Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Nil angae…..
Nil angae nil angae nil angae
Enna un idhayam enna un thiyaagam
Engae selgindraai
Enna un idhayam enna un thiyaagam
Engae selgindraai

Female : Ini aval ullam thudittidum velai
Ingae nirkkindraai…aa…aaa…aaa…aaiii…
Engae selgindraai

Female : Karunaiyudan thaali
Kazhuthai thazhuvi nirkkum
Kaigalil pon valaigal
Kaarigaiyai thazhuvum
Aadai aval azhagai
Anbodu thazhuvi nirkkum
Aadai aval azhagai
Anbodu thazhuvi nirkkum
Arivirundhum unnidathil
Andha karunai siridhum illai
Engae selgindraai

Female : Unbadharkku thandhaalum
Udai uduthi vittaalum
Alli koduthaalum
Archanaigal seidhaalum
Athanaikkum melae
Pathinikku thaevai ondru
Athanaikkum melae
Pathinikku thaevai ondru
Ariyaaiyo… ariyaaiyo padithirundhu
Ariyum ullam unakkillaiyo
Engae selgindraai

Female : Allum pagalum
Arugae thunaiyirundhu
Sollaal udalaal uyiraal suvai koduthu
Sellum varaiyilum serndhirukkum
Perumaiyai thaan
Thiyaagam enbaar thiyaagam enbaar
Maalai mattum sootti vittaal
Thiyaagiyaaga mudiyumaa
Engae selgindraai

Female : Enna un idhayam enna un thiyaagam
Engae selgindraai

Female : Kannizhandha mangaikku
Kanneer perukkeduthaal…
Kana pozhudhil un thiyaagam
Karugi vidum maravaadhae…
Moodi kidakkindra mana kadhavai
Thirandhu vidu…
Thirandhu kidakkindra
Kadhavugalai moodi vidu…

Female : Manam kulira paadi vidu
Mangaikku vaazhvu kodu
Manidha vadivilae
Dheivamaai maari vidu…

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : நில் அங்கே…….
நில் அங்கே நில் அங்கே நில் அங்கே
என்ன உன் இதயம் என்ன உன் தியாகம்
எங்கே செல்கின்றாய்
என்ன உன் இதயம் என்ன உன் தியாகம்
எங்கே செல்கின்றாய்

பெண் : இனி அவள் உள்ளம் துடித்திடும் வேளை
எங்கே நிற்கின்றாய்…..ஆஆ…ஆஅ…ஆஅ…..அஆய்
எங்கே செல்கின்றாய்

பெண் : கருணையுடன் தாலி
கழுத்தை தழுவி நிற்கும்
கைகளில் பொன் வளைகள்
காரிகையைத் தழுவும்
ஆடை அவள் அழகை
அன்போடு தழுவி நிற்கும்
அறிவிருந்தும் உன்னிடத்தில்
அந்தக் கருணை சிறிதும் இல்லை
எங்கே செல்கின்றாய்

பெண் : உண்பதற்கு தந்தாலும்
உடை உடுத்தி விட்டாலும்
அள்ளிக் கொடுத்தாலும்
அர்ச்சனைகள் செய்தாலும்
அத்தனைக்கும் மேலே
பத்தினிக்குத் தேவையொன்று
அறியாயோ……அறியாயோ படித்திருந்தும்
அறியும் உள்ளம் உனக்கில்லையோ
எங்கே செல்கின்றாய்

பெண் : அல்லும் பகலும்
அருகே துணையிருந்து
சொல்லால் உடலால் உயிரால்
சுவை கொடுத்து
செல்லும் வரையிலும் சேர்ந்திருக்கும்
பெருமையைத்தான்
தியாகம் என்பார்
மாலை மட்டும் சூட்டிவிட்டால்
தியாகியாக முடியுமா
எங்கே செல்கின்றாய்

பெண் : என்ன உன் இதயம் என்ன உன் தியாகம்
எங்கே செல்கின்றாய்

பெண் : கண்ணிழந்த மங்கைக்குக்
கண்ணீர் பெருக்கெடுத்தால்…..
கணப் பொழுதில் உன் தியாகம்
கருகி விடும் மறவாதே…..
மூடிக் கிடக்கின்ற மனக் கதவைத்
திறந்து விடு….
திறந்து கிடக்கின்ற
கதவுகளை மூடி விடு….

பெண் : மனங்குளிரப் பாடி விடு
மங்கைக்கு வாழ்வு கொடு
மனித வடிவினிலே
தெய்வமாய் மாறி விடு……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here