Singer : Seerkazhi Govindarajan

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Males : Vinnaagi mannaagi kanal punal kaatraagi
Pennaagi ulavukindra periya sakthiyae
Periya sakthiyae
Siru pullaagi poondaagi pala vagai uyiraagi
Ellaamum katharulum ariya sakthiyae
Ariya sakthiyae

Male : Nalla vaaku sonnaal palithu vidum naakudaiyaalae
Arul nokkudaiyaalae
Nagai pookum mugam kaakum karam nangudaiyaalae
Deiva naayagiyaalae selva naayagiyaalae

Male : Aathiyillai andhamillai
Karuvil uruvil vandhathillai
Aathiyillai andhamillai
Karuvil uruvil vandhathillai
Adi edhuvoo mudi edhuvoo
Moovarum devarum kandathillai

Male : Paampaniyum saambhasivan
Paadhiyil maeviya bairaviyae
Penn uruvil kannedhiril
Madimeesai maevidum pooraniyae
Bhadrakaaliyamma neeliamma sooliyamma
Thiru vedhi ulaa thedi varum jothiyamma
Thiru vedhi ulaa thedi varum jothiyamma

Male : Aarathi neer karaitheduthu
Thiru thaal malaradi sethirukka
Maavilakku yettri vaithu
Thiru mugamae parthirukka

Male : Panneerum sandhanamum
Thalai mudhal laal varai saathirukka
Pambaiyudan udukkaigalum
Om sakhthi om ena vazhthirukka

Male : Nava konathil kudi irukkum kulamaari
Thiruverkaatil veetrirukkum mangala maayi
Thiruverkaatil veetrirukkum mangala maayi

Males : ………………………

Male : {Om sakhthi om sakhthi om sakhthi om.
Chorus : Om sakhthi om sakhthi om sakhthi om.}..(3)
Male : Om sakhthi om sakhthi om sakhthi om.
Om sakhthi om sakhthi om sakhthi om.
Om sakhthi om sakhthi om sakhthi om.

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : விண்ணாகி மண்ணாகி கனல் புனல் காற்றாகி
பெண்ணாகி உலவுகின்ற பெரிய சக்தியே
பெரிய சக்தியே
சிறு புல்லாகி பூண்டாகி பல வகை உயிராகி
எல்லாமும் காத்தருளும் அரிய சக்தியே……

ஆண் : நல்ல வாக்கு சொன்னால்
பலித்து விடும் நாக்குடையாளே
அருள் நோக்குடையாளே
நகை பூக்கும் முகம் காக்கும் கரம் நான்குடையாளே
தெய்வ நாயகியாளே செல்வ நாயகியாளே

ஆண் : ஆதியில்லை அந்தமில்லை
கருவில் உருவில் வந்ததில்லை
ஆதியில்லை அந்தமில்லை
கருவில் உருவில் வந்ததில்லை
அடி எதுவோ முடி எதுவோ
மூவரும் தேவரும் கண்டதில்லை

ஆண் : பாம்பணியும் சாம்பசிவன்
பாதியில் மேவிய பைரவியே
பெண்ணுருவில் கண்ணெதிரில்
மடிமிசை மேவிடும் பூரணியே……
பத்ரகாளியம்மா நீலியம்மா சூலியம்மா
திரு வீதிவுலா தேடி வரும் ஜோதியம்மா
திரு வீதிவுலா தேடி வரும் ஜோதியம்மா

ஆண் : ஆரத்தி நீர் கரைத்தெடுத்து
திருத் தாள் மலரடி சேர்த்திருக்க
மாவிளக்கு ஏற்றி வைத்து
திரு முகமே பார்த்திருக்க

ஆண் : பன்னீரும் சந்தனமும்
தலை முதல் கால் வரை சாத்திருக்க
பம்பையுடன் உடுக்கைகளும்
ஓம் சக்தி ஓம் சக்தி என வாழ்த்திருக்க

ஆண் : நவக் கோணத்தில் குடியிருக்கும் குலமாரி
திருவேற்காட்டில் வீற்றிருக்கும் மங்கல மாயி
திருவேற்காட்டில் வீற்றிருக்கும் மங்கல மாயி

ஆண் : {ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
குழு : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்} (3)

ஆண் : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்…….!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here