Singers : Yazin Nizar and Madhura Dhara Talluri

Music by : Arvind Mano

Male : Neeyum isaiyum indri ulagam
Ulagamillaiyae
Kaalam karaiya dhooram maraiya
Kaathukkidakkiren

Male : Aayiram naal nilavo
Or nodiyil anaindhida
Meendum ingae udhithida
Kaathukkidakkiren

Male : Aadhi enavum andham enavum
Unai ninaithirundhen
Paadhi vazhiyin pirivu mudiya
Kaathukkidakkiren

Male : Natpukkullae …..natpukkullae
Andru vidhaitha nodigalo
Yugangalaai indru valarndhu kidakka
Kanavilae neeyum varaindha maaligai
Isaiyilae ingu naanum nirappa

Male : Ninaivilae kidakkavaa
Kanavinai marandhuvidavaa…
Valiyilae vasikkavaa
Unadhu badhilukku
Naan kaathukkidakkiren….

Female : Hmm mm mm
Hmm mm mm
Hmm mm mm mm mm mm
Hmm mm mm
Hmm mm mm
Hmm mm mm mm mm mm mm mm

Female : Kaadhal endru andru
Nee sonna nodiyinil
Udaindhadhae endhan
Ulagam muzhudhum

Female : Dhooram sendru
Adhai yosikkum pozhudhinil
Kuzhambudhae endhan
Ilaiya manadhum

Female : Theliyavae idam kodu
Adhuvarai porumai kolladaa
Kanavinai thodarndhidu
Enadhu mudivukku
Naan kaathukkidakkiren….

Male : Vaanai thirandhu endhan nilavu
MeeNdum udhikkudhae

Female : Nenjam thirandhu ennul nuzhaindhu
Thulli kudhikkudhae

Male : Oviyamaai oru naal

Female : Paadal ena oru naal

Male : Thoorigaiyum isaiyum

Female : Koodi kalandhadhae

Male : Boomi muzhudhum kaadhal perugi
Vazhiyudhu uyirae

Female : Vaazhkkai ezhudhum ezhudhugolil
Inbam niraiyudhae

பாடகர்கள் : யாழின் நிசார் மற்றும் மதுரா தாரா தல்லூரி

இசை அமைப்பாளர் : அரவிந்த் மனோ

ஆண் : நீயும் இசையும் இன்றி உலகம்
உலகமில்லையே
காலம் கரைய தூரம் மறைய
காத்துக்கிடக்கிறேன்

ஆண் : ஆயிரம் நாள் நிலவோ
ஓர் நொடியில் அணைந்திட
மீண்டும் இங்கே உதித்திடக்
காத்துக்கிடக்கிறேன்

ஆண் :ஆதி எனவும் அந்தம் எனவும்
உனை நினைத்திருந்தேன்
பாதி வழியின் பிரிவு முடியக்
காத்துக்கிடக்கிறேன்

ஆண் : நட்புக்குள்ளே …நட்புக்குள்ளே
அன்று விதைத்த நொடிகளோ
யுகங்களாய் இன்று வளர்ந்து கிடக்க
கனவிலே நீயும் வரைந்த மாளிகை
இசையிலே இங்கு நானும் நிரப்ப

ஆண் : நினைவிலே கிடக்கவா..
கனவினை மறந்துவிடவா..
வலியிலே வசிக்கவா…
உனது பதிலுக்கு நான் காத்துக்கிடக்கிறேன்…

பெண் : …………………………….

பெண் : காதல் என்று அன்று
நீ சொன்ன நொடியினில்
உடைந்ததே எந்தன்
உலகம் முழுதும்

பெண் : தூரம் சென்று அதை
யோசிக்கும் பொழுதினில்
குழம்புதே எந்தன்
இளைய மனதும்

பெண் : தெளியவே இடம் கொடு
அதுவரை பொறுமை கொள்ளடா
கனவினைத் தொடர்ந்திடு
எனது முடிவுக்கு
நான் காத்துக்கிடக்கிறேன்…

ஆண் : வானைத் திறந்து எந்தன் நிலவு
மீண்டும் உதிக்குதே

பெண் : நெஞ்சம் திறந்து என்னுள் நுழைந்து
துள்ளிக் குதிக்குதே

ஆண் : ஓவியமாய் ஒரு நாள்

பெண் : பாடல் என ஒரு நாள்

ஆண் : தூரிகையும் இசையும்

பெண் : கூடிக் கலந்ததே..

ஆண் : பூமி முழுதும் காதல் பெருகி
வழியுது உயிரே

பெண் : வாழ்க்கை எழுதும் எழுதுகோலில்
இன்பம் நிறையுதே..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here