Singer : Kapil Kapilan

Music by : Sam CS

Lyrics by : Karthik Netha

Male : Nagaraatha nodiyodu
Naan vaazhgiren
Iyangaatha sirakodu
Vaan paarkiren..

Male : Yeno yeno kaneero..
Yaarai naan ketpen..?
Veeno veeno ellame..
Yaarai naan noven..?

Male : Vazhve enmel yen vanmam
Yaarin kobam en vaazhkaiyo..?
Kaanum ellam thee endraal enge
Enge en deepamo..?

Male : Nermaiye saabam endraal
Naanum enge poovatho..?
Oor ellam poo poo endraal
Yarin tholil naan saaivatho..?

Male : Vidiyaatha iravodu naan vazhgiren
Puriyaadha ulagodu pooradinen..

Male : Vaanil undu vinmeengal
Enge en vaazhvil..?
Pogum ellam peitheril
Kaneer en poovil..

Male : Naal ondru ellorukkum undu
Endraal naan thedum naal enge..?

Male : Noolil aadum bommai pola
Aadum en vazhvin ver enge..?

Male : Pizhaiye needhi adhuve sedhi endraal
Inge arangal yeno..?
Ini naan ini naan yaaro..?

Male : Vidiyaatha iravodu naan vazhkiren
Puriyaatha ulakodu pooradinen..

Male : Vaanil undu vinmeengal
Enge en vaazhvil..?
Pogum ellam peitheril
Enge en kovil..

பாடகர் : கபில் கபிலன்

இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்.

பாடல் ஆசிரியர்  : கார்த்திக் நேத்தா

ஆண் : நகராத நொடியோடு
நான் வாழ்கிறேன்
இயங்காத சீறகோடு
வான் பார்க்கிறேன்..

ஆண் : ஏனோ ஏனோ கண்ணீரோ..
யாரை நான் கேட்பேன்..?
வீணோ வீணோ எல்லாமே..
யாரை நான் நோவேன்..?

ஆண் : வாழ்வே என்மேல் ஏன் வன்மம்
யாரின் கோபம் என் வாழ்கையோ..?
காணும் எல்லாம் தீ என்றால் எங்கே
எங்கே எங்கே என் தீபமோ..?

ஆண் : நேர்மையே சாபம் என்றால்
நானும் எங்க போவதோ..?
ஊர் எல்லாம் போ போ என்றால்
யாரின் தோளில் நான் சாய்வதோ..?

ஆண் : விடியாத இரவோடு நான் வாழ்கிறேன்
புரியாத உலகோடு போராடினேன்..

ஆண் : வானில் உண்டு விண்மீன்கள்
எங்கே என் வாழ்வில்..?
போகும் எல்லாம் பேய்தேரில்
கண்ணீர் என் பூவில்..

ஆண் : நாள் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
என்றால் நான் தேடும் நாள் எங்கே..?

ஆண் : நூலில் ஆடும் பொம்மை போல
ஆடும் என் வாழ்வின் வேர் எங்கே..?

ஆண் : பிழையே நீதி அதுவே சேதி என்றால்
இங்கே அறங்கள் ஏனோ..?
இனி நான் இனி நான் யாரோ..?

ஆண் : விடியாத இரவோடு நான் வாழ்கிறேன்
விரியாத சீறகொடு வான் பார்க்கிறேன்.

ஆண் : வானில் உண்டு விண்மீன்கள்
எங்கே என் வாழ்வில்..?
போகும் எல்லாம் பொய்த்தேரில்
எங்கே என் கோயில்..?


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here