகள் உடைந்ததடி…….குருதியில் நனைந்ததடி
உயிரே…….ஏ…….உயிரே……ஏ…..

ஆண் : …………………….

ஆண் : இதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன்
சிறையில் சிக்கிக் கொண்டேன் ஏனம்மா
வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன்
வழியில் மாட்டிக் கொண்டேன் நானம்மா

ஆண் : காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதிலே
இனிமை காணுவது விதியம்மா
அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலே
துவைத்து சிதைப்பது சதியம்மா

ஆண் : உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா
உள்ளத்தை பிரித்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா

ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை

ஆண் : வீணை ஏரிகிறது விரல்கள் வேகிறது
நாதம் மீட்டுகிறேன் வாராயோ
புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது
படகை செலுத்துகிறேன் வாராயோ

ஆண் : எண்ணை இழந்த பின்னும் எரிய துடிக்க எண்ணும்
தீபம் போல மனம் அலைகிறது
என்னை இழந்த பின்னும் உன்னை காக்க எண்ணும்
இதய அரங்கம் இங்கு அழைக்கிறது

ஆண் : வாழ்வது ஒரு முறை உனக்கென வாழ்வதே முழுமை என்பேன்
சாவது ஒரு முறை உனக்கென சாவதே பெருமை என்பேன் ( நானும்)

ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
சிறகுகள் உடைந்ததடி…….குருதியில் நனைந்ததடி
உயிரே…….ஏ…….உயிரே……ஏ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here