Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female : Nee ennai vittu pogaadhae
Indha kanni manam thaangaadhae

Female : Nee yennai vittu pogaadhae
Indha kanni manam thaangaadhae
Vittu ponaal pattu poovin
Vannam yaavum vaadi pogumae

Female : Oru kaiyil koppai
Maru kaiyil paavai
Eduthu kondaadu inimai panpaadu
Kaalam pon pondradhu
Kaadhal kan pondradhu
Ponaal ennaavadhu
Vaa vaa indraavadhu

Female : Nee yennai vittu pogaadhae
Indha kanni manam thaangaadhae
Vittu ponaal pattu poovin
Vannam yaavum vaadi pogumae

Female : Sooriyan thoongiyadhu
Ingu chandhiran thondriyadhu
Sooriyan thoongiyadhu
Ingu chandhiran thondriyadhu
Aayiratthil neeyoruthan thaanae
Aasai kondu thaerndheduthaen naanae
Thithikkindra muthiraigal thaenae
Thigattum varaikkum thirumba thaa

Female : Thathai sollum vithaiyellaam
Methai vandhaal kaana koodum

Female : Poo pandhu polirukkum
Vanna poondhugil maelirukkum
Vaanagathu maenagaikku thangai
Vaarthedutha oviyam pol mangai
Inbamendra vellamoorum gangai
Iravu muzhuvadhum uravil midhakka vaa

Female : Ondru thandhaal nooru thandhu
Nandri sollum nangai naanandro

Female : Nee yennai vittu pogaadhae
Indha kanni manam thaangaadhae
Vittu ponaal pattu poovin
Vannam yaavum vaadi pogumae

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நீ என்னை விட்டு போகாதே
இந்தக் கன்னி மனம் தாங்காதே

பெண் : நீ என்னை விட்டு போகாதே
இந்தக் கன்னி மனம் தாங்காதே
விட்டுப் போனால் பட்டுப் பூவின்
வண்ணம் யாவும் வாடிப் போகுமே

பெண் : ஒரு கையில் கோப்பை
மறு கையில் பாவை
எடுத்துக் கொண்டாடு இனிமை பண்பாடு
காலம் பொன் போன்றது
காதல் கண் போன்றது
போனால் என்னாவது
வா வா இன்றாவது

பெண் : நீ என்னை விட்டு போகாதே
இந்தக் கன்னி மனம் தாங்காதே
விட்டுப் போனால் பட்டுப் பூவின்
வண்ணம் யாவும் வாடிப் போகுமே

பெண் : சூரியன் தூங்கியது
இங்கு சந்திரன் தோன்றியது
சூரியன் தூங்கியது
இங்கு சந்திரன் தோன்றியது
ஆயிரத்தில் நீயொருத்தன் தானே
ஆசைக் கொண்டு தேர்ந்தெடுத்தேன் நானே
தித்திக்கின்ற முத்திரைகள் தேனே
திகட்டும் வரைக்கும் திரும்பத் திரும்பத் தா…..

பெண் : தத்தை சொல்லும் வித்தையெல்லாம்
மெத்தை வந்தால் காணக் கூடுமே

பெண் : பூப் பந்து போலிருக்கும்
வண்ணப் பூந்துகில் மேலிருக்கும்
வானகத்து மேனகைக்குத் தங்கை
வார்த்தெடுத்த ஓவியம் போல் மங்கை
இன்பமென்ற வெள்ளமூறும் கங்கை
இரவு முழுவதும் உறவில் மிதக்க வா

பெண் : ஒன்று தந்தால் நூறு தந்து
நன்றி சொல்லும் நங்கை நானன்றோ

பெண் : நீ என்னை விட்டு போகாதே
இந்தக் கன்னி மனம் தாங்காதே
விட்டுப் போனால் பட்டுப் பூவின்
வண்ணம் யாவும் வாடிப் போகுமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here