Singer : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Naarayanaavendru naavaara solvorkku
Theeraatha vinai ellaam theernthividum arivaayo

Male : Unnaiththaan neeyarivaai
Unnaiththaan neeyarivaai
Ulagengum naanarivaen
Unaivida kavalai kondor
Ulagengum kodiyundu

Male : Unnaiththaan neeyarivaai

Male : Adiyavar yaavarukkum annamida
Thirudiyathan maganin thalai eduththaan
Adiyavar yaavarukkum annamida
Thirudiyathan maganin thalai eduththaan
Thalaiyattra meaniyathu vananga kandaan
Thalaiyattra meaniyathu vananga kandaan
Thalaivan kabirthaasan kalangi nindraan
Thalaivan kabirthaasan kalangi nindraan

Male : Unnaiththaan neeyarivaai
Ulagengum naanarivaen
Unaivida kavalai kondor
Ulagengum kodiyundu

Male : Unnaiththaan neeyarivaai

Female : Aa….aa….aa….aah….aa….

Female : Kannanai kadhaliththu urugi nindraan
Mannanaiththaan manathu mayangi nindraal
Kannanai kadhaliththu urugi nindraan
Mannanaiththaan manathu mayangi nindraal
Kannanai nenjil enni
Visham kudiththaal visham kuduththaal

Female : Kannanai nenjil enni
Visham kudiththaal visham kuduththaal
Adhu kannan kudiththathupol maara kandaal
Kannanai nenjil enni
Visham kudiththaal visham kuduththaal
Adhu kannan kudiththathupol maara kandaal
Bharatha bhoomiyilae pudhu meeraa kadhaiyallavaa….aa…aa…
Bharatha bhoomiyilae pudhu meeraa kadhaiyallavaa….

Male : Arasarkuriya porul thanaiyeduththu
Azhagiya ramanukku kovil kandaan
Arasarkuriya porul thanaiyeduththu
Azhagiya ramanukku kovil kandaan

Male : Mannavan kobam kondu sirai pidiththaan
Mannavan kobam kondu sirai pidiththaan
Mayanga savukkadiththu vilangumittaan
Mayanga savukkadiththu vilangumittaan

Male : Devanukkae nesan avanthaan
Ramanukke dasan ramadasan
Devanukkae nesan avanthaan
Ramanukke dasan ramadasan

Female : Maami kodumai kandu manathu nonthaal
Maayavan kaaladiyil paninthu nindraal
Maami kodumai kandu manathu nonthaal
Maayavan kaaladiyil paninthu nindraal

Female : Maamiyavalai katti thooniladiththaal
Devan thunaikku vanthu karam koduththaan
Maamiyavalai katti thooniladiththaal
Devan thunaikku vanthu karam koduththaan

Female : Thambi nee idhaiyarivaao
Idhu jakkupaai kadhaiyarivaai
Thambi nee idhaiyarivaao
Idhu jakkupaai kadhaiyarivaai

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நாரயணாவென்று நாவாரச் சொல்வோர்க்கு
தீராத வினைஎல்லாம் தீர்ந்துவிடும் அறிவாயோ…..

ஆண் : உன்னைத்தான் நீயறிவாய்
உன்னைத்தான் நீயறிவாய்
உலகெங்கும் நானறிவேன்
உனைவிட கவலை கொண்டோர்
உலகெங்கும் கோடியுண்டு

ஆண் : உன்னைத்தான் நீயறிவாய்

ஆண் : அடியவர் யாவருக்கும் அன்னமிட
திருடியதன் மகனின் தலை எடுத்தான்
அடியவர் யாவருக்கும் அன்னமிட
திருடியதன் மகனின் தலை எடுத்தான்
தலையற்ற மேனியது வணங்கக் கண்டான்
தலையற்ற மேனியது வணங்கக் கண்டான்
தலைவன் கபீர்தாசன் கலங்கி நின்றான்
தலைவன் கபீர்தாசன் கலங்கி நின்றான்

ஆண் : உன்னைத்தான் நீயறிவாய்
உலகெங்கும் நானறிவேன்
உனைவிட கவலை கொண்டோர்
உலகெங்கும் கோடியுண்டு

ஆண் : உன்னைத்தான் நீயறிவாய்

பெண் : ஆ….ஆ…ஆ….ஆஹ்….ஆ……

பெண் : கண்ணனைக் காதலித்து உருகி நின்றாள்
மன்னனைத்தான் மணந்து மயங்கி நின்றாள்
கண்ணனைக் காதலித்து உருகி நின்றாள்
மன்னனைத்தான் மணந்து மயங்கி நின்றாள்
கண்ணனை நெஞ்சில் எண்ணி
விஷம் குடித்தாள் விஷம் குடித்தாள்

பெண் : கண்ணனை நெஞ்சில் எண்ணி விஷம் குடித்தாள்
அது கண்ணன் குடித்ததுபோல் மாறக் கண்டாள்
கண்ணனை நெஞ்சில் எண்ணி விஷம் குடித்தாள்
அது கண்ணன் குடித்ததுபோல் மாறக் கண்டாள்
பாரத பூமியிலே புது மீரா கதையல்லவா…ஆ….ஆ….
பாரத பூமியிலே புது மீரா கதையல்லவா

ஆண் : அரசர்க்குரிய பொருள் தனையெடுத்து
அழகிய ராமனுக்கு கோவில் கண்டான்
அரசர்க்குரிய பொருள் தனையெடுத்து
அழகிய ராமனுக்கு கோவில் கண்டான்

ஆண் : மன்னவன் கோபம் கொண்டு சிறை பிடித்தான்
மன்னவன் கோபம் கொண்டு சிறை பிடித்தான்
மயங்கச் சவுக்கடித்து விலங்குமிட்டான்
மயங்கச் சவுக்கடித்து விலங்குமிட்டான்

ஆண் : தேவனுக்கே நேசன் அவன்தான்
ராமனுக்கே தாசன் ராமதாசன்……
தேவனுக்கே நேசன் அவன்தான்
ராமனுக்கே தாசன் ராமதாசன்……

பெண் : மாமி கொடுமை கண்டு மனது நொந்தாள்
மாயவன் காலடியில் பணிந்து நின்றாள்
மாமி கொடுமை கண்டு மனது நொந்தாள்
மாயவன் காலடியில் பணிந்து நின்றாள்

பெண் : மாமியவளைக் கட்டித் தூணிலடித்தாள்
தேவன் துணைக்கு வந்து கரம் கொடுத்தான்
மாமியவளைக் கட்டித் தூணிலடித்தாள்
தேவன் துணைக்கு வந்து கரம் கொடுத்தான்

பெண் : தம்பி நீ இதையறிவாய்
இது ஜக்குபாய் கதையறிவாய்
தம்பி நீ இதையறிவாய்
இது ஜக்குபாய் கதையறிவாய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here