Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Neengal aththanai perum
Uththamarthaanaa sollungal
Ungal aasai nenjai
Thottu paarththu kollungal…….

Male : Neengal aththanai perum
Uththamarthaanaa sollungal
Ungal aasai nenjai
Thottu paarththu kollungal…….

Male : Hae hae ullavanellaam nallavanaavaan
Illaathavanae pollaathavanaam bhoomiyilae
Pinnae nanmai theemai enbathu enna
Paava punniyam enbathu enna paadhaiyilae

Male : Neengal aththanai perum
Uththamarthaanaa sollungal
Ungal aasai nenjai
Thottu paarththu kollungal…….

Male : Aandavanae vendugiraen naan
Chorus : Harae ram harae ram ram
Male : Vendiyathai thedugiraen naan
Chorus : Harae ram harae ram ram

Male and Chorus :
Aandavanae vendugiraen naan
Chorus : Harae ram harae ram ram
Male and Chorus :
Vendiyathai thedugiraen naan
Chorus : Harae ram harae ram ram

Male : Thiruneeru poosikkondu devaaram paadu
Panangaasu sonthamillai pagavaanai naadu
Kaiyodu kondu vantha porul enna kooru
Kadai naalil vaaraathu kayilulla odu

Male : Eduththavnukku ennam nooru
Koduththavanukku ennam kodi naalellam
Pothum pothum enbavanillai
Vendum vendum
Enbavanthaanae oorellaam

Male : Neengal aththanai perum
Uththamarthaanaa sollungal
Ungal aasai nenjai
Thottu paarththu kollungal…….

Male : Allaavin aasi undu ellorum vaazhga
Ellorkkum selvam tharum allaavae vaazhga
Allaavin aasi undu ellorum vaazhga
Ellorkkum selvam tharum allaavae vaazhga
Neruppindri pugaiyaathu pugaiyae nee vaazhga
Neeyindri naanillai nee kooda vaazhga

Male : Ellaam avanae enbathu vedham
Engum avane endroru paadam padiyungal
Kadaiyum avanaal vanthathuthaanae
Udaiyum avanae thanthathuthaanae pidiyungal

Male : Neengal aththanai perum
Uththamarthaanaa sollungal
Ungal aasai nenjai
Thottu paarththu kollungal…….

Male : Aandavanae vendugiraen naan
Chorus : Allah allah hoom
Male : Vendiyathai thedugiraen naan
Chorus : Allah allah hoom

Male and Chorus :
Aandavanae vendugiraen naan
Chorus : Allah allah hoom
Male and Chorus :
Vendiyathai thedugiraen naan
Chorus : Allah allah hoom

Male : Selavaagum endruthaanae selvam endraaro
Chorus : Selvam endraaro
Male : Thaangaathu endruthaanae thangam endraaro
Chorus : Thangam endraaro
Male : Ponnaaga piranthavarkku pillai undaagum
Pon ondru neengal thanthaal ondru rendaagum

Male : Vidhaiyai podu sediyai paaru
Vilaiyum porulai naalai paaru paarammaa
Poda poda mulaikkum paaru
Porumai vendum medhuvaai paaru ponnammaa

Male : Neengal aththanai perum
Uththamarthaanaa sollungal
Ungal aasai nenjai
Thottu paarththu kollungal…….

Male : Hae hae ullavanellaam nallavanaavaan
Illaathavanae pollaathavanaam bhoomiyilae
Pinnae nanmai theemai enbathu enna
Paava punniyam enbathu enna paadhaiyilae

Male : Neengal aththanai perum
Uththamarthaanaa sollungal
Ungal aasai nenjai
Thottu paarththu kollungal…….

