Singer : Rajkumar Bharathi

Music by : L. Vaidyanathan

Male : Nenjil uramum indri
Nermai thiramum indri
Vanjanai solvaaradi kiliyae
Vaai sollil veeraradi kiliyae
Vaai sollil veeraradi

Male : Koottaththil koodi nidru koovi pidhattralandri
Koottaththil koodi nidru koovi pidhattralandri
Naattaththil kollaaradi kiliyae
Naalil marappaaradi kiliyae
Naalil marappaaradi

Male : Uppendrum seeni endrum
Ullnaattu selaiyendrum
Uppendrum seeni endrum
Ullnaattu selaiyendrum
Seppi thirivaaradi kiliyae
Sevathriyaaradi Kiliyae
Seivathariyaaradi

Male : Pazhamai pazhamaiyendru
Paavanai pesa landri
Pazhamai pazhamaiyendru
Paavanai pesa landri
Pazhamaiyiruntha nilai kiliyae
Paamarar yaedharivaar kiliyae
Paamarar yaedharivaar

Male : Sontha sagothararkal
Thunbaththil saathal kandum
Sontha sagothararkal
Thunbaththil saathal kandum
Sinthai rangaaradi kiliyae
Semmai maranthaaradi kiliyae
Semmai maranthaaradi

Male : Thaayai kollum panjaththai
Thadukka muyarchiyuraar
Thaayai kollum panjaththai
Thadukka muyarchiyuraar
Vaayai thiranthu summaa
Kiliyae vanthae maadharamenpar
Vanthae maadharamenpar

பாடகர் : ராஜ்குமார் பாரதி

இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்

ஆண் : நெஞ்சில் உரமும் இன்றி
நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே…
வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி

ஆண் : கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றலன்றி
கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே
நாளில் மறப்பாரடி கிளியே நாளில் மறப்பாரடி

ஆண் : உப்பென்றும் சீனி என்றும்
உள்நாட்டு சேலையென்றும்
உப்பென்றும் சீனி என்றும்
உள்நாட்டு சேலையென்றும்
செப்பித் திரிவாரடி கிளியே…
செய்வதறியாரடி கிளியே… செய்வதறியாரடி

ஆண் : பழமை பழமை யென்று
பாவனை பேச லன்றிப்
பழமை பழமை யென்று
பாவனை பேச லன்றிப்
பழமையிருந்த நிலை கிளியே
பாமரர் ஏதறிவார்…கிளியே பாமரர் ஏதறிவார்

ஆண் : சொந்த சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும்
சொந்த சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே செம்மை மறந்தாரடி

ஆண் : தாயைக் கொல்லும் பஞ்சத்தைத்
தடுக்க முயற்சியுறார்
தாயைக் கொல்லும் பஞ்சத்தைத்
தடுக்க முயற்சியுறார்
வாயைத் திறந்து சும்மா கிளியே
வந்தே மாதரமென்பார் வந்தே மாதரமென்பார்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here