Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Nee mannavanaa chinnavanaa
Solli vidum pirappu
Nee mannavanaa chinnavanaa
Solli vidum pirappu

Male : Nee mannavanaa chinnavanaa
Solli vidum pirappu
Nee mannavanaa chinnavanaa
Solli vidum pirappu

Male : Nee mannavanaa chinnavanaa
Solli vidum pirappu

Male : Nee seththatharkku azhupavargal
Eththanai per kanakku
Nee seththatharkku azhupavargal
Eththanai per kanakku
Athai poruththeythaan pogumidam
Sorkkam naragam unakku
Ada sorkkam naragam unakku

Male : Nee mannavanaa chinnavanaa
Solli vidum pirappu
Nee mannavanaa chinnavanaa
Solli vidum pirappu

Male : Nee mannavanaa chinnavanaa
Solli vidum pirappu

Male : Arasiyalvaathi ellaam
Oottai ennugiraar
Aranmanai vaasiyellaam
Nottai ennugiraar

Male : Arasiyalvaathi ellaam
Oottai ennugiraar
Aranmanai vaasiyellaam
Nottai ennugiraar

Male : Aayiraththil oruvanthaan
Aandavanai ennugiraan
Aayiraththil oruvanthaan
Aandavanai ennugiraan

Male : Aayiraththil oruvanthaan
Aandavanai ennugiraan

Male : Nee mannavanaa chinnavanaa
Solli vidum pirappu
Nee mannavanaa chinnavanaa
Solli vidum pirappu

Male : Nee mannavanaa chinnavanaa
Solli vidum pirappu

Male : Ooraarkku uzhaiththavargal
Oorai vittu pogaiyilae
Oorae thirandu vanthu
Vaaikkarasi pottu vidum

Male : Ooraarkku uzhaiththavargal
Oorai vittu pogaiyilae
Oorae thirandu vanthu
Vaaikkarasi pottu vidum

Male : Naal muzhukka poi uraiththu
Naalum ketta manithan seththaal
Thol koduththu thookka
Oru naathiyindri aagividum
Thol koduththu thookka
Oru naathiyindri aagividum

Male : Nee mannavanaa chinnavanaa
Solli vidum pirappu

Male : Maaligaiyil iruntha puththan
Mara nizhal kudi pugunthaan
Yaezhaigalai gaandhi kandu
Aadaigalai kuraiththu kondaan

Male : Maaligaiyil iruntha puththan
Mara nizhal kudi pugunthaan
Yaezhaigalai gaandhi kandu
Aadaigalai kuraiththu kondaan

Male : Anbu kodi ondrirunthaal
Thunbangalai tholaiththu vidum
Aalukkoru kodi pidiththaal
Oorukkoru kaatchiyendraal
Naalukkoru sandai varum
Naagareegam engu varum

Male : Nee mannavanaa chinnavanaa
Solli vidum pirappu
Nee mannavanaa chinnavanaa
Solli vidum pirappu

Male : Nee mannavanaa chinnavanaa
Solli vidum pirappu

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நீ மன்னவனா சின்னவனா
சொல்லி விடும் பிறப்பு
நீ மன்னவனா சின்னவனா
சொல்லி விடும் பிறப்பு

ஆண் : நீ நல்லவனா கெட்டவனா
சொல்லி விடும் இறப்பு
நீ நல்லவனா கெட்டவனா
சொல்லி விடும் இறப்பு

ஆண் : நீ மன்னவனா சின்னவனா
சொல்லி விடும் பிறப்பு

ஆண் : நீ செத்ததற்கு அழுபவர்கள்
எத்தனை பேர் கணக்கு
நீ செத்ததற்கு அழுபவர்கள்
எத்தனை பேர் கணக்கு
அதை பொறுத்தேதான் போகுமிடம்
சொர்க்கம் நரகம் உனக்கு
அட சொர்க்கம் நரகம் உனக்கு

ஆண் : நீ மன்னவனா சின்னவனா
சொல்லி விடும் பிறப்பு
நீ நல்லவனா கெட்டவனா
சொல்லி விடும் இறப்பு

ஆண் : நீ மன்னவனா சின்னவனா
சொல்லி விடும் பிறப்பு

ஆண் : அரசியல்வாதி எல்லாம்
ஓட்டை எண்ணுகிறார்
அரண்மனை வாசியெல்லாம்
நோட்டை எண்ணுகிறார்

ஆண் : அரசியல்வாதி எல்லாம்
ஓட்டை எண்ணுகிறார்
அரண்மனை வாசியெல்லாம்
நோட்டை எண்ணுகிறார்

ஆண் : ஆயிரத்தில் ஒருவன்தான்
ஆண்டவனை எண்ணுகிறான்
ஆயிரத்தில் ஒருவன்தான்
ஆண்டவனை எண்ணுகிறான்

ஆண் : ஆயிரத்தில் ஒருவன்தான்
ஆண்டவனை எண்ணுகிறான்

ஆண் : நீ மன்னவனா சின்னவனா
சொல்லி விடும் பிறப்பு
நீ நல்லவனா கெட்டவனா
சொல்லி விடும் இறப்பு

ஆண் : நீ மன்னவனா சின்னவனா
சொல்லி விடும் பிறப்பு

ஆண் : ஊரார்க்கு உழைத்தவர்கள்
ஊரை விட்டு போகையிலே
ஊரே திரண்டு வந்து
வாய்க்கரிசி போட்டு விடும்

ஆண் : ஊரார்க்கு உழைத்தவர்கள்
ஊரை விட்டு போகையிலே
ஊரே திரண்டு வந்து
வாய்க்கரிசி போட்டு விடும்

ஆண் : நாள் முழுக்க பொய் உரைத்து
நாலும் கெட்ட மனிதன் செத்தால்
தோள் கொடுத்து தூக்க
ஒரு நாதியின்றி ஆகிவிடும்
தோள் கொடுத்து தூக்க
ஒரு நாதியின்றி ஆகிவிடும்

ஆண் : நீ மன்னவனா சின்னவனா
சொல்லி விடும் பிறப்பு

ஆண் : மாளிகையில் இருந்த புத்தன்
மர நிழல் குடி புகுந்தான்
ஏழைகளை காந்தி கண்டு
ஆடைகளை குறைத்துக் கொண்டான்

ஆண் : மாளிகையில் இருந்த புத்தன்
மர நிழல் குடி புகுந்தான்
ஏழைகளை காந்தி கண்டு
ஆடைகளை குறைத்துக் கொண்டான்

ஆண் : அன்பு கொடி ஒன்றிருந்தால்
துன்பங்களை தொலைத்து விடும்
ஆளுக்கொரு கொடிப் பிடித்தால்
ஊருக்கொரு கட்சியென்றால்
நாளுக்கொரு சண்டை வரும்
நாகரீகம் எங்கு வரும்

ஆண் : நீ மன்னவனா சின்னவனா
சொல்லி விடும் பிறப்பு
நீ நல்லவனா கெட்டவனா
சொல்லி விடும் இறப்பு

ஆண் : நீ மன்னவனா சின்னவனா
சொல்லி விடும் பிறப்பு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here