Singer : Hariharan

Music by : Deva

Lyrics by : Vairamuthu

Female : Thaththiththom thomtheemtha thaga thimi
Thaththiththom thomtheemtha thaga thimi
Thaththiththom thomtheemtha thaga thimi thom

Female : Thaththiththom thomtheemtha thaga thimi
Thaththiththom thomtheemtha thaga thimi
Thaththiththom thomtheemtha thaga thimi thom

Female : Thaththiththom thomtheemtha thaga thimi
Thaththiththom thomtheemtha thaga thimi
Thaththiththom thomtheemtha thaga thimi thom

Male : Nee irunthaal naan irupaen
Nee nadanthaan naan nadappaen
Nizhalukkellaam kudai pidippaen
Nee en kaadhaliyaanaal

Male : Hae hae nee irunthaal naan irupaen
Nee nadanthaan naan nadappaen
Nizhalukkellaam kudai pidippaen
Nee en kaadhaliyaanaal

Male : Neeraada nathi thruvaen
Nee thudaikka mugil tharuvaen
Nee uduththa malar tharuvaen
Nee en kadhaliyaanaal
Nee en kadhaliyaanaal…..

Male : Nee nadakkum pulveliyil
Panithuligal thudaiththu vaippaen
Nee pesum thaaimozhiyil
Vallinangal kalainthu vaippaen

Male : Nee kadantha theruvil unthan vaasam theduvaen
Nee kuliththa nathiyil moozhgi motcham kaanuvaen
Un jannal oram naan kaattraaga varuvaen
Naal ondru veedham naan pookkondu tharuvaen

Male : Kangal theendum kanavai polae
Nee ariyaamal naan thoduvaen
Nee en kadhaliyaanaal…..

Female : Thaththiththom thomtheemtha thaga thimi
Thaththiththom thomtheemtha thaga thimi
Thaththiththom thomtheemtha thaga thimi thom

Male : Vellai nilla oli thiratti
Ullangaiyil oottri vaippaen
Kaattralaiyil isai piriththu
Kaadhugalil thavazha vaippaen

Male : Koburangal yaeri unthan perai koovuvaen
Tajmahal-in melae unthan perai ezhuthuvaen
Un koonthal mudiyil naan en jeevan mudiven
Nee oodal kondaal naan un kaalil vizhuvaen

Male : Ottrai muththam sinthuvathendraal
Un madiyil uyir viduvaen
Nee en kadhaliyaanaal…..

Male : Nee irunthaal naan irupaen
Nee nadanthaan naan nadappaen
Nizhalukkellaam kudai pidippaen
Nee en kaadhaliyaanaal

Male : Nee irunthaal naan irupaen
Nee nadanthaan naan nadappaen
Nizhalukkellaam kudai pidippaen
Nee en kaadhaliyaanaal

Male : Neeraada nathi thruvaen
Nee thudaikka mugil tharuvaen
Nee uduththa malar tharuvaen
Nee en kadhaliyaanaal
Nee en kadhaliyaanaal…..
Nee en kadhaliyaanaal…..

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : வைரமுத்து

பெண் : தத்தித்தோம் தோம்தீம்த தக திமி
தத்தித்தோம் தோம்தீம்த தக திமி
தத்தித்தோம் தோம்தீம்த தக திமி தோம்

பெண் : தத்தித்தோம் தோம்தீம்த தக திமி
தத்தித்தோம் தோம்தீம்த தக திமி
தத்தித்தோம் தோம்தீம்த தக திமி தோம்

பெண் : தத்தித்தோம் தோம்தீம்த தக திமி
தத்தித்தோம் தோம்தீம்த தக திமி
தத்தித்தோம் தோம்தீம்த தக திமி தோம்

ஆண் : நீ இருந்தால் நான் இருப்பேன்
நீ நடந்தால் நான் நடப்பேன்
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்
நீ என் காதலியானால்

ஆண் : ஹே….ஹே… நீ இருந்தால் நான் இருப்பேன்
நீ நடந்தால் நான் நடப்பேன்
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்
நீ என் காதலியானால்

ஆண் : நீராட நதி தருவேன்
நீ துடைக்க முகில் தருவேன்
நீ உடுத்த மலர் தருவேன்
நீ என் காதலியானால்
நீ என் காதலியானால்….

ஆண் : நீ நடக்கும் புல்வெளியில்
பனித்துளிகள் துடைத்து வைப்பேன்
நீ பேசும் தாய்மொழியில்
வல்லினங்கள் களைந்து வைப்பேன்

ஆண் : நீ கடந்த தெருவில் உந்தன் வாசம் தேடுவேன்
நீ குளித்த நதியில் மூழ்கி மோட்சம் காணுவேன்
உன் ஜன்னல் ஓரம் நான் காற்றாக வருவேன்
நாள் ஒன்று வீதம் நான் பூக்கொண்டு தருவேன்

ஆண் : கண்கள் தீண்டும் கனவைப் போலே
நீ அறியாமல் நான் தொடுவேன்
நீ என் காதலியானால்……

பெண் : தத்தித்தோம் தோம்தீம்த தக திமி
தத்தித்தோம் தோம்தீம்த தக திமி
தத்தித்தோம் தோம்தீம்த தக திமி தோம்

ஆண் : வெள்ளை நிலா ஒளி திரட்டி
உள்ளங்கையில் ஊற்றி வைப்பேன்
காற்றலையில் இசை பிரித்து
காதுகளில் தவழ வைப்பேன்

ஆண் : கோபுரங்கள் ஏறி உந்தன் பேரை கூவுவேன்
தாஜ்மஹாலின் மேலே உந்தன் பேரை எழுதுவேன்
உன் கூந்தல் முடியில் நான் என் ஜீவன் முடிவேன்
நீ ஊடல் கொண்டால் நான் உன் காலில் விழுவேன்

ஆண் : ஒற்றை முத்தம் சிந்துவதென்றால்
உன் மடியில் உயிர் விடுவேன்
நீ என் காதலியானால்……

ஆண் : நீ இருந்தால் நான் இருப்பேன்
நீ நடந்தால் நான் நடப்பேன்
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்
நீ என் காதலியானால்

ஆண் : நீ இருந்தால் நான் இருப்பேன்
நீ நடந்தால் நான் நடப்பேன்
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்
நீ என் காதலியானால்

ஆண் : நீராட நதி தருவேன்
நீ துடைக்க முகில் தருவேன்
நீ உடுத்த மலர் தருவேன்
நீ என் காதலியானால்
நீ என் காதலியானால்….
நீ என் காதலியானால்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here