Singers : K. S. Chithra, Tanuj Menon and Padmaja Sreenivasan

Music by : Tanuj Menon

Lyrics by : Sabarivasan Shanmugam

Male : Nee pogiraai
Nanbanae nee pogiraai
Thozhanae vaan pogiraai
Yaar pizhaiyo?

Male : Nee pogiraai
Nanbanae nee pogiraai
Thozhanae vaan pogiraai
Yaar pizhaiyo?

Male : Poo udhirum
Punnagai theeyenilaa…!
Thol thazhuvum
Tholgalil thaan thanalaa…

Male : Naam siritha
Osaiyum oivadhuvaa?
Thaer sarindhu
Veedhiyil saaivadhuvaa

Male : Paarvaigal nee
Vara yengudhae
Paadhaigal unn
Thadam kettidudhae

Male : Kilaidhaan polavae
Natpinil sernthomada…
Paadhiyil nee
Muridhal muraiyaa?

Female : Paaraaiyo
Oru murai paaraaiyo vizhiyae…
Viral thoda
Vaaraaiyo neeyum uyirae…

Female : Enadhuyirai anuppugiren
Imai thirandhu nee vaa vaa
Nee indri
Naanum yaen?

Female : Edhirinil nee nillada
Enn per sollada
Thaniyaanen
Un nilaaa…

Female : Aaa… aaa… aaa…
Karuvinilae
Sumandha unnai
Theruvinilae paarppadhuvo…

Female : Thaai paalin eerathil
Maarbil thavazhndhavan
Maarappu selaiyaai
Mannil kidappadha

Female : Udhirathai urukkiyae
Unadhu dhegam seidhenae
Uyiradhai udhariyae
Neeyum dhaan povadhaa?

Female : Meendum karuvoram
Unai alli serkavaa…
Kaalan nerungaamal
Thunai varava?

Female : Nee pogiraai
Thangamae nee pogiraai
Chellamae vaan pogiraai
Yaar pizhaiyo?

Female : Poo idhazhgal
Mounathil moozhguvadha?
Paal mazhalai
Paadaiyil veezhvadhuva…

Female : Thooliyil
Naan kanda unn mugham
Maalaigal soozhndhida
Kaanbadhuvaa…

Male : Thalaattilae
Thoongiya enn magan
Thaai enai neengiyum
Povadhuvaa?…

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா, தனுஜ் மேனன் மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன்

இசை அமைப்பாளர் : தனுஜ் மேனன்

பாடல் ஆசிரியர் : சபரிவாசன் ஷண்முகம்

ஆண் : நீ போகிறாய்
நண்பனே! நீ போகிறாய்
தோழனே! வான் போகிறாய்
யார் பிழையோ?

ஆண் : நீ போகிறாய்
நண்பனே! நீ போகிறாய்
தோழனே! வான் போகிறாய்
யார் பிழையோ?

ஆண் : பூ உதிரும்
புன்னகை தீயினிலா…!
தோல் தழுவும்
தோள்களில் தான் தனலா…

ஆண் : நாம் சிரித்தா
ஓசையும் ஓய்வதுவா?
தேர் சரிந்து
வீதியில் சாய்வதுவா?

ஆண் : பார்வைகள் நீ
வர ஏங்குதே!
பாதைகள் உன்
தடம் கேட்டிடுதே!

ஆண் : கிளைத்தான் போலவே
நட்பினில் சேர்ந்தோமடா…
பாதியில் நீ
முறிதல் முறையா?

பெண் : பாராயோ
ஒரு முறை பாராயோ விழியே…
விரல் தொடா
வாராயோ நீயும் உயிரே…

பெண் : எனதுயிரை அனுப்புகிறேன்
இமை திறந்து நீ வா! வா!
நீ இன்றி
நானும் ஏன்?

பெண் : எதிரினில் நீ நில்லாடா
என் பேர் சொல்லடா
தனியானேன்
உன் நிலா…

பெண் : ஆஆ… ஆஆஆ… ஆஆஆ…
அஆ… ஆஆஆ… ஆஆஆ…
கருவினிலே
சுமந்த உன்னை
தெருவினிலே பார்ப்பதுவோ…

பெண் : தாய் பாலின் ஈரத்தில்
மார்பில் தவழ்ந்தவன்
மாரப்பு சேலையாய்
மண்ணில் கிடப்பதா

பெண் : உதிரத்தை உருக்கியே
உனது தேகம் செய்தேனே
உயிரை உதறியே
நீயும் தான் போவதா?

பெண் : மீண்டும் கருவோரம்
உனை அல்லி சேர்க்கவா…
காலன் நெருங்காமால்
துணை வரவா?

பெண் : நீ போகிறாய்
தங்கமே நீ போகிறாய்
செல்லமே வான் போகிறாய்
யார் பிழையோ?

பெண் : பூ இடங்கள்
மௌனத்தில் மூழ்குவதா?
பால் மழலை
பாடையில் வீழ்வதுவா…

பெண் : தூளியில்
நான் கண்ட உன் முகம்
மாலைகள் சூழ்ந்திடா
காண்பதுவா…

ஆண் : தாலட்டிலே
தூங்கிய என் மகன்
தாய் எனை நீங்கியும்
போவதுவா?


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here