Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Muthulingam

Female : Nee intha oorukkoru pillai allavo
Naan intha rajavukku rani allavo
Nee intha oorukkoru pillai allavo
Naan intha rajavukku rani allavo

Female : Naan mottuvittu kattavizhntha mullai
Ennai katti kolla thanguthadai illai

Male : Ingu neeyindri naanillai kettukollammaa
Enai thottu thottu vattamittu aadu
Idhzh iththinaththil muththukkalai podu
Idhu anantha eeraadum neram thaanammaa

Female : Nee intha oorukkoru pillai allavo
Naan intha rajavukku rani allavo

Male : Mangai ila nangai nee naanaadum gangai
Thangai oru thangai nee kalai raani thangai
Mangai ila nangai nee naanaadum gangai
Thangai oru thangai nee kalai raani thangai

Male : Rasiththu pidiththu vilaiyaadaamal nenjam thoongaathu
Eduththu koduththu uravaadaamal inbam thondraathu

Male : Adi achchamenna pachaikili sollu
Nee saththamindri muththamittu sollu
Ada nee intha rajavukku roja poovammaa

Female : Nee intha oorukkoru pillai allavo
Male : Naan intha ranikendrum raja allavo

Female : Thegam en thegam un singaara odam
Mogam un mogam adhu theeraatha thaagam
Thegam en thegam un singaara odam
Mogam un mogam adhu theeraatha thaagam

Female : Kaninthu sivantha idhazh oraththil kayam illaathu
Virunthu arunthu ilaipaaraiyyaa velai varumpothu

Female : En kann irandil vetkam vanthu thulla
Un kai irandil kanni ennai alla
Nee kalyaana poomaalai podakoodaathaa

Female : Nee intha oorukkoru pillai allavo
Male : Aa…aa… naan intha ranikendrum raja allavo

Male : Aadum idai aadum un nadai thaalam podum
Thedum vizhi thedum en manam yaengi vaadum
Female : Inikka inikka kadhai pesamal yaekkam theeraathu
Manakka manakka sugam thedaamal maiyal maaraathu

Male : Nee minnukindra manjal nira panthu
Female : Naan unnugindra vannaththamizh sindhu
Male : Pudhu nanangal yaeno innum vaadi en pakkam

Female : Nee intha oorukkoru pillai allavo
Male : Naan intha ranikendrum raja allavo

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : நீ இந்த ஊருக்கொருப் பிள்ளை அல்லவோ
நான் இந்த ராஜாவுக்கு ராணி அல்லவோ
நீ இந்த ஊருக்கொருப் பிள்ளை அல்லவோ
நான் இந்த ராஜாவுக்கு ராணி அல்லவோ

பெண் : நான் மொட்டுவிட்டு கட்டவிழ்ந்த முல்லை
என்னைக் கட்டிக் கொள்ள தங்குதடை இல்லை

ஆண் : இங்கு நீயின்றி நானில்லை கேட்டுக்கொள்ளம்மா
எனைத் தொட்டு தொட்டு வட்டமிட்டு ஆடு
இதழ் இத்தினத்தில் முத்துக்களை போடு
இது ஆனந்த நீராடும் நேரம் தானம்மா

பெண் : நீ இந்த ஊருக்கொருப் பிள்ளை அல்லவோ
நான் இந்த ராஜாவுக்கு ராணி அல்லவோ

ஆண் : மங்கை இளநங்கை நீ நானாடும் கங்கை
தங்கை ஒரு தங்கை நீ கலை ராணி தங்கை
மங்கை இளநங்கை நீ நானாடும் கங்கை
தங்கை ஒரு தங்கை நீ கலை ராணி தங்கை

ஆண் : ரசித்து பிடித்து விளையாடாமல் நெஞ்சம் தூங்காது
எடுத்துக் கொடுத்து உறவாடாமல் இன்பம் தோன்றாது

ஆண் : அடி அச்சமென்ன பச்சைக்கிளி சொல்லு
நீ சத்தமின்றி முத்தமிட்டு செல்லு
அட நீ இந்த ராஜாவுக்கு ரோஜாப் பூவம்மா

பெண் : நீ இந்த ஊருக்கொருப் பிள்ளை அல்லவோ
ஆண் : நான் இந்த ராணிகென்றும் ராஜா அல்லவோ

பெண் : தேகம் என் தேகம் உன் சிங்கார ஓடம்
மோகம் உன் மோகம் அது தீராத தாகம்
தேகம் என் தேகம் உன் சிங்கார ஓடம்
மோகம் உன் மோகம் அது தீராத தாகம்

பெண் : கனிந்து சிவந்த இதழ் ஓரத்தில் காயம் இல்லாது
விருந்து அருந்து இளைப்பாரய்யா வேளை வரும்போது

பெண் : என் கண் இரண்டில் வெட்கம் வந்து துள்ள
உன் கை இரண்டில் கன்னி என்னை அள்ள
நீ கல்யாண பூமாலை போடக்கூடாதா

பெண் : நீ இந்த ஊருக்கொருப் பிள்ளை அல்லவோ
ஆண் : ஆ…ஆ…. நான் இந்த ராணிகென்றும் ராஜா அல்லவோ

ஆண் : ஆடும் இடை ஆடும் உன் நடை தாளம் போடும்
தேடும் விழி தேடும் என் மனம் ஏங்கி வாடும்
பெண் : இனிக்க இனிக்க கதை பேசாமல் ஏக்கம் தீராது
மணக்க மணக்க சுகம் தேடாமல் மையல் மாறாது

ஆண் : நீ மின்னுகின்ற மஞ்சள் நிற பந்து
பெண் : நான் உண்ணுகின்ற வண்ணத்தமிழ் சிந்து
ஆண் : புது நாணங்கள் ஏனோ இன்னும் வாடி என் பக்கம்

பெண் : நீ இந்த ஊருக்கொருப் பிள்ளை அல்லவோ
ஆண் : நான் இந்த ராணிகென்றும் ராஜா அல்லவோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here