Singer : K. J. Yesudas

Music by : Salil Chowdry

Lyrics by : Kannadasan

Male : Nee thaeyum nilaavo
En aathmaavin kanneero kanneero

Male : Nee thaeyum nilaavo
En aathmaavin kanneero kanneero
Nee anbil vantha aasai ullam
Naan athil vantha kanneer kulam
Maraigindratho en mana mangalm

Male : Thirumanangal sorkaththil
Nichchayikkapadugindrana
Pirivu engae nichayikkapadugindrathu
Adhai yaaridam ketpathu unnidame ketkindraen

Male : Naan kanneeril ketkindraen
Kalyaana deiveegamae pogaathae
Naan kanneeril ketkindraen
Kalyaana deiveegamae pogaathae
Naan thaalaattum thaleer poongodi
Yaen neeraadi karaigindratho
Maraigindratho en mana mangalam

Male : Nee oru vaarththai pesaathathenna
Un vizhi pookkal asaiyaathenna
Maraigindratho en mana mangalam
Maraigindratho en mana mangalam

Male : Nee thaeyum nilaavo
En aathmaavin kanneero kanneero
Nee thaeyum nilaavo
En aathmaavin kanneero kanneero

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நீ தேயும் நிலாவோ
என் ஆத்மாவின் கண்ணீரோ கண்ணீரோ

ஆண் : நீ தேயும் நிலாவோ
என் ஆத்மாவின் கண்ணீரோ கண்ணீரோ
நீ அன்பில் வந்த ஆசை உள்ளம்
நான் அதில் வந்த கண்ணீர் குளம்
மறைகின்றதோ என் மண மங்கலம்….

ஆண் : திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றன
பிரிவு எங்கே நிச்சயிக்கப்படுகின்றது
அதை யாரிடம் கேட்பது உன்னிடமே கேட்கின்றேன்

ஆண் : நான் கண்ணீரில் கேட்கின்றேன்
கல்யாண தெய்வீகமே போகாதே
நான் கண்ணீரில் கேட்கின்றேன்
கல்யாண தெய்வீகமே போகாதே
நான் தாலாட்டும் தளிர் பூங்கொடி
ஏன் நீராடி கரைகின்றதோ
மறைகின்றதோ என் மண மங்கலம்….

ஆண் : நீ ஒரு வார்த்தை பேசாததென்ன
உன் விழிப் பூக்கள் அசையாதென்ன
மறைகின்றதோ என் மண மங்கலம்….
மறைகின்றதோ என் மண மங்கலம்….

ஆண் : நீ தேயும் நிலாவோ
என் ஆத்மாவின் கண்ணீரோ கண்ணீரோ
நீ தேயும் நிலாவோ
என் ஆத்மாவின் கண்ணீரோ கண்ணீரோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here