Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Shyam
Lyrics by : Pattukottai Dhandayuthapani
Female : ……………….
Male : ………………..
Female : Nenjaththil poraadum ennangal
Neegaamal nee thantha mogam allavo
Konjum mozhi pesum penmai oli veesa
Vaazhvinil thaenaaga nee vara vendum
Female : Vaattidum aasai theera nee thoda vendum
Thaapaththai naanae sollavo
Male : Nenjaththil poraadum ennangal
Neegaamal nee thantha mogam allavo
Konjum mozhi pesum penmai oli veesa
Vaazhvinil thaenaaga nee vara vendum
Male : Vaattidum aasai theera nee thoda vendum
Thaapaththai naanae sollavo
Male : Kaimaiyin theeyil vizhunthitta poovum
Kaalaiyin maarbil kudiyearalaamo
Female : Kanivodu kadhal kaithotta velai
Kalyaana medai alangarikkaatho
Male : Idhayaththi paaram irangidum neram
Female : Irumanam koodum unarchchiyil aadum
Male : Varum vellamum ilam ullamum
Orae vegamaai odaatho
Female : Adhan sangamam perum mangalam
Uyir geedhamaai paadaatho
Male : Nenjaththil poraadum ennangal
Neegaamal nee thantha mogam allavo
Konjum mozhi pesum penmai oli veesa
Vaazhvinil thaenaaga nee vara vendum
Male : Vaattidum aasai theera nee thoda vendum
Thaapaththai naanae sollavo
Male : Enai thedum paavai
Unai naadum pothu
Thoondilil meenaai thudippathum yaeno
Male : Paruvaththin yaekkam thulir vidum pothu
Female : Uravinai thedum
Unarchchigal mothum
Male : Malar medaiyil madhu odaiyil
Punal aaduvom vaaraayo
Female : Unai kandathum manam sonnathu
Sugam theduvom vaaraayo
Female : Nenjaththil
Male : Poraadum ennangal
Female : Neengaamal nee thantha mogam allavo
Male : Konjum mozhi pesum
Female : Penmai oli veesa
Male : Vaazhvinil thaenaaga nee vara vendum
Female : Vaattidum aasai theera nee thoda vendum
Both : Thaapaththai naanae sollavo
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சியாம்
பாடலாசிரியர் : பட்டுகோட்டை தண்டாயுதபாணி
பெண் : …………………….
ஆண் : ……………………………
பெண் : நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளி வீச
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்
பெண் : வாட்டிடும் ஆசை தீர நீ தொட வேண்டும்
தாபத்தை நானே சொல்லவோ
ஆண் : நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளி வீசி
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்.
ஆண் : வாட்டிடும் ஆசை தீர நீ தொட வேண்டும்
தாபத்தை நானே சொல்லவோ……..ஓஓஓ…
ஆண் : கைமையின் தீயில் விழுந்திட்ட பூவும்
காளையின் மார்பில் குடியேறலாமோ
பெண் : கனிவோடு காதல் கைத்தொட்ட வேளை
கல்யாண மேடை அலங்கரிக்காதோ
ஆண் : இதயத்தின் பாரம் இறங்கிடும் நேரம்
பெண் : இருமனம் கூடும் உணர்ச்சியில் ஆடும்
ஆண் : வரும் வெள்ளமும் இளம் உள்ளமும்
ஒரே வேகமாய் ஓடாதோ
பெண் : அதன் சங்கமம் பெறும் மங்கலம்
உயிர் கீதமாய் பாடாதோ
ஆண் : நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளி வீசி
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்
ஆண் : வாட்டிடும் ஆசை தீர நீ தொட வேண்டும்
தாபத்தை நானே சொல்லவோ
ஆண் : எனைத் தேடும் மாது எதிர் வந்தபோது
ஏழை என் ஆசை கடல் ஆகலாமோ
பெண் : துணை தேடும் பாவை
உனை நாடும் போது
தூண்டிலில் மீனாய் துடிப்பதும் ஏனோ
ஆண் : பருவத்தின் ஏக்கம் துளிர் விடும் போது
பெண் : உறவினைத் தேடும்
உணர்ச்சிகள் மோதும்
ஆண் : மலர் மேடையில் மது ஓடையில்
புனல் ஆடுவோம் வாராயோ
பெண் : உனைக் கண்டதும் மனம் சொன்னது
சுகம் தேடுவோம் வாராயோ
பெண் : நெஞ்சத்தில்
ஆண் : போராடும் எண்ணங்கள்
பெண் : நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
ஆண் : கொஞ்சும் மொழி பேசும்
பெண் : பெண்மை ஒளி வீச
ஆண் : வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்.
பெண் : வாட்டிடும் ஆசை தீர நீ தொட வேண்டும்
இருவர் : தாபத்தை நானே சொல்லவோ…