Singer : T. M. Soundararajan

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Male : Anna….anna…..
Anna…..anna…anna…..

Male : Neenga nenachathu nadanthiduchu
Puratchi thalaivar kaiyil naadirukku
Anna….neenga nenachathu nadanthiduchu
Puratchi thalaivar kaiyil naadirukku
Yaezhai eliyavarkku kaalam kanithirukku
Needhikkum nermaikkum ippa mathippirukku

Male : Anna….neenga nenachathu nadanthiduchu
Puratchi thalaivar kaiyil naadirukku

Male : Dharmaththin kodiyingae
Vinnai mutti parakkuthunga
Thozhilaali vivasaayi
Pillaikkutti sirikkuthunga

Male : Dharmaththin kodiyingae
Vinnai mutti parakkuthunga
Thozhilaali vivasaayi
Pillaikkutti sirikkuthunga

Male : Uzhaipporkku inbangal thaedi varuthu
Adharkkaana nerangal koodi varuthu

Male : Kodukkindra kai
Thunbam thudaikkindra kai
Makkal nampikkai kondingu
Ippa arasaaluthu

Male : Anna….neenga nenachathu nadanthiduchu
Puratchi thalaivar kaiyil naadirukku

Male : Nallathu yaar seithaalum
Nenjam kulira pesungal
Kuraiyirunthaal pizhaiyirunthaal
Suttikaatti sollunga

Male : Oor koodi izhuththaal thaeru varalaam
Ellorkkum adhanaal peru varalaam

Male : Anna….neenga nenachathu nadanthiduchu
Puratchi thalaivar kaiyil naadirukku

Male : Vallal pol unmaiyilae
Vaazhvathu ingae yaarunga
Oorariyum ulagariyum
Annan MGR nga

Male : Avaraattam ulagaththil aalaethunga
Oru sooriyan endru oru chandhiran intha vaiyaththil
Innondru yaedhu kidaiyaathunga

Male : Anna….neenga nenachathu nadanthiduchu
Puratchi thalaivar kaiyil naadirukku
Anna…anna……..anna……

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அண்ணா…..அண்ணா…….
அண்ணா…..அண்ணா….அண்ணா….

ஆண் : நீங்க நெனச்சது நடந்திடுச்சு
புரட்சித் தலைவர் கையில் நாடிருக்கு
அண்ணா…..நீங்க நெனச்சது நடந்திடுச்சு
புரட்சித் தலைவர் கையில் நாடிருக்கு
ஏழை எளியவர்க்கு காலம் கனிந்திருக்கு
நீதிக்கும் நேர்மைக்கும் இப்ப மதிப்பிருக்கு

ஆண் : அண்ணா…..நீங்க நெனச்சது நடந்திடுச்சு
புரட்சித் தலைவர் கையில் நாடிருக்கு

ஆண் : தர்மத்தின் கொடியிங்கே
விண்ணை முட்டிப் பறக்குதுங்க
தொழிலாளி விவசாயி
பிள்ளைக்குட்டி சிரிக்குதுங்க

ஆண் : தர்மத்தின் கொடியிங்கே
விண்ணை முட்டிப் பறக்குதுங்க
தொழிலாளி விவசாயி
பிள்ளைக்குட்டி சிரிக்குதுங்க

ஆண் : உழைப்போர்க்கு இன்பங்கள் தேடி வருது
அதற்கான நேரங்கள் கூடி வருது

ஆண் : கொடுக்கின்ற கை
துன்பம் துடைக்கின்ற கை
மக்கள் நம்பிக்கை கொண்டிங்கு
இப்ப அரசாளுது…….

ஆண் : அண்ணா…..நீங்க நெனச்சது நடந்திடுச்சு
புரட்சித் தலைவர் கையில் நாடிருக்கு

ஆண் : நல்லது யார் செய்தாலும்
நெஞ்சம் குளிர பேசுங்கள்
குறையிருந்தால் பிழையிருந்தால்
சுட்டிக்காட்டி சொல்லுங்க

ஆண் : ஊர் கூடி இழுத்தால் தேரு வரலாம்
எல்லோர்க்கும் அதனால் பேரு வரலாம்

ஆண் : அண்ணா…..நீங்க நெனச்சது நடந்திடுச்சு
புரட்சித் தலைவர் கையில் நாடிருக்கு

ஆண் : வள்ளல் போல் உண்மையிலே
வாழ்வது இங்கே யாருங்க
ஊரறியும் உலகறியும்
அண்ணன் எம் ஜி ஆர்ருங்க

ஆண் : அவராட்டம் உலகத்தில் ஆளேதுங்க
ஒரு சூரியன் என்று ஒரு சந்திரன் இந்த வையத்தில்
இன்னொன்று ஏது கிடையாதுங்க.

ஆண் : அண்ணா…..நீங்க நெனச்சது நடந்திடுச்சு
புரட்சித் தலைவர் கையில் நாடிருக்கு
அண்ணா…அண்ணா…..அண்ணா…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here