Singer : P. Susheela

Music by : G. Ramanathan

Lyrics by : Kannadasan

Female : Nee illadha ulagathilae
Nimmadhi illai
Un ninaivilladha idhayathilae
Sindhanaiyillai sindhanaiyillai

Female : Kaayum nila vaanil vandhaal
Kannurangavillai
Kaayum nila vaanil vandhaal
Kannurangavillai
Unnai kandu konda naal mudhalaai
Pennurangavillai
Pennurangavillai

Female : Un mugathai paarpadharkkae
Kangal vandhadhu
Un maarbil saaivadharkkae
Udal valarndhadhu
Kanni manam unakkenavae
Kaathirukkudhu
Kanni manam unakkenavae
Kaathirukkudhu
Indha kaaval thaandi aaval unai
Thedi oodudhu thedi oodudhu

Female : Pon vilangai vendumendrae
Pootti kondaenae
Unnai purindha kooda
Siraiyil vandhu maati kondenae
Indru naalai endru naalai
Endru ennukindrenae
Indru naalai endru naalai
Endru ennukindrenae
Naan endrum undhan elllaiyilae
Vandhiduvenae vandhiduvenae

Female : Nee illadha ulagathilae
Nimmadhi illai
Un ninaivilladha idhayathilae
Sindhanaiyillai sindhanaiyillai

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : நீ இல்லாத உலகத்திலே
நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே
சிந்தனையில்லை சிந்தனையில்லை

பெண் : காயும் நிலா வானில் வந்தால்
கண்ணுறங்கவில்லை
காயும் நிலா வானில் வந்தால்
கண்ணுறங்கவில்லை
உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய்
பெண்ணுறங்கவில்லை
பெண்ணுறங்கவில்லை…..

பெண் : உன் முகத்தைப் பார்ப்பதற்கே
கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே
உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது
இந்தக் காவல் தாண்டி ஆவல் உன்னைத்
தேடி ஓடுது தேடி ஓடுது

பெண் : பொன் விலங்கை வேண்டுமென்றே
பூட்டிக் கொண்டேனே
உன்னைப் புரிந்த கூட சிறையில்
வந்து மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை என்று
நாளை எண்ணுகின்றேனே
இன்று நாளை என்று நாளை என்று
நாளை எண்ணுகின்றேனே
நான் என்றும் உந்தன் எல்லையிலே
வந்திடுவேனே வந்திடுவேனே

பெண் : நீ இல்லாத உலகத்திலே
நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே
சிந்தனையில்லை சிந்தனையில்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here