Singers : Ilayaraja and Mano

Music by : Ilayaraja

Male Chorus : Nalladhor veenai seidhae
Adhai nalam keda
Puzhudhiyil yerivadhundo
Nalladhor veenai seidhae
Adhai nalam keda
Puzhudhiyil yerivadhundo

Male : Solladi siva sakthi
Enai chudar migum arivudan
Padaithu vittaai

Male & Chorus : Solladi siva sakthi
Enai chudar migum arivudan
Padaithu vittaai

Male : Vallamai thaaraaiyoo…oo
Vallamai thaaraaiyoo
Indha maanilam payanura
Vaazhvadharkkae
Vallamai thaaraaiyo
Indha maanilam payanura
Vaazhvadharkkae
Solladi siva sakthi
Nila chumai yena
Vaazhndhida puriguvaiyo

Chorus : Nalladhor veenai seidhae
Adhai nalam keda
Puzhudhiyil yerivadhundo

Male : Thasaiyinai thee choodinum
Siva sakthiyai paadum nal
Agam ketten
Nasaiyaru manam ketten
Nitham navam yena chudar tharum
Uyir ketten
Asaivuru madhi ketten
Ivai arulvadhil unakkedhum
Thadai uladho
Ivai arulvadhil unakkedhum
Thadai uladho

Chorus : Nalladhor veenai seidhae oo…ooo
Adhai nalam keda
Puzhudhiyil yerivadhundo
Nalladhor veenai seidhae oo…ooo
Adhai nalam keda
Puzhudhiyil yerivadhundo

பாடகர்கள் : இளையராஜா மற்றும் மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் குழு : நல்லதோர் வீணைசெய்தே
அதை நலம் கெடப்
புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலம் கெடப்
புழுதியில் எறிவதுண்டோ

ஆண் : சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்

ஆண் மற்றும் குழு : சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்

ஆண் : வல்லமை தாராயோ…ஓ…
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற
வாழ்வதற்கே
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற
வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி
நிலச்சுமையென
வாழ்ந்திடப் புரிகுவையோ

குழு : நல்லதோர் வீணைசெய்தே
அதை நலம் கெடப்
புழுதியில் எறிவதுண்டோ

ஆண் : தசையினைத் தீச்சுடினும்
சிவ சக்தியைப் பாடும் நல்
அகம் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன்
நித்தம் நவம் எனச் சுடர்தரும்
உயிர்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும்
தடையுளதோ
இவை அருள்வதில் உனக்கெதும்
தடையுளதோ

குழு : நல்லதோர் வீணைசெய்தே ….ஓ…ஓஒ
அதை நலம் கெடப்
புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணைசெய்தே ….ஓ…ஓஒ
அதை நலம் கெடப்
புழுதியில் எறிவதுண்டோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here