Singer : T. M. Soundararajan

Music by : M. B. Sreenivas

Lyrics by : Pulamaipithan

Male : Namma india dhesam kooda
Ippadiththaan ippadiththaan
Santhiyilae nikkuthunga ippo ippo
Idha sinthiththu paakkurathu eppo eppo

Chorus : Namma india dhesam kooda
Ippadiththaan ippadiththaan
Santhiyilae nikkuthunga ippo ippo
Idha sinthiththu paakkurathu eppo eppo

Male : Intha sudhanthiraththa pangu vachchu pangu vachchu
Yaaryaaro thinnathuthaan michcham michchaam
Chorus : Intha sudhanthiraththa pangu vachchu pangu vachchu
Yaaryaaro thinnathuthaan michcham michchaam

Male : Avunga oozhalilae saerththathuthaan latcham latcham
Chorus : Aamaa oozhalilae saerththathuthaan latcham latcham

Chorus : Namma india dhesam kooda
Ippadiththaan ippadiththaan
Santhiyilae nikkuthunga ippo ippo
Idha sinthiththu paakkurathu eppo eppo

Male : Aalung katchikku
Chorus : Vote- kavalai
Male : Arasiyalvaathikku
Chorus : Seettu kavalai
Male : Andraadangkaaichchikku
Chorus : Veettu kavalai
Male and Chorus :
Ada yaarukku irukkudaa naattu kavalai

Female : Veedhikku veedhiyoru katchi irukku
Ingae saathikku saathiyoru sangam irukku
Chorus : Aamam veedhikku veedhiyoru katchi irukku
Ingae saathikku saathiyoru sangam irukku

Male : Vattam maavattam ellaam vasathiyilae
Ingae saathikku saathiyoru sangam irukku
Ingae vaazhgindra makkal mattum asathiyilae
Chorus : Ingae vaazhgindra makkal mattum asathiyilae

Male : Namma india dhesam kooda
Ippadiththaan ippadiththaan
Santhiyilae nikkuthunga ippo ippo
Idha sinthiththu paakkurathu eppo eppo

Male : Aalung katchikku
Chorus : Vote kavalai
Male : Arasiyalvaathikku
Chorus : Seettu kavalai
Male : Andraadangkaaichchikku
Chorus : Veettu kavalai
Male and Chorus :
Ada yaarukku irukkudaa naattu kavalai

Male : Yaezhaikal vetpaalarukku ottai alippaar
Chorus : Aamaam yaezhaikal vetpaalarukku ottai alippaar
Male : Avar yaezhaikku kaiyil thiruvottai koduppaar
Chorus : Thiruvottai koduppaar thiruvottai koduppaar

Male : MA padichchaa kooda enna sirappu
Oru MLA aanaa pothum yaega madhippu
Chorus : MA padichchaa kooda enna sirappu
Oru MLA aanaa pothum yaega madhippu

Chorus : MA padichchaa kooda enna sirappu
Oru MLa aanaapothum
Ha haa oru MLA aanaapothum yaega madhippu….yaega mathippu…

Male : Vellaikkaranga pidiyinilae appa irunthim
Pala kollaigaaranga pidiyinilae ippa irukkom
Chorus : Vellaikkaranga pidiyinilae appa irunthim
Pala kollaigaaranga pidiyinilae ippa irukkom

Male : Kadaththalkaran kalapadakkaaran
Karuppu kanakku ezhuthum perum panakkaaran
Chorus : Karuppu kanakku ezhuthum perum panakkaaran

Male : Lancham lavanyam pannura theeran
Katchi maarridum pachchonthikkaaran
Chorus : Katchi maaridum pachchonthikkaaran

Male : Arasiyal padhaviyila aadhaaram thedura asaagaaya sooran
Chorus : Ippadi pala kollaikkaranga
Pidiyinilae ippa irukkom

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : நம்ம இந்திய தேசம் கூட
இப்படித்தான் இப்படித்தான்
சந்தியிலே நிக்குதுங்க இப்போ இப்போ
இத சிந்தித்து பாக்குறது எப்போ எப்போ

குழு : நம்ம இந்திய தேசம் கூட
இப்படித்தான் இப்படித்தான்
சந்தியிலே நிக்குதுங்க இப்போ இப்போ
இத சிந்தித்து பாக்குறது எப்போ எப்போ

ஆண் : இந்த சுதந்திரத்த பங்கு வச்சு பங்கு வச்சு
யார்யாரோ தின்னதுதான் மிச்சம் மிச்சம்
குழு : இந்த சுதந்திரத்த பங்கு வச்சு பங்கு வச்சு
யார்யாரோ தின்னதுதான் மிச்சம் மிச்சம்

ஆண் : அவுங்க ஊழலிலே சேர்த்ததுதான் லட்சம் லட்சம்
குழு : ஆமா ஊழலிலே சேர்த்ததுதான் லட்சம் லட்சம்…..

