Singer : Sai Vignesh

Music by : Vijay Siddharth

Lyrics by : Harishankar Ravindren

Male : Nedumudi yeaganin
Kaal thadam theendidum
Malaraai naan maaravae!
Maaridum maatramum
Avan kaiyil irukka
Yaridam naan ketkavae!

Male : Ketkiren
Uyir edhu? udal edhu?
Unnai
Paarthathun naan enai
Marakiren

Male : Marapathu vidhiyena
Nee sonaal ini
Pirapadhil sugamenna
Isha nee sol

Male : Solvathil purivadhum
Vaazhnthapin therivadhum
Un sutchama ragasiyamae
Ragasiyam arindhathum
Yavaiyum thurandhathum
Nee maarai porul adhisayam

Male : Adhisayam pala pala nigalthidum
Unatharul kidaithidum
Varam pera thavikiren
Thavikira uyirgalin
Marumaiyai maruka nee
Pizhambugal thaurvaai iraivaa

Male : Iraivaa unadhu
Nadukan arivathil
Arigiren naan yarena
Yarena yevarena
Vilambidum nadhiyinil
Vilunthidum thuliyena aagiren

Male : Aavathum azhivathum
Un vazhi nadanthida
Naan theivathum oivathum
Ingu than koothanae

Male : Koothane sarvanae
Sadaiyanae saanthanae
Yaavum neeyae
Nedumudi yeganae

Male : Yeganae anaganae
Anthiran aravanae
Uruthiran neeyae
Nedumudi yeganae

பாடகர் : சாய் விக்னேஷ்

இசை அமைப்பாளர் : விஜய் சித்தார்த்

பாடல் ஆசிரியர் : ஹரிஷங்கர் ரவீந்திரன்

ஆண் : நெடுமுடி ஏகனின்
கால் தடம் தீண்டிடும்
மலராய் நான் மாறவே!
மாறிடும் மாற்றமும்
அவன் கையில் இருக்க
யாரிடம் நான் கேட்கவே!

ஆண் : கேட்கிறேன்
உயிர் எது? உடல் எது?
உன்னை பாத்ததும்
நான் எனை மறக்கிறேன்

ஆண் : மறப்பது விதியென
நீ சொன்னால் இனி
பிறப்பதில் சுகமென்ன
இஷா நீ சொல்

ஆண் : சொல்வதில் புரிவதும்
வாழ்ந்தபின் தெரிவதும்
உன் சூட்சம ரகசியமே
ரகசியம் அறிந்ததும்
யாவையும் துறந்ததும்
நீ மறை பொருள் அதிசயம்

ஆண் : அதிசயம் பல பல நிகழ்த்திடும்
உனதருள் கிடைத்திடும்
வரம் பெற தவிக்கிறேன்
தவிக்கிற உயிர்களின்
மறுமையைய் மறுக்க நீ
பிழம்புகள் தருவாய் இறைவா

ஆண் : இறைவா உனது நடுக்கண் அறிவதில்
அறிகிறேன் நான் யாரென
யாரென எவரென விழம்பிடும் நதியினில்
விழுந்திடும் துளியென ஆகிறேன்

ஆண் : ஆவதும் அழிவதும்
உன் வழி நடந்திட
நான் தேய்வதும் ஓய்வதும்
இங்கு தான் கூத்தனே

ஆண் : கூத்தனே சர்வனே
சடையனே சாந்தனே
யாவும் நீயே
நெடுமுடி ஏகனே

ஆண் : யேகனே அனேகனே
அந்திரன் அரவனே
உருத்திரன் நீயே
நெடுமுடி ஏகனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here