Singer : Latha

Music by : A. T. Ummer

Lyrics by : Pattukottai Kumaravel

Female : Nallavar sollai naam ketpom
Nalamaai vazha vazhi vaguppom

Female : Nallavar sollai naam ketpom
Nalamaai vazha vazhi vaguppom
Thalaivargal sonna vazhi nadappom
Thaai naattinaiyae vaazha vaippom

Female : Arivae vaazhvin mudhal enbom
Athan thelivae dheia arul enbom
Arivae vaazhvin mudhal enbom
Athan thelivae dheia arul enbom
Bayamae namakku pagai enbom ulla
Thelivae adharkku marunthenpom

Female : Nallavar sollai naam ketpom
Nalamaai vazha vazhi vaguppom

Female : Pasikkum vayittrin kodumaigalai
Naam paartthu vaazha koodaathu
Pasikkum vayittrin kodumaigalai
Naam paartthu vaazha koodaathu
Padhukkum manithan irunthaalae
Angu parikkum manithan thondriduvaan

Female : Nallavar sollai naam ketpom
Nalamaai vazha vazhi vaguppom

Female : Ondraai vaazha pazhagiduvom
Naam nandraai vaazha kattriduvom
Ondraai vaazha pazhagiduvom
Naam nandraai vaazha kattriduvom
Dhinamum neeyum uzhaiththaalae
Anudhinamum neeyum magizhnthidalaam

Female : Nallavar sollai naam ketpom
Nalamaai vazha vazhi vaguppom…..

பாடகி : லதா

இசையமைப்பாளர் : ஏ. டி. உமர்

பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை குமாரவேல்

பெண் : நல்லவர் சொல்லை நாம் கேட்போம்
நலமாய் வாழ வழி வகுப்போம்

பெண் : நல்லவர் சொல்லை நாம் கேட்போம்
நலமாய் வாழ வழி வகுப்போம்
தலைவர்கள் சொன்ன வழி நடப்போம்
தாய் நாட்டினையே வாழ வைப்போம்

பெண் : அறிவே வாழ்வின் முதல் என்போம்
அதன் தெளிவே தெய்வ அருள் என்போம்
அறிவே வாழ்வின் முதல் என்போம்
அதன் தெளிவே தெய்வ அருள் என்போம்
பயமே நமக்கு பகை என்போம் உள்ள
தெளிவே அதற்கு மருந்தென்போம்…

பெண் : நல்லவர் சொல்லை நாம் கேட்போம்
நலமாய் வாழ வழி வகுப்போம்

பெண் : பசிக்கும் வயிற்றின் கொடுமைகளை
நாம் பார்த்து வாழக் கூடாது
பசிக்கும் வயிற்றின் கொடுமைகளை
நாம் பார்த்து வாழக் கூடாது
பதுக்கும் மனிதன் இருந்தாலே அங்கு
பறிக்கும் மனிதன் தோன்றிடுவான்

பெண் : நல்லவர் சொல்லை நாம் கேட்போம்
நலமாய் வாழ வழி வகுப்போம்

பெண் : ஒன்றாய் வாழ பழகிடுவோம்
நாம் நன்றாய் வாழ கற்றிடுவோம்
ஒன்றாய் வாழ பழகிடுவோம்
நாம் நன்றாய் வாழ கற்றிடுவோம்
தினமும் நீயும் உழைத்தாலே
அனுதினமும் நீயும் மகிழ்ந்திடலாம்

பெண் : நல்லவர் சொல்லை நாம் கேட்போம்
நலமாய் வாழ வழி வகுப்போம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here