Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Male : Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum
Anbil rendu andril konjum sontham vidaathu
Andrum indrum endrum intha pantham vidaathu
Male : Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum
Anbil rendu andril konjum sontham vidaathu
Andrum indrum endrum intha pantham vidaathu
Female : Vaanaththil neer kondu
Vaarkkindra kaarmegam
Vaaraamal naan vaadinaen
Varum naalai naan thedinaen
Female : Vaanaththil neer kondu
Vaarkkindra kaarmegam
Vaaraamal naan vaadinaen
Varum naalai naan thedinaen
Female : Thaalaattum kattrai nee kettu paaru
Naan paadum paadal neeyandri yaari
Female : Nee oru kavithai unakku illaiyae oru mudhumai
Sontham ennum santham kondu endrum panpaada
Endrum ulla thendral indru nenjil nindraada
Male : Poo vaiththa poovai nee paal vanna paavai nee
Poomaalai naan soodavaa paamaalai naan paadavaa
Poo vaiththa poovai nee paal vanna paavai nee
Poomaalai naan soodavaa paamaalai naan paadavaa
Male : Maarbodu alli medhuvaaga killi
Seeraattum pothu pogaatho thulli
Male : Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum
Anbil rendu andril konjum sontham vidaathu
Andrum indrum endrum intha pantham vidaathu
Female : Naan vaangum moochchellaam
Naan pesum pechchellaam
Nee endru naan sollavo
Neengaatha nizhal allavo
Male : Theyaatha nilavu dheiveega uravu
Pirivennum ondrai ariyaatha manathu
Female : Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum
Male : Anbil rendu andril konjum sontham vidaathu
Both : Andrum indrum endrum intha pantham vidaathu
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்
அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது
அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது
ஆண் : நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்
அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது
அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது
பெண் : வானத்தில் நீர் கொண்டு
வார்க்கின்ற கார் மேகம்
வாராமல் நான் வாடினேன்
வரும் நாளை நான் தேடினேன்
பெண் : வானத்தில் நீர் கொண்டு
வார்க்கின்ற கார் மேகம்
வாராமல் நான் வாடினேன்
வரும் நாளை நான் தேடினேன்
பெண் : தாலாட்டும் காற்றை நீ கேட்டு பாரு
நான் பாடும் பாடல் நீயன்றி யாரு
பெண் : நீ ஒரு கவிதை உனக்கு இல்லையே ஒரு முதுமை
சொந்தம் என்னும் சந்தம் கொண்டு என்றும் பண்பாட
என்றும் உள்ள தென்றல் இன்று நெஞ்சில் நின்றாட
ஆண் : பூ வைத்த பூவை நீ பால் வண்ண பாவை நீ
பூமாலை நான் சூடவா பாமாலை நான் பாடவா
பூ வைத்த பூவை நீ பால் வண்ண பாவை நீ
பூமாலை நான் சூடவா பாமாலை நான் பாடவா
ஆண் : மார்போடு அள்ளி மெதுவாக கிள்ளி
சீராட்டும் போது போகாதோ துள்ளி
ஆண் : நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்
அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது
அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது
பெண் : நான் வாங்கும் மூச்செல்லாம்
நான் பேசும் பேச்செல்லாம்
நீ என்று நான் சொல்லவோ
நீங்காத நிழல் அல்லவோ
ஆண் : தேயாத நிலவு தெய்வீக உறவு
பிரிவென்னும் ஒன்றை அறியாத மனது
பெண் : நீ ஒரு கவிதை உனக்கு இல்லையே ஒரு முதுமை
ஆண் : அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது
இருவர் : அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது