Singers : P. Jayachandran and B. S. Sasireka

Music by : M. S. Viswanathan

Lyrics by : Jayakanthan

Male : Nadigai paarkkum naadagam
Idhil rasigarellaam paaththiram

Female : Nadigai paarkkum naadagam
Idhil rasigarellaam paaththiram
Mudivillaatha thuyarilum
Suba mudivu kaanum ival manam

Both : Nadigai paarkkum naadagam
Idhil rasigarellaam paaththiram
Rasigarellaam paaththiram

Male : Nallathenbathu theeyathenpathu
Naamaninthidum vedamae
Nallathenbathu theeyathenpathu
Naamaninthidum vedamae

Female : Idhil velvathennadi tholviyennadi
Medaiyil orr vilaiyaadalil
Naam medaiyil orr vilaiyaadalil

Both : Nadigai paarkkum naadagam
Idhil rasigarellaam paaththiram
Rasigarellaam paaththiram

Female : Sirakodintha paravaigal
Urimai poril velvatho
Sirakodintha paravaigal
Urimai poril velvatho
Uravu indri piriviu ondrai
Ullam yaetru kolvatho
Ullam yaetru kolvatho

Female : Nadigai paarkkum naadagam
Idhil rasigarellaam paaththiram
Mudivillaatha thuyarilum
Suba mudivu kaanum ival manam

Male : Nadigai paarkkum naadagam

Male : Kallamenbathum karaigal enbathum
Kadhalin oru paagamae
Female : Vallal pondrival anbu ondraiyae
Vaari vaari vazhanginaal
Vaari vaari vazhanginaal

Female : Veenai meettidum pothilae
Vithi siriththathor paadhaiyil
Veenai meettidum pothilae
Vithi siriththathor paadhaiyil
Naadagam vaazhkkai aavatho
Oru nadigai enna seiguvaal
Nadigai enna seiguvaal

Male : Kuraigal enbana iyalpendrum
Gunamadaivathae anupavam
Iraivan amaththa medaiyil
Thirai vizhaatha naadagam
Thirai vizhaatha naadagam

Both : Nadigai paarkkum naadagam
Idhil rasigarellaam paaththiram
Mudivillaatha thuyarilum
Suba mudivu kaanum ival manam

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : ஜெயகாந்தன்

ஆண் : நடிகை பார்க்கும் நாடகம்
இதில் ரசிகரெல்லாம் பாத்திரம்

பெண் : ஒரு நடிகை பார்க்கும் நாடகம்
இதில் ரசிகரெல்லாம் பாத்திரம்
முடிவில்லாத துயரிலும்
சுப முடிவு காணும் இவள் மனம்

இருவர் : நடிகை பார்க்கும் நாடகம்
இதில் ரசிகரெல்லாம் பாத்திரம்
ரசிகரெல்லாம் பாத்திரம்

ஆண் : நல்லதென்பதும் தீயதென்பதும்
நாமணிந்திடும் வேடமே
நல்லதென்பதும் தீயதென்பதும்
நாமணிந்திடும் வேடமே

பெண் : இதில் வெல்வதென்னடி தோல்வியென்னடி
மேடையில் ஓர் விளையாடலில்
நாம் மேடையில் விளையாடலில்…

இருவர் : நடிகை பார்க்கும் நாடகம்
இதில் ரசிகரெல்லாம் பாத்திரம்
ரசிகரெல்லாம் பாத்திரம்

பெண் : சிறகொடிந்த பறவைகள்
உரிமை போரில் வெல்வதோ
சிறகொடிந்த பறவைகள்
உரிமை போரில் வெல்வதோ
உறவு இன்றி பிரிவு ஒன்றை
உள்ளம் ஏற்றுக் கொள்வதோ…..
உள்ளம் ஏற்றுக் கொள்வதோ…..

ஆண் : நடிகை பார்க்கும் நாடகம்
இதில் ரசிகரெல்லாம் பாத்திரம்
முடிவில்லாத துயரிலும்
சுப முடிவு காணும் இவள் மனம்

ஆண் : நடிகை பார்க்கும் நாடகம்

ஆண் : கள்ளமென்பதும் கறைகள் என்பதும்
காதலின் ஒரு பாகமே
பெண் : வள்ளல் போன்றிவள் அன்பு ஒன்றையே
வாரி வாரி வழங்கினாள்……
வாரி வாரி வழங்கினாள்……

பெண் : வீணை மீட்டிடும் போதிலே
விதி சிரித்ததோர் பாதையில்
வீணை மீட்டிடும் போதிலே
விதி சிரித்ததோர் பாதையில்
நாடகம் வாழ்க்கை ஆவதோ
ஒரு நடிகை என்ன செய்குவாள்
நடிகை என்ன செய்குவாள்

ஆண் : குறைகள் என்பன இயல்பென்றும்
குணமடைவதே அனுபவம்
இறைவன் அமைத்த மேடையில்
திரை விழாத நாடகம்
திரை விழாத நாடகம்…..

இருவர் : நடிகை பார்க்கும் நாடகம்
இதில் ரசிகரெல்லாம் பாத்திரம்
முடிவில்லாத துயரிலும்
சுப முடிவு காணும் இவள் மனம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here