Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Nilavu vanthu vaanaththaiyae
Thirudi kondathu
Nilavu vanthu vaanaththaiyae
Thirudi kondathu
Neela kannum unnazhagai
Thirudi kondathu

Female : Nilavu vanthu vaanaththaiyae
Thirudi kondathu thirudi kondathu

Male : Manathu konjam urangum pothu
Kanavu vanthathu
Manathu konjam urangum pothu
Kanavu vanthathu
Adhu malarntha pothu unnai pattri
Ninaivu vanthathu….
Adhu malarntha pothu unnai pattri
Ninaivu vanthathu….

Male : Manathu konjam urangum pothu
Kanavu vanthathu
Adhu malarntha pothu unnai pattri
Ninaivu vanthathu….ninaivu vanthathu….

Female : Minnaamal vantha megam
Kadalai thirudi kondathu
Megam thantha mazhaiyinaiyo
Bhoomi thirudi kondathu

Female : Minnaamal vantha megam
Kadalai thirudi kondathu
Megam thantha mazhaiyinaiyo
Bhoomi thirudi kondathu

Male : Pennaaga pirantha pergal
Ullam thirudi kolvathu
Pennaaga pirantha pergal
Ullam thirudi kolvathu
Innaalil mattum alla
Ennaalum ullathu

Female : Nilavu vanthu vaanaththaiyae
Thirudi kondathu thirudi kondathu

Female : Kaakkai pol iruntha ondru
Kuyilai pola vanthathu
Kannaalan thalaiyil pachaikili
Ennai theadi vanthathu

Female : Nilavu vanthu vaanaththaiyae
Thirudi kondathu thirudi kondathu

Female : Inneram sonna kadhai
Enakku mattum therinthathu
Ippothu nadappathuthaan
Unakku kooda purinthathu

Male : Kannaalae solvathuthaan
Kadhalilae puthiyathu
Kadal aazham siriyathammaa
Pen manathu periyathu

Female : Nilavu vanthu vaanaththaiyae
Thirudi kondathu
Neela kannum unnazhagai
Thirudi kondathu

Female : Nilavu vanthu vaanaththaiyae
Thirudi kondathu….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நிலவு வந்து வானத்தையே
திருடிக் கொண்டது
நிலவு வந்து வானத்தையே
திருடிக் கொண்டது
நீலக் கண்ணும் உன்னழகை
திருடிக் கொண்டது

பெண் : நிலவு வந்து வானத்தையே
திருடிக் கொண்டது திருடிக் கொண்டது

ஆண் : மனது கொஞ்சம் உறங்கும் போது
கனவு வந்தது
மனது கொஞ்சம் உறங்கும் போது
கனவு வந்தது
அது மலர்ந்த போது உன்னை பற்றி
நினைவு வந்தது………
அது மலர்ந்த போது உன்னை பற்றி
நினைவு வந்தது………

ஆண் : மனது கொஞ்சம் உறங்கும் போது
கனவு வந்தது
அது மலர்ந்த போது உன்னை பற்றி
நினைவு வந்தது………நினைவு வந்தது………

பெண் : மின்னாமல் வந்த மேகம்
கடலைத் திருடிக் கொண்டது
மேகம் தந்த மழையினையோ
பூமி திருடி கொண்டது

பெண் : மின்னாமல் வந்த மேகம்
கடலைத் திருடிக் கொண்டது
மேகம் தந்த மழையினையோ
பூமி திருடி கொண்டது

ஆண் : பெண்ணாக பிறந்த பேர்கள்
உள்ளம் திருடிக் கொள்வது
பெண்ணாக பிறந்த பேர்கள்
உள்ளம் திருடிக் கொள்வது
இந்நாளில் மட்டும் அல்ல
எந்நாளூம் உள்ளது

பெண் : நிலவு வந்து வானத்தையே
திருடிக் கொண்டது திருடிக் கொண்டது

பெண் : காக்கை போல் இருந்த ஒன்று
குயிலைப் போல வந்தது
கண்ணாளன் தலையில் ஏறிக்
கூடு கட்டி கொண்டது

ஆண் : பொல்லாத உவமை உன்னை
காக்கை என்று சொல்வது
என் பொன்னான பச்சைக் கிளி
என்னைத் தேடி வந்தது

பெண் : நிலவு வந்து வானத்தையே
திருடிக் கொண்டது திருடிக் கொண்டது

பெண் : இந்நேரம் சொன்ன கதை
எனக்கு மட்டும் தெரிந்தது
இப்போது நடப்பது தான்
உனக்கு கூட புரிந்தது

ஆண் : கண்ணாலே சொல்வது தான்
காதலிலே புதியது
கடல் ஆழம் சிறியதம்மா
பெண் மனது பெரியது

பெண் : நிலவு வந்து வானத்தையே
திருடிக் கொண்டது
நீலக் கண்ணும் உன்னழகை
திருடிக் கொண்டது

பெண் : நிலவு வந்து வானத்தையே
திருடிக் கொண்டது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here