Singer : Sathyaprakash

Music by : Pravin Mani

Male : Kaathadi nee
Un noolum kaatrum naan
Koothadi nee
Nee aadum medai naan

Male : Endrum ennai thediyae
Undhan kaalgal odum
Netru.. indru naalai
Kaalam unnai kondu sella
Dhooram… neram.. illaamal
Nee odi sella

Male : Unnodu kondu vanthadhu
Yethumae illai
Sendraalum kondu sella povathondrum illai
Aanaalum aasai unnai vittu vaikkavillai
Un kal arai naal vaarai nee ooyamalae aadathae
Aadathae aadathae nee yemarathae
Un vaazhvum veezhvum naan seidha jaalangalae
Aadathae…

Male : Nee thurattum aasaigal
Unnai thedi kollum
Nee kaanum …yaavum maayamae
Nee vaazhum… vaazhvum maayamae

Male : Netru indru naalai
Yedhum undhan kaiyil illai
Maarum undhan vaazhkai
Un kaiyil illai

Male : Nee endru nee sollum nee unnil illai
Nee pesum vaarthai kooda un sondham illai
Aanalum thaanmai unnai vittu vaikka villai
Un kal arai naal vaarai nee ooyamalae aadathae
Aadathae aadathae nee yemarathae
Un vaazhvum veezhvum naan seiyum jaalangalae
Aadathae…

Male : Nee kaanum… yaavum maayamae
Nee vaazhum …vaazhvum maayamae

Male : Netru.. indru… naalai
Yedhum undhan kaiyil illai
Maarum undhan vaazhvum
Un kaiyil illai

Male : Nee katti vaitha indha mann maligai
Un moochi kaatril veesum naan endra bodhai
Aanaalum yedhum unnai kaapatravillai
Un kal arai naalilae nee kovam kondae aadathae
Aadathae aadathae nee poradathae
Un vaazhvum veezhvum naan seiyum jaalangalae
Aadathae…

பாடகர் : சத்யப்ரகாஷ்

இசை அமைப்பாளர் : பிரவின் மணி

ஆண் : காத்தாடி நீ
உன் நூலும் காற்றும் நான்
கூத்தாடி நீ
நீ ஆடும் மேடை நான்

ஆண் : என்றும் என்னை தேடியே
உந்தன் கால்கள் ஓடும்
நேற்று… இன்று நாளை
காலம் உன்னை கொண்டு செல்ல
தூரம்… நேரம்… இல்லாமல்
நீ ஓடி செல்ல

ஆண் : உன்னோடு கொண்டு வந்தது
ஏதுமே இல்லை
சென்றாலும் கொண்டு செல்ல போவதொன்றும் இல்லை
ஆனாலும் ஆசை உன்னை விட்டு வைக்கவில்லை
உன் கல்லறை நாள் வரை நீ ஓயாமலே ஆடாதே
ஆடாதே ஆடாதே நீ ஏமாறாதே
உன் வாழ்வும் வீழவும் நான் செய்த ஜாலங்களே
ஆடாதே…

ஆண் : நீ துரத்தும் ஆசைகள்
உன்னை தேடி கொல்லும்
நீ காணும்… யாவும் மாயமே
நீ வாழும்… வாழ்வும் மாயமே

ஆண் : நேற்று இன்று நாளை
ஏதும் உந்தன் கையில் இல்லை
மாறும் உந்தன் வாழ்க்கை
உன் கையில் இல்லை

ஆண் : நீ என்று நீ சொல்லும் நீ உன்னில் இல்லை
நீ பேசும் வார்த்தை கூட உன் சொந்தம் இல்லை
ஆனாலும் தான்மை உன்னை விட்டு வைக்கவில்லை
உன் கல்லறை நாள் வரை நீ ஓயாமலே ஆடாதே
ஆடாதே ஆடாதே நீ ஏமாறாதே
உன் வாழ்வும் வீழ்வும் நான் செய்யும் ஜாலங்களே
ஆடாதே…

ஆண் : நீ காணும்… யாவும் மாயமே
நீ வாழும்… வாழ்வும் மாயமே

ஆண் : நேற்று… இன்று… நாளை
ஏதும் உந்தன் கையில் இல்லை
மாறும் உந்தன் வாழ்வும்
உன் கையில் இல்லை

ஆண் : நீ கட்டி வைத்த இந்த மண் மளிகை
உன் மூச்சி காற்றில் வீசும் நான் என்ற போதை
ஆனாலும் ஏதும் உன்னை காப்பாற்றவில்லை
உன் கல்லறை நாளிலே நீ கோவம் கொண்டே ஆடாதே
ஆடாதே ஆடாதே நீ போராடாதே
உன் வாழ்வும் வீழ்வும் நான் செய்யும் ஜாலங்களே
ஆடாதே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here