Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Neengal aththanai perum
Uththamarthaanaa sollungal
Neengal aththanai perum
Uththamarthaanaa sollungal
Ungal aasai nenjai thottu
Paarththu kollungal haehae…..

Male : Ullavarellaam nallavaraavaar
Illaathavare pollaathavaraam bhoomiyilae
Pinnae nanmai theemai enbathu enna
Paava punniyam enbathu enna paathaiyilae

Male : Neengal aththanai perum
Uththamarthaanaa sollungal
Ungal aasai nenjai thottu
Paarththu kollungal haehae…..

Male : Azhagaaga thondrum
Oru karunaagam kandaen
Aniyaayam seipavarakku
Mariyaathai kandaen

Male : Sathikaara koottam ondru
Sabayaera kandaen
Thvarendru ennai sollum
Parithaabam kandaen

Male : Kollaiyadippon vallalai polae
Kovilaiidippon saamiyai polae vaazhgindraan
Oozhal seipavan yokkiyan polae
Oorai yaeippavan uththaman polae kaangindraan

Male : Neengal aththanai perum
Uththamarthaanaa sollungal
Ungal aasai nenjai thottu
Paarththu kollungal haehae…..

Male : Sattaththin pinnaal nindru sathiraadum koottam
Thalaimaari aadum indru adhigaara aattam
Endraikkum melidaththil ivar meethu nottam
Ippothu puriyaathu edhirkaalam kaattum

Male : Naadaga vesham kooda varaathu
Naalaiya ulgam
Ivarai vidaathu solgindrean
Pala naal thirudan oru naal siraiyil
Paavaam seithavan
Thalaimurai varaiyil paarkkindrean

Male : Neengal aththanai perum
Uththamarthaanaa sollungal
Neengal aththanai perum
Uththamarthaanaa sollungal
Ungal aasai nenjai thottu
Paarththu kollungal…..

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்
நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்
பார்த்துக் கொள்ளுங்கள் ஹேஹே…

ஆண் : உள்ளவரெல்லாம் நல்லவராவார்
இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே
பின்னே நன்மை தீமை என்பது என்ன
பாவ புண்ணியம் என்பது என்ன பாதையிலே

ஆண் : நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்
பார்த்துக் கொள்ளுங்கள் ஹேஹே…

ஆண் : அழகாகத் தோன்றும்
ஒரு கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவர்க்கும்
மரியாதை கண்டேன்

ஆண் : சதிகாரக் கூட்டம் ஒன்று
சபையேறக் கண்டேன்
தவறென்று என்னைச் சொல்லும்
பரிதாபம் கண்டேன்

ஆண் : கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே
கோவிலை இடிப்போன் சாமியைப் போலே வாழ்கின்றான்
ஊழல் செய்பவன் யோக்கியன் போலே
ஊரை ஏய்ப்பவன் உத்தமன்
போலே காண்கின்றான்

ஆண் : நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்
பார்த்துக் கொள்ளுங்கள்……..

ஆண் : சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்
தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம்
என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்
இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்

ஆண் : நாடக வேஷம் கூட வராது
நாளைய உலகம்
இவரை விடாது சொல்கின்றேன்
பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்
பாவம் செய்தவன்
தலைமுறை வரையில் பார்க்கின்றேன்

ஆண் : நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்
நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்
பார்த்துக் கொள்ளுங்கள்……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here