Singers : Madan Gowri ft.  and Anthakudi Ilayaraja

Music by : Bala Raavanan

Lyrics by : Ra. Thanikodi

Male : Ye makka ye raasaa
Ooroda uravoda nesaa
Vaa makka maharaasaa
Varalaara nee maathu mass ah

Male : Ye makka ye raasaa
Ooroda uravoda nesaa
Vaa makka maharaasaa
Varalaara nee maathu mass ah

Male : Adai kozhi paravai dhaan da
Aagaayam ariyaadhudaa
Parundhoda modhum bodhu
Thurumpaagum vaanam dhaan da

Male : Aaraanju aaraanju paarenda
Yedaanda ezhuthellaam needhaan da

Male : Inamenna niramenna avanenna ivanenna
Anaivarum samamena vazhi seiya purappadu
Ulaguku uriyavan viyarvayai vedhachavan
Iraivanai vidavum melayinnu sollikkodu

Male : Inamenna niramenna avanenna ivanenna
Anaivarum samamena vazhi seiya purappadu
Ulaguku uriyavan viyarvayai vedhachavan
Iraivanai vidavum melayinnu sollikkodu

Male : Maanam endrae vendrenae
Maanam endrae vendrenae….ae….ae…
Maanam endrae vendrenae..ae….

Male : Ye maiyaala varnam senjaa vaazhthu sollu
Ye poiyaala varnam senjaa eththi thallu
Ye maiyaala varnam senjaa vaazhthu sollu
Ye poiyaala varnam senjaa eththi thallu

Male : Ellorum samamaaga irundhaa dhaan
Nermai needhi
Illaadha saadhikku pagai yenda
Muttaa moodhi

Male : Ye sumai sumandhavan parambaraiye
Thala vidhiyoru punai kadhaiye
Imai thiranthidu erimalaiye
Ezhu ezhuthidu viduthalaiye

Male : Arasaanga mangune
Adhigaara kangaane
Edhir kelvi ketkaatti
Ethiraava unakkae nee

Male : Pala nooraanda ulla kovamada
Thottu paarenda naa raavanan da
Pala nooraanda ulla kovamada
Thottu paarka sollu naa raavanan da

Male : Hey thagudhium thiramaiyum
Porappula irukkudhaa
Podaniyila adichu nee kalangadidaa
Arinjana njaaniyaa arakkanin inamena
Uruttuna urutta nee purakkanidaa

Male : Ye thundaana sambugargal sollaagu nee
Ye rendaana kattai viral villaagu nee

Male : Marupadi saathiram adhu idhu enbavan
Thola urichu paraiya adidaa

பாடகர்கள் : மதன் கௌரி மற்றும் அந்தக்குடி இளையராஜா

இசை அமைப்பாளர் : பால இராவணன்

பாடல் ஆசிரியர் : ரா. தனிக்கொடி

ஆண் : ஏ மக்கா ஏ ராசா
ஊரோட உறவோட நேசா
வா மக்கா மகராசா
வரலாற நீ மாத்து மாஸா

ஆண் : ஏ மக்கா ஏ ராசா
ஊரோட உறவோட நேசா
வா மக்கா மகராசா
வரலாற நீ மாத்து மாஸா

ஆண் : அடை கோழி பறவை தான்டா
ஆகாயம் அறியாதுடா
பருந்தோட மோதும் போது
துரும்பாகும் வானம் தான்டா

ஆண் : ஆராஞ்சு ஆராஞ்சு பாரேன்டா
ஏடாண்ட எழுத்தெல்லாம் நீதான்டா

ஆண் : இனமென்ன நிறமென்ன அவனென்ன இவனென்ன
அனைவரும் சமமென வழி செய்ய புறப்படு
உலகுக்கு உரியவன் வியர்வை வெதச்சவன்
இறைவனை விடவும் மேலயின்னு சொல்லிக்கொடு

ஆண் : இனமென்ன நிறமென்ன அவனென்ன இவனென்ன
அனைவரும் சமமென வழி செய்ய புறப்படு
உலகுக்கு உரியவன் வியர்வை வெதச்சவன்
இறைவனை விடவும் மேலயின்னு சொல்லிக்கொடு

ஆண் : மனம் என்றே வென்றேனே
மனம் என்றே வென்றேனே..ஏ …ஏ
மனம் என்றே வென்றேனே..ஏ..ஏ…

ஆண் : ஏ மையால வர்ணம் செஞ்சா வாழ்த்து சொல்லு
ஏ பொய்யால வர்ணம் செஞ்சா எத்தி தள்ளு
ஏ மையால வர்ணம் செஞ்சா வாழ்த்து சொல்லு
ஏ பொய்யால வர்ணம் செஞ்சா எத்தி தள்ளு

ஆண் : எல்லோரும் சமமாக இருந்தா தான் நேர்மை நீதி
இல்லாத சாதிக்கு பகை ஏண்டா முட்டா மூதி

ஆண் : ஏ சுமை சுமந்தவன் பரம்பரையே
தலை விதியொரு புனை கதையே
இமை திறந்திடு எரிமலையே
எழு எழுதிடு விடுதலையே

ஆண் : அரசாங்க மங்குனே
அதிகார கங்கானே
எதிர் கேள்வி கேட்காட்டி
எதிராவ உனக்கே நீ

ஆண் : பல நூறாண்டா உள்ள கோவமடா
தொட்டு பாரேன்டா நா ராவணன் டா
பல நூறாண்டா உள்ள கோவமடா
தொட்டு பார்க்க சொல்லு நா ராவணன் டா

ஆண் : ஹே தகுதியும் திறமையும்
பொறப்புல இருக்குதா
பொடனியில அடிச்சு நீ கலங்கடிடா
அறிஞனா ஞானியா அரக்கனின் இனமென
உருட்டுன உருட்ட நீ புறக்கணிடா

ஆண் : ஏ துண்டான சம்புகர்கள் சொல்லாகு நீ
ஏ ரெண்டான கட்டை விரல் வில்லாகு நீ

ஆண் : மறுபடி சாத்திரம் அது இது என்பவன்
தோல உரிச்சு பறைய அடிடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here