Singer : Sachin Warrier

Music by : Sachin Warrier

Lyrics by : Thamarai

Humming : ………….

Male : Naetrum indrum irudhinam
Yen enakku mattum pudhu yugam
Arumbhu malara araikanam
Adhu malarndhadhu endhan pudhu mugam

Male : Thae madhulai idhazgalaal
Thaen vaarthai udhikkiraal
Naan paarthathai paarthumae
Paaradhadhaai nadikkiraal

Male : Indha naadaga arangil
Naatgal nagarudhae
Indha kaaviya kadhaiyil
Kaaichal kanaludhae

Male : Haei kaatrum ivalae
Haei thol siragum ivalae
Haei en vaanam mugil
Mazhai anaithumae ival

Male : Naetrum indrum irudhinam
Yen enakku mattum pudhu yugam
Arumbhu malara araikanam
Adhu malarndhadhu endhan pudhu mugam

Male : Pesa vendi varuvenae odi
Unai parthathum marandhu pogum saedhi
Othigaigal pala veetil seidhum
Avai podhavillai adhu thaanae meedhi

Male : Puriyaadha pala kelvi vandhum
Piriyaadha varam vendi kolven
Ariyaadha vayadhendru solvaai
Adhai naan ezhuthi thaandi selven
Idhu sooriya gandhi poovin idhayamae
Nee pogira dhisaiyil thaanae thirmbhumae

Male : Haei kaatrum ivalae
Haei thol siragum ivalae
Haei en vaanam mugil
Mazhai anaithumae ival

Male : Thookam vandhu iru kannai suzhattum
Un bimbam vandhu idai nindru kedukkum
Puthagangal pala paadal uraikkum
Adhu meendum meendum ival peyarae udhikkum

Male : Palar soozha varum vattam endraal
Unai mattum thaniyaaga parppen
Palar koochal idugindra podhu
Kuralaaga unai mattum ketppen

Male : Dhinam pesida vrendum
Pennae anuumadhi
Unai paarthidum nodigal
Ellam vegumathi

Male : Haei kaatrum ivalae
Haei thol siragum ivalae
Haei en vaanam mugil
Mazhai anaithumae ival

Male : Naetrum indrum irudhinam
Yen enakku mattum pudhu yugam

பாடகர் : சச்சின் வாரியர்

இசை அமைப்பாளர் : சச்சின் வாரியர்

பாடல் ஆசிரியர் : தாமரை

முனகல் : …………..

ஆண் : நேற்றும் இன்றும் இருதினம்
ஏன் எனக்கு மட்டும் புதுயுகம்
அரும்பு மலர அரைக்கணம்
அது மலர்ந்தது எந்தன் புது முகம்

ஆண் : தே மாதுளை இதழ்களால்
தேன் வார்த்தை உதிக்கிறாள்
நான் பார்த்தை பார்த்துமே
பாராததாய் நடிக்கிறாள்

ஆண் : இந்த நாடக அரங்கில்
நாட்கள் நகருதே
இந்தக் காவியக் கதையில்
காய்ச்சல் கனலுதே

ஆண் : ஹேய் காற்றும் இவளே
ஹேய் தோள் சிறகும் இவளே
ஹேய் என் வானம் முகில்
மழை அனைத்துமே இவள்

ஆண் : நேற்றும் இன்றும் இருதினம்
ஏன் எனக்கு மட்டும் புதுயுகம்
அரும்பு மலர அரைக்கணம்
அது மலர்ந்தது எந்தன் புது முகம்

ஆண் : பேச வேண்டி வருவேனே ஓடி
உனை பார்த்ததும் மறந்து போகும் சேதி
ஒத்திகைகள் பல வீட்டில் செய்தும்
அவை போதவில்லை அது தானே மீதி

ஆண் : புரியாத பல கேள்வி வந்தும்
பிரியாத வரம் வேண்டிக் கொள்வேன்
அறியாத வயதென்று சொல்வாய்
அதை நான் எழுதி தாண்டிச் செல்வேன்

ஆண் : இது சூரியகாந்தி பூவின் இதயமே
நீ போகிற திசையில் தானே திரும்புமே

ஆண் : ஹேய் காற்றும் இவளே
ஹேய் தோள் சிறகும் இவளே
ஹேய் என் வானம் முகில்
மழை அனைத்துமே இவள்

ஆண் : தூக்கம் வந்து இரு கண்ணை சுழட்டும்
உன் பிம்பம் வந்து இடை நின்று கெடுக்கும்
புத்தகங்கள் பல பாடல் உரைக்கும்
அது மீண்டும் மீண்டும் இவள் பெயரே உதிக்கும்

ஆண் : பலர் சூழ வரும் கூட்டம் என்றால்
உனை மட்டும் தனியாக பார்ப்பேன்
பலர் கூச்சல் இடுகின்ற போது
குரலாக உனை மட்டும் கேட்பேன்

ஆண் : தினம் பேசிட வேண்டும்
பெண்ணே அனுமதி
உனை பார்த்திடும் நொடிகள்
எல்லாம் வெகுமதி

ஆண் : ஹேய் காற்றும் இவளே
ஹேய் தோள் சிறகும் இவளே
ஹேய் என் வானம் முகில்
மழை அனைத்துமே இவள்

ஆண் : நேற்றும் இன்றும் இருதினம்
ஏன் எனக்கு மட்டும் புதுயுகம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here