Singer : K. S. Chithra

Music by : Deva

Female : Anbae dheivamae
Kanden boomi melae
Oli yetruvom
Pirar vaazhvil naamae
Nilaavae vaa vaa vaa
Nillaamal nee vaa…

Chorus : Hoo oo oo hoo oo oo
Hoo oo oo hoo oo oo

Female : Nilaavae vaa vaa vaa
Nillaamal nee vaa…
Nilaavae vaa vaa vaa
Nillaamal nee vaa…

Female : Malarae un vaasam azhagae
Mazhaiyae un saaral azhagae
Nadhiyae un vegam azhagae
Kadalae un neelam azhagae

Female : Paniyae un kaalam azhagae
Pagalae un kaalai azhagae
Iravae un maalai azhagae
Ulagae en dhesam azhagae

Female : Kavidhai azhagai kalaigal azhagai
Mazhalai azhagai maranthaayae
Manitha manitha vaazhkai muzhuthum
Azhagae azhagae kaanbaayae
Vaazhkai inbamae
Vaazhvom endrumae
Ithu unmaiyae…ae..ae…ae…ae………

Female : Nilaavae vaa vaa vaa
Nillaamal nee vaa…
Nilaavae vaa vaa vaa
Nillaamal nee vaa…

Chorus : Hoyeah…hoyeah….

Chorus : Hoo oo oo hoo oo oo
Hoo oo oo hoo oo oo

Female : Mugamaae un kangal azhagae
Vizhiyae un paarvai azhagae
Idhazhae un pechu azhagae
Mozhiyae un vaarthai azhagae

Female : Manamae un ennam azhagae
Ninaivae un nermai azhagae
Uyirae un moochu azhagae
Manitha un dhegam azhagae

Female : Sirippum azhagae azhugai azhagae
Manitha vaazhkai ithu thaanae
Kanneer vittu paalai arunthum
Annaparavai neethaanae
Vaazhkai inbamae
Vaazhvom endrumae
Madhi vellumae….ae…ae…ae…ae…

Female & Chorus : Nilaavae vaa vaa vaa
Nillaamal nee vaa…
Nilaavae vaa vaa vaa
Nillaamal nee vaa…

Chorus : Hoo oo oo hoo oo oo
Hoo oo oo hoo oo oo
Hoo oo oo hoo oo oo
Hoo oo oo hoo oo oo

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : அன்பே தெய்வமே
கண்டேன் பூமி மேலே
ஒளி ஏற்றுவோம்
பிறர் வாழ்வில் நாமே
நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா…..

குழு : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

பெண் : நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா…..
நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா…..

பெண் : மலரே உன் வாசம் அழகே
மழையே உன் சாரல் அழகே
நதியே உன் வேகம் அழகே…
கடலே உன் நீலம் அழகே

பெண் : பனியே உன் காலம் அழகே
பகலே உன் காலை அழகே
இரவே உன் மாலை அழகே….
உலகே என் தேசம் அழகே

பெண் : கவிதை அழகை கலைகள் அழகை
மழலை அழகை மறந்தாயே
மனிதா மனிதா வாழ்க்கை முழுதும்
அழகே அழகே காண்பாயே
வாழ்க்கை இன்பமே
வாழ்வோம் என்றுமே
இது உண்மையே….ஏ….ஏ….ஏ….ஏ…..

பெண் : நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா…..
நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா…..

குழு : ஹோயெஹ்…..ஹோயெஹ்…..

குழு : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

பெண் : முகமே உன் கண்கள் அழகே
விழியே உன் பார்வை அழகே
இதழே உன் பேச்சு அழகே
மொழியே உன் வார்த்தை அழகே

பெண் : மனமே உன் எண்ணம் அழகே
நினைவே உன் நேர்மை அழகே
உயிரே உன் மூச்சு அழகே
மனிதா உன் தேகம் அழகே

பெண் : சிரிப்பும் அழகே அழுகை அழகே
மனித வாழ்க்கை இது தானே
கண்ணீர் விட்டு பாலை அருந்தும்
அன்னபறவை நீதானே
வாழ்க்கை இன்பமே
வாழ்வோம் என்றுமே
மதி வெல்லுமே…..ஏ….ஏ….ஏ….ஏ…..

பெண் மற்றும் குழு : நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா…..
நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா…..

குழு : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here