Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Nee ennai santhiththathundo
Thaen en pol thiththathundo
Nee ennai santhiththathundo
Thaen en pol thiththathundo

Female : Anantha mogam paalaabishegam
Angangalellaam singaara raagam

Female : Naan kettu pazhakkamillai
Nee kettaal thayakkamillai
Naan kettu pazhakkamillai
Nee kettaal thayakkamillai
Irandu macham udhattil undu
Nerungi vanthaal unakkum undu

Female : Nee ennai santhiththathundo
Thaen en pol thiththathundo

Chorus : ……………….

Female : Iravu nilaavil uravennum thaeril
Iruvarin yogam sugamenum yaagam
Kanigalin inbam anilariyaathaa
Ilamai irunthum idhu puriyaathaa

Female : Naan sollum manmatha leelai
Vaan thnath manthiramaalai
Thiranda nenjam…aa….mirandathillai….aa…
Pirinthu sendraal irandumillai

Female : Nee ennai santhiththathundo
Thaen en pol thiththathundo

Chorus : …………………

Female : Azhagiya thangam thavazhuthu ingu
Aruginil vanthaal unakkoru pangu
Nadhi varumpothu anaiyidalaamaa
Radhi varumpothu adhai vidalaamaa

Female : Ponmaalai thoduththa chendu
Male : Aahaa
Female : Pen enum vaazhai thandu
Male : Oho
Female : Kulunguthingae…aaha mayanguthingae….ohho
Thudikkuthingae ninaippathenga…………

Female : Nee ennai santhiththathundo
Thaen en pol thiththathundo

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நீ என்னை சந்தித்ததுண்டோ
தேன் என் போல் தித்தித்ததுண்டோ
நீ என்னை சந்தித்ததுண்டோ
தேன் என் போல் தித்தித்ததுண்டோ

பெண் : ஆனந்த மோகம் பாலாபிஷேகம்
அங்கங்களெல்லாம் சிங்கார ராகம்

பெண் : நான் கேட்டு பழக்கமில்லை
நீ கேட்டால் தயக்கமில்லை
நான் கேட்டு பழக்கமில்லை
நீ கேட்டால் தயக்கமில்லை
இரண்டு மச்சம் உதட்டில் உண்டு
நெருங்கி வந்தால் உனக்கும் உண்டு

பெண் : நீ என்னை சந்தித்ததுண்டோ
தேன் என் போல் தித்தித்ததுண்டோ

குழு : ……………………………….

பெண் : இரவு நிலாவில் உறவெனும் தேரில்
இருவரின் யோகம் சுகமெனும் யாகம்
கனிகளின் இன்பம் அணிலறியாதா
இளமை இருந்தும் இது புரியாதா

பெண் : நான் சொல்லும் மன்மத லீலை
வான் தந்த மந்திரமாலை
திரண்ட நெஞ்சம்…..ஆ…..மிரண்டதில்லை…ஆ….
பிரிந்து சென்றால் இரண்டுமில்லை

பெண் : நீ என்னை சந்தித்ததுண்டோ
தேன் என் போல் தித்தித்ததுண்டோ

குழு : ……………………………….

பெண் : அழகிய தங்கம் தவழுது இங்கு
அருகினில் வந்தால் உனக்கொரு பங்கு
நதி வரும்போது அணையிடலாமா
ரதி வரும்போது அதை விடலாமா

பெண் : பொன்மாலை தொடுத்த செண்டு
ஆண் : ஆஹா
பெண் : பெண் எனும் வாழைத்தண்டு
ஆண் : ஓஹோ
பெண் : குலுங்குதிங்கே…ஆஹ மயங்குதிங்கே…ஓஹ்ஹோ
துடிக்குதிங்கே நினைப்பதெங்கே

பெண் : நீ என்னை சந்தித்ததுண்டோ
தேன் என் போல் தித்தித்ததுண்டோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here