குழு : நம்ம இந்திய தேசம் கூட
இப்படித்தான் இப்படித்தான்
சந்தியிலே நிக்குதுங்க இப்போ இப்போ
இத சிந்தித்து பாக்குறது எப்போ எப்போ

ஆண் : ஆளுங் கட்சிக்கு……
குழு : ஓட்டு கவலை
ஆண் : அரசியல்வாதிக்கு…..
குழு : சீட்டு கவலை
ஆண் : அன்றாடங்காய்ச்சிக்கு……
குழு : வீட்டு கவலை
ஆண் மற்றும் குழு :
அட யாருக்கு இருக்குடா நாட்டு கவலை

பெண் : வீதிக்கு வீதியொரு கட்சி இருக்கு
இங்கே சாதிக்கு சாதியொரு சங்கம் இருக்கு
குழு : ஆமாம் வீதிக்கு வீதியொரு கட்சி இருக்கு
இங்கே சாதிக்கு சாதியொரு சங்கம் இருக்கு

ஆண் : வட்டம் மாவட்டம் எல்லாம் வசதியிலே
வட்டம் மாவட்டம் எல்லாம் வசதியிலே
இங்கே வாழ்கின்ற மக்கள் மட்டும் அசதியிலே….
குழு : இங்கே வாழ்கின்ற மக்கள் மட்டும் அசதியிலே….

ஆண் : நம்ம இந்திய தேசம் கூட
இப்படித்தான் இப்படித்தான்
சந்தியிலே நிக்குதுங்க இப்போ இப்போ
இத சிந்தித்து பாக்குறது எப்போ எப்போ

ஆண் : ஆளுங் கட்சிக்கு……
குழு : ஓட்டு கவலை
ஆண் : அரசியல்வாதிக்கு…..
குழு : சீட்டு கவலை
ஆண் : அன்றாடங்காய்ச்சிக்கு……
குழு : வீட்டு கவலை
ஆண் மற்றும் குழு :
அட யாருக்கு இருக்குடா நாட்டு கவலை

ஆண் : ஏழைகள் வேட்பாளருக்கு ஓட்டை அளிப்பார்
குழு : ஆமாம் ஏழைகள் வேட்பாளருக்கு ஓட்டை அளிப்பார்
ஆண் : அவர் ஏழைக்கு கையில் திருவோட்டை கொடுப்பார்
குழு : திருவோட்டை கொடுப்பார் திருவோட்டை கொடுப்பார்

ஆண் : எம்.ஏ. படிச்சா கூட என்ன சிறப்பு
ஒரு எம்.எல்.ஏ. ஆனாபோதும் ஏக மதிப்பு….
குழு : எம்.ஏ. படிச்சா கூட என்ன சிறப்பு
ஒரு எம்.எல்.ஏ. ஆனாபோதும் ஏக மதிப்பு….

குழு : எம்.ஏ. படிச்சா கூட என்ன சிறப்பு என்ன சிறப்பு
ஒரு எம்.எல்.ஏ. ஆனாபோதும்
ஹ ஹா ஒரு எம்.எல்.ஏ. ஆனாபோதும் ஏக மதிப்பு….ஏக மதிப்பு….

ஆண் : வெள்ளைக்காரங்க பிடியினிலே அப்ப இருந்தோம்
பல கொள்ளைக்காரங்க பிடியினிலே இப்ப இருக்கோம்
குழு : வெள்ளைக்காரங்க பிடியினிலே அப்ப இருந்தோம்
பல கொள்ளைக்காரங்க பிடியினிலே இப்ப இருக்கோம்

ஆண் : கடத்தல்காரன் கலப்படக்காரன்
கருப்பு கணக்கு எழுதும் பெரும் பணக்காரன்
குழு : கருப்பு கணக்கு எழுதும் பெரும் பணக்காரன்

ஆண் : லஞ்சம் லாவண்யம் பண்ணுற தீரன்
கட்சி மாறிடும் பச்சோந்திக்காரன்
குழு : கட்சி மாறிடும் பச்சோந்திக்காரன்

ஆண் : அரசியல் பதவியில் ஆதாரம் தேடுற அசகாயசூரன்
குழு : இப்படி பல கொள்ளைக்காரங்க
பிடியினிலே இப்ப இருக்கோம்…

ஆண் : மறுபடியும் இங்கே ஒரு காந்தி வந்திடணும்
அதே மூக்கண்ணாடி கைத்தடியை ஏந்தி வந்திடணும்
ஆமாம் மறுபடியும் இங்கே ஒரு காந்தி வந்திடணும்
அதே மூக்கண்ணாடி கைத்தடியை ஏந்தி வந்திடணும்

பெண் : மீனாட்சிபுரங்களும் மண்டை காடும் கண்டா
மகாத்மா காந்தி நேரு நெஞ்சம் வாடும்
குழு : மீனாட்சிபுரங்களும் மண்டை காடும் கண்டா
மகாத்மா காந்தி நேரு நெஞ்சம் வாடும்

ஆண் : எல்லோரும் ஒன்றுபட்டா நாடு பிழைக்கும்
அப்போ எந்நாளும் ஏழை மக்கள் வீடு செழிக்கும்

குழு : எல்லோரும் ஒன்றுபட்டா நாடு பிழைக்கும்
அப்போ எந்நாளும் ஏழை மக்கள் வீடு செழிக்கும்
எந்நாளும் ஏழை மக்கள் வீடு செழிக்கும்

குழு : எந்நாளும் ஏழை மக்கள் வீடு செழிக்கும்…
எந்நாளும் ஏழை மக்கள் வீடு செழிக்கும்…
எந்நாளும் ஏழை மக்கள் வீடு செழிக்கும்…
எந்நாளும் ஏழை மக்கள் வீடு செழிக்கும்…
எந்நாளும் ஏழை மக்கள் வீடு செழிக்கும்…

ஆண் : ஆஆ….ஆஆ…..ஆஆ….ஆஆ…
ஆஆ….ஆஆ…ஆஆ….ஆஆ…ஆஆ….ஆஆ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here