Singer : P. Leela

Music by : T. Chalapathi Rao

Lyrics by : Kannadasan

Humming : .…………….

Female : Paal kodutha thanangal sollum
Paarthiruntha kangal sollum
Sollukku porul ariyaar
Sollivittu odi vittar
Sollivittu odi vittar

Female : Nee thaaiyum illaiyaam
Avan saeiyum illaiyaam
Nee thaaiyum illaiyaam
Avan saeiyum illaiyaam
Sattathilae
Avar sattathilae
Ungal sondham kaanvillaiyaam
Nee thaaiyum illaiyaam
Avan saeiyum illaiyaam

Female : Pasuvai kooda annai endru
Paadam solgiraar
Than paal koduthu valarthaval
Thaaiyillai engiraar
Pasuvai kooda annai endru
Paadam solgiraar
Than paal koduthu valarthaval
Thaaiyillai engiraar

Female : Pillai kandru pola kadharum podhu
Thookki selgiraar
Ini karpanaiyil maganai kandu
Pesa solgiraar
Nee thaaiyum illaiyaam
Avan saeiyum illaiyaam

Female : Nee poovilandhu pottilandhu
Pona naalilae
Unai porumai kolla sonna
Pillai karuvil irundhaan
Nee poovilandhu pottilandhu
Pona naalilae
Unai porumai kolla sonna
Pillai karuvil irundhaan

Female : Nee kann thirandhu paartha podhu
Kaiyil irundhaan
Andru kandathellam kanavai pola
Odi marainthaan
Nee thaaiyum illaiyaam
Avan saeiyum illaiyaam

Female : Anbariyaa manidhar unnai
Aadavum vaithaar
Nee aadum bothu medai yeri
Kaalai murithaar
Anbariyaa manidhar unnai
Aadavum vaithaar
Nee aadum bothu medai yeri
Kaalai murithaar

Female : Nee kannizhandha velaiyilae
Kangal koduthaar
Nee kaanum varai paarthirunthu
Kannai parithaar
Nee thaaiyum illaiyaam
Avan saeiyum illaiyaam

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

முனங்கல் : ……………..

பெண் : பால் கொடுத்த தனங்கள் சொல்லும்
பார்த்திருந்த கண்கள் சொல்லும்
சொல்லுக்குப் பொருளறியார்
சொல்லிவிட்டு ஓடி விட்டார்
சொல்லிவிட்டு ஓடி விட்டார்

பெண் : நீ தாயுமில்லையாம்
அவன் சேயுமில்லையாம்
நீ தாயுமில்லையாம்
அவன் சேயுமில்லையாம்
சட்டத்திலே
அவர் சட்டத்திலே
உங்கள் சொந்தம் காணவில்லையாம்..
நீ தாயுமில்லையாம்
அவன் சேயுமில்லையாம்

பெண் : பசுவைக் கூட அன்னையென்று
பாடம் சொல்கிறார்
தன் பால் கொடுத்து வளர்த்தவள்
தாயில்லை என்கிறார்
பசுவைக் கூட அன்னையென்று
பாடம் சொல்கிறார்
தன் பால் கொடுத்து வளர்த்தவள்
தாயில்லை என்கிறார்

பெண் : பிள்ளை கன்று போல கதறும்போது
தூக்கிச் செல்கிறார் இனி
கற்பனையில் மகனைக் கண்டு
பேசச் சொல்கிறார்……..
நீ தாயுமில்லையாம்
அவன் சேயுமில்லையாம்

பெண் : நீ பூவிழந்து பொட்டிழந்து
போன நாளிலே
உனை பொறுமை கொள்ள சொன்ன
பிள்ளை கருவிலிருந்தான்..
நீ பூவிழந்து பொட்டிழந்து
போன நாளிலே
உனை பொறுமை கொள்ள சொன்ன
பிள்ளை கருவிலிருந்தான்..

பெண் : நீ கண் திறந்து பார்த்தபோது
கையில் இருந்தான்
அன்று கண்டதெல்லாம் கனவு போல
ஓடி மறைந்தான்…….
நீ தாயுமில்லையாம்
அவன் சேயுமில்லையாம்

பெண் : அன்பறியா மனிதர் உன்னை
ஆடவும் வைத்தார்
நீ ஆடும்போது மேடை ஏறி
காலை முறித்தார்
அன்பறியா மனிதர் உன்னை
ஆடவும் வைத்தார்
நீ ஆடும்போது மேடை ஏறி
காலை முறித்தார்

பெண் : நீ கண்ணிழந்த வேளையிலே
கண்கள் கொடுத்தார்
நீ காணும் வரை பார்த்திருந்து
கண்ணைப் பறித்தார்…,..
நீ தாயுமில்லையாம்
அவன் சேயுமில்லையாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here