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நீங்கள் அத்தனைபேரும்
உத்தமர்தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத்
தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்

ஆண் : நீங்கள் அத்தனைபேரும்
உத்தமர்தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத்
தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்

ஆண் : ஹே ஹே உள்ளவனெல்லாம் நல்லவனாவான்
இல்லாதவனே பொல்லாதவனாம் பூமியிலே
பின்னே நன்மை தீமை என்பது என்ன
பாவபுண்ணியம் என்பது என்ன பாதையிலே

ஆண் : நீங்கள் அத்தனைபேரும்
உத்தமர்தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத்
தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்

ஆண் : ஆண்டவனை வேண்டுகிறேன் நான்
குழு : ஹரே ராம் ஹரே ராம் ராம்
ஆண் : வேண்டியதைத் தேடுகிறேன் நான்
குழு : ஹரே ராம் ஹரே ராம் ராம்

ஆண் மற்றும் குழு :
ஆண்டவனை வேண்டுகிறேன் நான்
குழு : ஹரே ராம் ஹரே ராம் ராம்
ஆண் மற்றும் குழு :
வேண்டியதைத் தேடுகிறேன் நான்
குழு : ஹரே ராம் ஹரே ராம் ராம்

ஆண் : திருநீறு பூசிக்கொண்டு தேவாரம் பாடு
பணங்காசு சொந்தமில்லை பகவானை நாடு
கையோடு கொண்டு வந்த பொருள் என்ன கூறு
கடை நாளில் வாராது கையிலுள்ள ஓடு

ஆண் : எடுத்தவனுக்கு எண்ணம் நூறு
கொடுத்தவனுக்கு எண்ணம் கோடி நாளெல்லாம்
போதும் போதும் என்பவனில்லை
வேண்டும் வேண்டும்
என்பவன்தானே ஊரெல்லாம்

ஆண் : நீங்கள் அத்தனைபேரும்
உத்தமர்தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத்
தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்

ஆண் : அல்லாவின் ஆசி உண்டு எல்லோரும் வாழ்க
எல்லோர்க்கும் செல்வம் தரும் அல்லாவே வாழ்க
அல்லாவின் ஆசி உண்டு எல்லோரும் வாழ்க
எல்லோர்க்கும் செல்வம் தரும் அல்லாவே வாழ்க
நெருப்பின்றி புகையாது புகையே நீ வாழ்க
நீயின்றி நானில்லை நீ கூட வாழ்க

ஆண் : எல்லாம் அவனே என்பது வேதம்
எங்கும் அவனே என்றொரு பாடம் படியுங்கள்
கடையும் அவனால் வந்ததுதானே
உடையும் அவனே தந்ததுதானே பிடியுங்கள்

ஆண் : நீங்கள் அத்தனைபேரும்
உத்தமர்தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத்
தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்

ஆண் : ஆண்டவனை வேண்டுகிறேன் நான்
குழு : அல்லா அல்லா ஹூம்
ஆண் : வேண்டியதைத் தேடுகிறேன் நான்
குழு : அல்லா அல்லா ஹூம்

ஆண் மற்றும் குழு :
ஆண்டவனை வேண்டுகிறேன் நான்
குழு : அல்லா அல்லா ஹூம்
ஆண் மற்றும் குழு :
வேண்டியதைத் தேடுகிறேன் நான்
குழு : அல்லா அல்லா ஹூம்

ஆண் : செலவாகும் என்றுதானே செல்வம் என்றாரோ
குழு : செல்வம் என்றாரோ
ஆண் : தங்காது என்றுதானே தங்கம் என்றாரோ
குழு : தங்கம் என்றாரோ
ஆண் : பொண்ணாகப் பிறந்தவர்க்கு பிள்ளை உண்டாகும்
பொன் ஒன்று நீங்கள் தந்தால் ஒன்று ரெண்டாகும்

ஆண் : விதையைப் போடு செடியைப் பாரு
விளையும் பொருளை நாளை பாரு பாரம்மா
போடப் போட முளைக்கும் பாரு
பொறுமை வேண்டும் மெதுவாய் பாரு பொன்னம்மா

ஆண் : நீங்கள் அத்தனைபேரும்
உத்தமர்தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத்
தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்

ஆண் : ஹே ஹே உள்ளவனெல்லாம் நல்லவனாவான்
இல்லாதவனே பொல்லாதவனாம் பூமியிலே
பின்னே நன்மை தீமை என்பது என்ன
பாவபுண்ணியம் என்பது என்ன பாதையிலே

ஆண் : நீங்கள் அத்தனைபேரும்
உத்தமர்தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத்
தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here