Singers : T. M. Soundarajan and Chorus

Music by : Master Venu

Lyrics by : Udumalai Narayanakavi

Male : Uludhundu vaazvaare vaazhvaar
Mattrallaan
Thozhdhundu pin selbavar endrae
Sollum pazhudhattra valluvan
Paindhamil needhi
Vazhi sendru maan baal
Uyarndha naadu namadhu thaai naadu

Male : Naatukku porutham naame nadathum
Koottu pannai vivasayam
Chorus : Naatukku porutham naame nadathum
Koottu pannai vivasayam
Male : Namma naatukku porutham naame nadathum
Koottu pannai vivasayam
Patta paattukku thaguntha aadhayam undu
Pazhaiya kolgaigalai voiduvadhu gyaayam
Chorus : Namma naatukku porutham naame nadathum
Koottu pannai vivasayam

Male : Kattaiyum maettaiyum thottanthodigal
Kazhanigal seivadhu thiramai
Adhanaal kattayam neengum varumai
Kattaiyum maettaiyum thottanthodigal
Kazhanigal seivadhu thiramai
Adhanaal kattayam neengum varumai
Avvai paattiyum paattaal paadi perumai
Paarattiya thozhil muraimai
Idhu parambarai yaai namakkaurimai

Chorus : Namma naatukku porutham naame nadathum
Koottu pannai vivasayam

Male : Othai kudithanam pathu kaaniyil
Uzhudhu paadupada mudiyaathu
Othai kudithanam pathu kaaniyil
Uzhudhu paadupada mudiyaathu
Oru pathu kudithanam nooru kaaniyil
Paangaai uzhuvadhu thaan thodhu

Chorus : Namma naatukku porutham naame nadathum
Koottu pannai vivasayam

Male : Paalaiyakaarar raajathi raaja
Padhavigal parakkindra podhu
Naama patatkkal mitta mirasugal jambam
Kattayaamaaga palikkadhu
Naalukku naala kaalam maarudhu
Nadappadhai nenachaa nadukkamaaguthu
Naalukku naala kaalam maarudhu
Nadappadhai nenachaa nadukkamaaguthu
Aaalai yeikka ini mudiyathu
Makkal aatchiyil suyanalam koodadhu

Chorus : Namma naatukku porutham naame nadathum
Koottu pannai vivasayam

Male : Purushan pondatti pulla kuttingha
Uruppadi kanakkaiyum pottukanum
Sarisamamaaga vigithacharapadi
Saappattu selavukkum vaangikanum

Male : Varumbadi thannai adikamaakanum
Vagi thogaiyaana selavunseiyanum
Varumbadi thannai adikamaakanum
Vagi thogaiyaana selavunseiyanum
Ulagam nammai kandu nadakakvae
Unmaiyodu naam uzhaikkanum
Uyir pizhaikkanum ..

Chorus : Namma naatukku porutham naame nadathum
Koottu pannai vivasayam

பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி

ஆண் : உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந்
தொழுதுண்டு பின் செல்பவர் என்றே
சொல்லும் பழுதற்ற வள்ளுவன் பைந்தமிழ் நீதி
வழி சென்று மாண்பால் உயர்ந்த நாடு நமது தாய்நாடு….

ஆண் : நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும்
கூட்டுப் பண்ணை விவசாயம்
குழு : நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும்
கூட்டுப் பண்ணை விவசாயம்
ஆண் : நம்ம நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும்
கூட்டுப் பண்ணை விவசாயம்
பட்ட பாட்டுக்குத் தகுந்த ஆதாயம் உண்டு
பழைய கொள்கைகளை விடுவது ஞாயம்

குழு : நம்ம நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும்
கூட்டுப் பண்ணை விவசாயம்

ஆண் :  காட்டையும் மேட்டையும் தோட்டந் தொடிகள்
கழனிகள் செய்வது திறமை
அதனாலே கட்டாயம் நீங்கும் வறுமை
காட்டையும் மேட்டையும் தோட்டந் தொடிகள்
கழனிகள் செய்வது திறமை
அதனாலே கட்டாயம் நீங்கும் வறுமை
அவ்வைப் பாட்டியும் பாட்டால் பாடிப் பெருமை
பாராட்டிய தொழில் முறைமை
இது பரம்பரையாய் நமக்குரிமை தமிழ்

குழு : நம்ம நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும்
கூட்டுப் பண்ணை விவசாயம்

ஆண் : ஒத்தைக் குடித்தனம் பத்துக் காணியில்
உழுது பாடுபட முடியாது
ஒத்தைக் குடித்தனம் பத்துக் காணியில்
உழுது பாடுபட முடியாது
ஒரு பத்துக் குடித்தனம் நூறு காணியில்
பாங்காய் உழுவது தான் தோது

குழு : நம்ம நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும்
கூட்டுப் பண்ணை விவசாயம்

ஆண் : பாளையக்காரர் ராஜாதி ராஜா
பதவிகள் பறக்கின்ற போது
நம்ம பட்டாக்கள் மிட்டா மிராசுகள் ஜம்பம்
கட்டாயமாய்ப் பலிக்காது…
நாளுக்கு நாளாக் காலம் மாறுது
நடப்பதை நெனச்சா நடுக்கமாகுது
நாளுக்கு நாளாக் காலம் மாறுது
நடப்பதை நெனச்சா நடுக்கமாகுது
ஆளை ஏய்க்க இனி முடியாது
மக்கள் ஆட்சியில் சுயநலம் கூடாது நம்ம

குழு : நம்ம நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும்
கூட்டுப் பண்ணை விவசாயம்

ஆண் : புருஷன் பெண்டாட்டி புள்ளே குட்டிங்க
உருப்படிக் கணக்கையும் போட்டுக்கணும்
சரிசமமாக விகிதாச்சாரப்படி
சாப்பாட்டு செலவுக்கும் வாங்கிக்கணும்

ஆண் : வரும்படி தன்னை அதிகமாக்கிக்கணும்
வகை தொகையான செலவுஞ் செய்யணும்
வரும்படி தன்னை அதிகமாக்கிக்கணும்
வகை தொகையான செலவுஞ் செய்யணும்
உலகம் நம்மைக் கண்டு நடக்கவே
உண்மையோடு நாம் உழைக்கணும்
உயிர் பிழைக்கணும்

குழு : நம்ம நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும்
கூட்டுப் பண்ணை விவசாயம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here