Singer : K. J. Yesudas

Music by : V. Dakshinamurthy

Lyrics by : Kannadasan

Male : Nalla manam vaazhga
Naadu potra vaazhga
Thaen tamil pol
Vaan mazhai pol
Siranthu endryum vaazhga

Male : Nalla manam vaazhga
Naadu potra vaazhga

Male : Poovuzhagin latchiyangal
Poop pondrae vaadum
Deiva sorkka nichchayamthaan
Thirumanamaai koodum

Male : Poruththamendraal pudhu porutham
Porunthivitta jodi
Poruththamendraal pudhu porutham
Porunthivitta jodi
Naan pulavendraal paadiduvaen
Kavithai oru kodi

Male : Nalla manam vaazhga
Naadu potra vaazhga

Male : Thanmaiyilum menmaiyilum
Thaamaraipol nenjam
Thaaikulaththin ilakkanangal
Thalaiviyidam thanjam
Aalayamaai veeduthanai alangarikka vanthaai
Aalayamaai veeduthanai alangarikka vanthaai

Male : Nee vaazhum nilai unakkaliththaan
Vaazhththugiraen naanae

Male : Nalla manam vaazhga
Naadu potra vaazhga

Male : Manavaazhkkai amaivatharko
Manaivi vaakkavendum
Kulamagalaai kidaippatharkko
Koduththu vaikkavendum

Male : Arumaigalum perumaigalum
Niraivathuthaan inbam
Arumaigalum perumaigalum
Niraivathuthaan inbam
Nee aththanaiyum pettruvittaai
Ananthamaai vaazhga

Male : Nalla manam vaazhga
Naadu potra vaazhga
Thaen tamil pol
Vaan mazhai pol
Siranthu endryum vaazhga

Male : Nalla manam vaazhga
Naadu potra vaazhga

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல்
வான் மழைப் போல்
சிறந்து என்றும் வாழ்க

ஆண் : நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க

ஆண் : பூவுலகின் லட்சியங்கள்
பூப்போன்றே வாடும்
தெய்வ சொர்க்க நிச்சயம்தான்
திருமணமாய் கூடும்

ஆண் : பொருத்தமென்றால் புது பொருத்தம்
பொருந்திவிட்ட ஜோடி
பொருத்தமென்றால் புது பொருத்தம்
பொருந்திவிட்ட ஜோடி
நான் புலவனென்றால் பாடிடுவேன்
கவிதை ஒரு கோடி…….

ஆண் : நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க

ஆண் : தன்மையிலும் மென்மையிலும்
தாமரைபோல் நெஞ்சம்
தாய்க்குலத்தின் இலக்கணங்கள்
தலைவியிடம் தஞ்சம்
ஆலயமாய் வீடுதனை அலங்கரிக்க வந்தாய்
ஆலயமாய் வீடுதனை அலங்கரிக்க வந்தாய்

ஆண் : நீ வாழும் நிலை உனக்களித்தான்
வாழ்த்துகிறேன் நானே……..

ஆண் : நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க

ஆண் : மணவாழ்க்கை அமைவதற்கோ
மனைவி வாய்க்கவேண்டும்
குலமகளாய் கிடைப்பதற்கோ
கொடுத்து வைக்கவேண்டும்

ஆண் : அருமைகளும் பெருமைகளும்
நிறைவதுதான் இன்பம்
அருமைகளும் பெருமைகளும்
நிறைவதுதான் இன்பம்
நீ அத்தனையும் பெற்றுவிட்டாய்
ஆனந்தமாய் வாழ்க……

ஆண் : நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல்
வான் மழைப் போல்
சிறந்து என்றும் வாழ்க

ஆண் : நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here