Singers : Mano and Sunanda
Music by : S.A. Rajkumar
Female : Natchathira jannalil vaanam etti paarkudhu
Siraghai virithu parappom
Namm uravil ulaghai alapomm
Vilaiyaadalaam nilaavilae
Nizhal moozhgumo thanneerilae
Vaanai purati podu
Pudhu vaazhvin geedham paadu
Male : Natchathira jannalil vaanam etti paarkudhu
Siraghai virithu parappom
Namm uravil ulaghai alapomm
Male : Chithirangalai paada chollalaam
Thendralai anjal ondru poda chollalaam
Female : Puthagangalil muthedukkalaam
Ponnaadai imayathukku pottu vidalaam
Male : Boomikku pottu vaithu
Paarkalaam paarkalaam
Poovukkum aadai thaithu podalaamaa
Female : Sooriya thaerai mannil
Ottalaam ottalaam
Sorgathin pugai padathai kaatalaamaa
Male : Vaanambaadi vaazhvilae….
Varundhi azhuvadhillai….
Vananghi vizhuvadhillai….
Male : Natchathira jannalil vaanam etti paarkudhu
Siraghai virithu parappom
Namm uravil ulaghai alapomm
Female : Sangeedha puraa nenjil parakkum
Sandhosha mullai inghae veetil mulaikum
Male : Sandhana mazhai nammai nanaikum
Poon thendral paadhai solla vandhu azhaikkum
Female : Chittukku siragadikka
Chollithandhadhaaradi
Meenukku neechal katru thandhadhaaroo…
Male : Megathil veedu katti
Vaazhalaam vaazhalaam
Minnalil koorai pinni podalaamaa
Female : Onghum undhan kaigalaal….
Vaanai purati podu….
Pudhu vaazhvin geedham paadu….
Male : Natchathira jannalil vaanam etti paarkudhu
Female : Siraghai virithu parappom
Namm uravil ulaghai alapomm
Male : Vilaiyaadalaam nilaavilae
Nizhal moozhgumo thanneerilae
Vaanai purati podu
Pudhu vaazhvin geedham paadu
Male : Natchathira jannalil vaanam etti paarkudhu
Chorus : Lala laala laa laaa….
பாடகி : சுனந்தா
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
பெண் : நட்சத்திர
ஜன்னலில் வானம்
எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப்
பறப்போம் நம் உறவில்
உலகை அளப்போம்
விளையாடலாம் நிலாவிலே
நிழல் மூழ்குமோ தண்ணீரிலே
வானைப் புரட்டிப்போடு புது
வாழ்வின் கீதம் பாடு
ஆண் : நட்சத்திர
ஜன்னலில் வானம்
எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப்
பறப்போம் நம் உறவில்
உலகை அளப்போம்
ஆண் : சித்திரங்களைப்
பாடச்சொல்லலாம்
தென்றலை அஞ்சல்
ஒன்று போடச்சொல்லலாம்
பெண் : புத்தகங்களில்
முத்தெடுக்கலாம்
பொன்னாடை இமயத்துக்குப்
போட்டுவிடலாம்
ஆண் : பூமிக்குப் பொட்டு
வைத்து பார்க்கலாம்
பார்க்கலாம் பூவுக்கும்
ஆடை தைத்துப்
போடலாமா
பெண் : சூரியத் தேரை
மண்ணில் ஓட்டலாம்
ஓட்டலாம் சொர்கத்தின்
புகைப்படத்தைக் காட்டலாமா
ஆண் : வானம்பாடி
வாழ்விலே வருந்தி
அழுவதில்லை
வணங்கி விழுவதில்லை
ஆண் : நட்சத்திர
ஜன்னலில் வானம்
எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப்
பறப்போம் நம் உறவில்
உலகை அளப்போம்
பெண் : சங்கீதப்புறா
நெஞ்சில் பறக்கும்
சந்தோஷ முல்லை
இங்கே வீட்டில்
முளைக்கும்
ஆண் : சந்தனமழை
நம்மை நனைக்கும்
பூந்தென்றல் பாதை
சொல்ல வந்து அழைக்கும்
பெண் : சிட்டுக்குச்
சிறகடிக்கச் சொல்லித்தந்ததாரடி
மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ
ஆண் : மேகத்தில் வீடு
கட்டி வாழலாம் வாழலாம்
மின்னலில் கூரை பின்னிப்
போடலாமா
பெண் : ஓங்கும் உந்தன்
கைகளால் வானைப்
புரட்டிப்போடு புது
வாழ்வின் கீதம் பாடு
ஆண் : நட்சத்திர
ஜன்னலில் வானம்
எட்டிப் பார்க்குது
பெண் : சிறகை விரித்துப்
பறப்போம் நம் உறவில்
உலகை அளப்போம்
ஆண் : விளையாடலாம்
நிலாவிலே நிழல் மூழ்குமோ
தண்ணீரிலே வானைப்
புரட்டிப்போடு புது
வாழ்வின் கீதம் பாடு
ஆண் : நட்சத்திர
ஜன்னலில் வானம்
எட்டிப் பார்க்குது
குழு : லாலா லாலா
லா லா