Singer : T. M. Soundarajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Nallavar vaakku nalvaakku
Adhil sellum vaakku selvaakku
Sonna sollai kaakkum ullam
Adhu deivam vaazhgindra illam…

Male : Nallavar vaakku nalvaakku
Adhil sellum vaakku selvaakku
Sonna sollai kaakkum ullam
Adhu deivam vaazhgindra illam

Male : Kannan koduththa vaakkuruthi andru
Gowravar saenaiyai azhiththathadaa
Annal gandhiyin vaakkuruthi
Nam adimai thalaiyai thagarththathadaa

Male : Kannan koduththa vaakkuruthi andru
Gowravar saenaiyai azhiththathadaa
Annal gandhiyin vaakkuruthi
Nam adimai thalaiyai thagarththathadaa

Male : Makkalin thalaivan lenin andru
Sonna vaakku paliththathada
Madhangalin thalaivar sonnathellaam
Manakkann munnaal nadanthathadaa

Male : Nallavar vaakku nalvaakku
Adhil sellum vaakku selvaakku
Sonna sollai kaakkum ullam
Adhu deivam vaazhgindra illam
Deivam vaazhgindra illam

Male : Nallavarkku edharkku kaiyezhuththu
Avar sollum sollae pon ezhuthu
Theeyavar podum kaiyezhuththum
Nalam seiyyaathenbathu kurai karuththu

Male : Budhan edhanai ezhuthi vaiththaan
Verum thaththubam thaanae solli vaiththaan
Sonnavan sollai nambi vidu
Adhu thozhvi adainthaal kettuvidu
Padhil kettuvidu…

Male : Nallavar vaakku nalvaakku
Adhil sellum vaakku selvaakku
Sonna sollai kaakkum ullam
Adhu deivam vaazhgindra illam
Deivam vaazhgindra illam…
Adhu deivam vaazhgindra illam…

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நல்லவர் வாக்கு நல்வாக்கு
அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு
சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம்
அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்……

ஆண் : நல்லவர் வாக்கு நல்வாக்கு
அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு
சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம்
அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்……

ஆண் : கண்ணன் கொடுத்த வாக்குறுதி அன்று
கௌரவர் சேனையை அழித்ததடா
அண்ணல் காந்தியின் வாக்குறுதி
நம் அடிமை தளையை தகர்த்ததடா

ஆண் : கண்ணன் கொடுத்த வாக்குறுதி அன்று
கௌரவர் சேனையை அழித்ததடா
அண்ணல் காந்தியின் வாக்குறுதி
நம் அடிமை தளையை தகர்த்ததடா

ஆண் : மக்களின் தலைவன் லெலின் அன்று
சொன்ன வாக்கு பலித்ததடா
மதங்களின் தலைவர் சொன்னதெல்லாம்
மனக்கண் முன்னால் நடந்ததடா…….

ஆண் : நல்லவர் வாக்கு நல்வாக்கு
அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு
சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம்
அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்……
தெய்வம் வாழ்கின்ற இல்லம்…..

ஆண் : நல்லவர்க்கு எதற்கு கையெழுத்து
அவர் சொல்லும் சொல்லே பொன் எழுத்து
தீயவர் போடும் கையெழுத்தும்
நலம் செய்யாதென்பது குறைக் கருத்து

ஆண் : புத்தன் எதனை எழுதி வைத்தான்
வெறும் தத்துவம் தானே சொல்லி வைத்தான்
சொன்னவன் சொல்லை நம்பி விடு
அது தோல்வி அடைந்தால் கேட்டுவிடு
பதில் கேட்டுவிடு………

ஆண் : நல்லவர் வாக்கு நல்வாக்கு
அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு
சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம்
அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்……
தெய்வம் வாழ்கின்ற இல்லம்…..
அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here