Singer : P. Susheela

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Vaali

Female : Ha ha haaa..ha ha haaa…aaa..
Ho ho ho oooo ho ho ho ooo

Female : Nenjae nee poo saedhiyai solla
Nanum varuven meedhiyai solla
Nenjae nee poo saedhiyai solla
Nanum varuven meedhiyai solla
Vaazhvae nee vaa vaasalil mella
Kaalgalum ingae kann vazhi sella
Nenjae nee poo saedhiyai solla
Nanum varuven meedhiyai solla

Female : Maalai varamal iravu varadhoo
Malaiyidamal uravu varadhoo
Thoodhu vidaamal aasai vidadhoo
Thunaivan illaamal thookkam vaaradhoo

Female : Aayiram kelvi unnidam ketten
Vidai kidaikaamal urangida maatten
Poovizhi sivakka sevvidhazh velukka
Noolidai ilaikka naadagam nadakka

Female : Nenjae nee poo saedhiyai solla
Nanum varuven meedhiyai solla
Haa..aaaa…haa..aaa..haa…aa…

Female : Maaligai veliyil janaki nindraal
Maamani mannan ramanai kandaal
Paarvaigal vazhiyae vaarthaigalaada
Paavalan kamban paatinil paada

Female : Naanadhu polae kaadhalilae vizhundhen
Naayagan peyaraal kaaviyam varaindhen
Naal vazhi ondraai porundhidum thaedhi
Naan oru paadhi avanoru paadhi

Female : Nenjae nee poo saedhiyai solla
Nanum varuven meedhiyai solla

பாடகி :  பி. சுசீலா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : ஹா..ஹா..ஹா ..ஹா
ஹா..ஹா..ஹா ..ஹா
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

பெண் : நெஞ்சே நீ போ சேதியை சொல்ல
நானும் வருவேன் மீதியைச் சொல்ல
நெஞ்சே நீ போ சேதியை சொல்ல
நானும் வருவேன் மீதியைச் சொல்ல
வாழ்வே நீ வா வாசலில் மெல்ல
கால்களும் இங்கே கண் வழி செல்ல..
நெஞ்சே நீ போ சேதியை சொல்ல
நானும் வருவேன் மீதியைச் சொல்ல

பெண் : மாலை வராமல் இரவு வராதோ
மாலையிடாமல் உறவு வராதோ
தூது விடாமல் ஆசை விடாதோ
துணைவனில்லாமல் தூக்கம் வாராதோ

பெண் : ஆயிரம் கேள்வி உன்னிடம் கேட்டேன்
விடை கிடைக்காமல் உறங்கிட மாட்டேன்
பூவிழி சிவக்க செவ்விதழ் வெளுக்க
நூலிடை இளைக்க நாடகம் நடக்க…

பெண் : நெஞ்சே நீ போ சேதியை சொல்ல
நானும் வருவேன் மீதியைச் சொல்ல
ஹா..ஹா..ஹா ..ஹா
ஹா..ஹா..ஹா ..ஹா

பெண் : மாளிகை வெளியில் ஜானகி நின்றாள்
மாமணி மன்னன் ராமனைக் கண்டாள்
பார்வைகள் வழியே வார்த்தைகளாட
பாவலன் கம்பன் பாட்டினில் பாட

பெண் : நானது போலே காதலிலே விழுந்தேன்
நாயகன் பெயரால் காவியம் வரைந்தேன்
நால்விழி ஒன்றாய் பொருந்திடும் தேதி
நானொரு பாதி அவனொரு பாதி……

பெண் : நெஞ்சே நீ போ சேதியை சொல்ல
நானும் வருவேன் மீதியைச் சொல்ல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here